Search This Blog

Showing posts with label கவிதைகள். Show all posts
Showing posts with label கவிதைகள். Show all posts

Friday, September 03, 2010

இதோ வருகிறான் இறைவன்...


என் படைப்பில் நீ
அதிசயமானவன்
என்றான் இறைவன்!!

ஏன் என்றேன்...

நீ நடந்தால் உன்னோடு
இரு நிழல்கள்
வருகின்றனவே!
என்றான் அவன்.

இல்லை இறைவா
உன் படைப்பில்
என்னவள்தான் அதிசயம்
என்றேன் நான்!

ஏன் என்றான்...

நிஜமாய் அவள்
அங்கிருக்க..
அவள் நிழல்
எப்போதும் என்னைச்
சுற்றுகின்றதே!!!
என்றேன்....

இதோ வருகிறான்
இறைவன் உனைக்கான
ஆவலுடன்!!!


பிரியமுடன் 
ரமேஷ் K

Friday, August 06, 2010

கண்களின் மொழி






இன்று, முதன் முதலாய்
வார்த்தையில்லா
கவிதை படித்தேன்...
என்னவளின் சினுங்கல்கள்!

அவளைப் பார்க்கும் முன்வரை
என் இதயத்துடிப்பை
நான் உணர்ந்ததில்லை...

இப்போது என் நெஞ்சில்
கை வைத்தால்
உணர்கிறேன்..
அவளது இதயத்துடிப்பை!

படபடக்கும் அவள் கண்கள்
பேசும் மொழி புரிந்தால்
எழுதிவிடுவேன்..
அவளுக்கான கவிதையை
அந்த மொழியிலேயே!