மேல்த்தட்டு இளைஞர்கள் அதிகப்படியான பணத்தினால் எப்படி சீரழிகிறார்கள், கீழ்த்தட்டு மக்கள் பணத்துக்காக எப்படி சீரழிகிறார்கள், நடுத்தர மக்கள் எப்படி மேல்த்தட்டு மக்களின் தூண்டிலில் சிக்கி சீரழிகிறார்கள், அரசியல்வாதிகள் அதிகாரிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் விதம், தொழிலதிபர்கள் அரசியல்வாதிகளை நடத்தும் விதம், இன்றைய மருத்துவர்கள் நோயாளிகளின் மீது கொண்டிருக்கும் கவனம் இதெல்லாம் சேர்ந்துதான் ஈசன்.. இதை எவ்லோ நல்லா சொல்லியிருக்கலாம்.. ஆனா ஆரம்பித்துல பப்புக்குள்ள போன படம்.... அப்பப்பா... படிங்க மேல...
தண்ணி கிளாசுக்குள் சரக்கு சலம்புவதாகக் காட்டப்படும் கிராபிக்ஸ் பின்னணியில் டைட்டிலே அசத்துகிறது. எடுத்த எடுப்பிலேயே படம் விறுவிறுப்பாகத்தான் தொடங்குகிறது. இடைவேளை வரை அரசியல்வாதி, பப், சமுத்திரக்கனி.. இதேதான் மாற்றி மாற்றி வந்து சில நேரம் பரவால்லயே எனத் தோன்ற வைக்கும் படியான காட்சியமைப்பு.. பல நேரம் அடப்போப்பா எப்ப பாத்தாலும் பப்புக்கே போய்க்கிட்டு எனக் குடிகாரர்களே அலுத்துக்கொள்ளும் அளவிற்கு பப்பிற்குள்ளேயே "குடி"கொண்டிருக்கிறார்கள்... அடப்போங்கப்பா....
காவல்துறை அதிகாரியாக சமுத்திரக்கனி. அந்த பாத்திரத்தித்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். அளவான நடிப்பில் அசத்துகிறார். அரசியல்வாதியாக வந்து போகும் அழகப்பன். அந்த பாத்திரத்திற்கு எந்த எக்ஸ்பிரசனும் தேவையில்லை என்பதால் ஓகே. மற்றபடி வைபவ், அபிநயா, புதுசா வர்ற பல பெண்கள் எல்லாம்... உண்மையில் ரொம்ப பாவம்..
குடி கூத்து என்றே இருக்கும் அரசியல்வாதியின் மகனான வைபவ் இன்னொரு குடிகாரியைப் பப்பில் பார்த்தவுடன் காதல் கொள்கிறார். ஆனால் அவள் மறுத்துவிடுகிறாள். பிறகு அவள் வேறொருவனுடன் பப்பில் ஆடிக்கொண்டிருக்கும் போது போலீஸ் பிடித்துக்கொண்டு போகிறது. அந்தக் குடிகாரியின் தந்தை நான்கு மாநிலங்களில் கொடிகட்டிப் பறக்கும் பெரிய பிசினஸ் மேன்... ஆனால் போலிஸ் ஸ்டேசனில் இருக்கும் அந்த நேரத்தில் அந்தக் குடிகாரிக்கு அது மறந்திடுச்சு போல... நம்ம வைபவ்தான் அவரது அரசியல் பலத்தைப் பயன்படுத்தி அந்தப் பொண்ணை போலீஸ் ஸ்டேசன் வந்து கூட்டிக்கிட்டு போறார். உடனே அந்தப் பொண்ணு அவரை காதலிக்க ஆரம்பித்து விடுகிறது.. அப்புறம் அரசியல்வாதிக்கும் அந்த பிசினஸ் மேனுக்கும் இடையே நடக்கும் சில மொக்கையான செட்டில்மெண்ட் மற்றும் அந்த குடிகாரியின் கையறுப்பு நாடகத்துக்குப் பின்னர் கல்யாணம் முடிவாகிறது. அதையும் நம்ம வைபவ் வேற ஒரு பொண்ணு கூட குஜால் பண்ணி கொண்டாடலாம்னு கிளம்பிக் காணாமப் போயிடறார்.. அவரை ஒரு உருவம் வந்து மண்டைலயே அடிக்குது.. அது யாருன்னு பாத்தா.. அதுதான் ஈசன்னு அப்பதான் டைட்டிலே போடறாங்க... இன்டர்வெல் விட்டுடறாங்க..........
அப்புறம்.. சமுத்திரக்கனி வைபவைத் தேடிக்கண்டு பிடித்தாராங்கறதுதான் கதை... செகண்ட் ஆஃப்ல ஒரு ஃபிளாஸ்பேக் வருது... அந்த ஃபிளாஸ்பேக்கோட ஆரம்பம்லாம் என்னவோ "கண்ணில் அன்பை" என்று ஒரு மெலடியுடன் ஆரம்பிக்கிறது.. அந்தப்பாட்டு நல்லாருக்கு... அதுக்கப்புறம்.. ஃபிளாஸ்பேக் எப்படா முடியும்னு ஆயிடுச்சு... அப்பாடா ஃபிளாஸ்பேக் முடிஞ்சது அப்படின்னு நினைச்சா.. அப்புறம் அதுக்கப்புறம் வர்ற காட்சிகளைப் பார்த்தா.. படம் எப்படா முடியும்னு ஆயிடுச்சு... ஒரு 15 வயசுப் பையனை வெச்சு இவ்லோ வன்முறையைக் கையாண்டதுக்காகவே இந்தப் படத்தை சென்சார்ல தடை பன்னிருந்தாலும் அது தகும்.. அவ்லோ வன்முறை... அபிநயா ரொம்ப பாவம்... சசிகுமார் மேல இருக்கற நம்பிக்கைல இந்தப் படத்துல நடிக்க ஒத்துக்கிட்டிருக்காங்க.. நல்ல அழகு, நல்லா நடிக்கத் தெரிஞ்ச நடிகையாவும் இருக்காங்க.. ஆனா அவங்களை சசி யூஸ் பண்ணிருக்கற விதம்.. கண்டிப்பா அபிநயாவோட ஃபேமிலேயே ரொம்ப வருத்தப்படும்.... சாரி சசி. அவங்களும் இப்படி அவரை பிளைண்டா நம்பி அந்த கேரக்டர்ல நடிக்காம இருந்திருக்கலாம்......
இளைஞர்கள்னா இப்படித்தான் இருப்பாங்க அப்படிங்கற சசியோட பார்வை ரொம்ப மோசமா இருக்கு.... அது படத்துல சீனுக்கு சீன் வெளிப்படுது....
சசிக்குமார் அப்படிங்கற பேருக்காகத்தான் இந்தப் படம் பார்க்க எல்லோரும் வந்திருப்பாங்க.. கண்டிப்பா ஏமாத்திட்டார்.. சசி.... இந்தக் கதைக்கான "சீசன்" முடிஞ்சு பல வருசம் ஆயிடுச்சே சசி... இந்தக் கதையவே மாத்தி மாத்தி எடுத்திட்டிருந்த எஸ்.ஏ.சந்திரசேகரே... அதை விட்டுட்டு காதல் கதைக்கு போய் ரொம்ப வருசம் ஆச்சு... நீங்க மறுபடியும்... ஒரு குட்டிப்பையனை வெச்சி கிளம்பிருக்கீங்க.... ரொம்ப கான்ஃபிடன்ட்தான் உங்களுக்கு....
படத்திலே பாராட்ட வேண்டிய விசயம்னா பின்னணி இசை, கண்ணில் அன்பை பாடல், அப்புறம்.. அங்கங்க நல்லா இருக்கற கேமிரா கோணங்கள்...... மத்தபடி எல்லாமே கோணல்கள்.....
ஈசன் - பாலமுருகன்
விமர்சனம் நல்லாயிருக்குங்க ரமேஷ்.. :-)
ReplyDeleteநல்ல விமர்சனம்!
ReplyDeleteசசி ஏமாத்திட்டாரு!:-)
@எஸ்.கே
ReplyDelete//நல்ல விமர்சனம்!
சசி ஏமாத்திட்டாரு!:-)//
வாங்க எஸ்.கே... நன்றிங்க...
படத்திலே பாராட்ட வேண்டிய விசயம்னா பின்னணி இசை, கண்ணில் அன்பை பாடல், அப்புறம்.. அங்கங்க நல்லா இருக்கற கேமிரா கோணங்கள்...... மத்தபடி எல்லாமே கோணல்கள்.....
ReplyDelete...To the point! Good review. :-)
நன்றி நண்பா.. பணத்தை மிச்சப்படுத்தியதற்கு...
ReplyDeleteசூப்பர் review பாஸ்.... படத்தையே பாத்த feel....
ReplyDeleteசூப்பர் விமர்சனம். பாவம் சசி இல்லை. அவரை நம்பி ஹீரோ யாருன்னே தெரியாத படத்துக்கு போன நாமதான்.
ReplyDeleteஇன்னும் படம் பாக்கல பங்கு. பாத்துட்டு விமர்சனம் படிக்கிறேன்.
ReplyDeleteஈசன் ரொம்ப நம்பினேன் . நீங்க சொல்லறத பாத்தா படம் ஓடுகிற தியேட்டர் பக்கமே போகவேணாம்ங்கிரமாதிரில இருக்கு
ReplyDeleteநல்ல விமர்சனம் ரமேஷ்
ReplyDeleteஆஹா..நீங்களுமா..நாம பட்ட கஷ்டத்தை அடுத்தவங்களும் பட்டாங்கன்னு கேட்கும்போது என்னா ஒரு சந்தோசம்!!
ReplyDelete---செங்கோவி
ஈசன் - விமர்சனம்
உள்ளேன் அய்யா
ReplyDeleteசுப்பிரமணிய(புறம்)னுக்கு அப்பன் ஈசன்... http://theskystudios.blogspot.com/2010/12/english-easan.html
ReplyDeleteஆஹா! ரொம்ப எதிர்பார்த்திருந்தேன் இந்த படத்தை :(
ReplyDeleteரைட்டு டிவில பார்த்துக்கலாம் ;)
அசத்தலான விமர்சனம்
ReplyDelete@சித்ரா
ReplyDelete//
...To the point! Good review. :-)//
Thanks Chitra
@வெறும்பய
ReplyDeleteவாங்க ஜெயந்த்
//நன்றி நண்பா.. பணத்தை மிச்சப்படுத்தியதற்கு...//
:-)
@முத்துசிவா
//சூப்பர் review பாஸ்.... படத்தையே பாத்த feel....//
அடடா... அவ்வளவு கொடுமையாவா இருக்கு என்னோட ரிவ்யூ..
@ரமேஷ் (சிரிப்பு போலீஸ்)
ReplyDelete//சூப்பர் விமர்சனம். பாவம் சசி இல்லை. அவரை நம்பி ஹீரோ யாருன்னே தெரியாத படத்துக்கு போன நாமதான்//
உண்மைதான் நண்பா...
@karthikkumar
//இன்னும் படம் பாக்கல பங்கு. பாத்துட்டு விமர்சனம் படிக்கிறேன்.//
தாராளமா.. பங்கு... விதி வலியது....
@நா.மணிவண்ணன்
ReplyDelete//ஈசன் ரொம்ப நம்பினேன் . நீங்க சொல்லறத பாத்தா படம் ஓடுகிற தியேட்டர் பக்கமே போகவேணாம்ங்கிரமாதிரில இருக்கு//
ஆமாம்ங்க... நானும்... ஒரே ரணகளம்
@இரவு வானம்
நன்றிங்க...
@ செங்கொவி
சேம் பிளட் லாஸ் (கொஞ்சம் ஓவரா)
@அருண்
ReplyDelete//உள்ளேன் அய்யா//
என்னது இது...
@ஆகாயமனிதன்
வாங்க...
@பாலாஜி சரவணா
//ரைட்டு டிவில பார்த்துக்கலாம் ;)//
ரைட்டு... நடுவுல நடுவுல போடுவாங்களே அந்த விளம்பரத்தை மட்டும் பாத்துட்டு எஸ் ஆயிடுங்க....
@டிலீப்
//அசத்தலான விமர்சனம்//
நன்றி நண்பா...
படம் நல்லா இல்லை என்று சொன்ன உங்க விமர்சனம், நல்லா இருக்கு பாஸ்!!
ReplyDeleteநல்ல வேளை! தப்பிச்சோம்!
ReplyDeleteநல்ல விமர்சனம்...
ReplyDeleteஅப்போ அவ்வளவுதானா? நம்பி இருந்தேன்!
ReplyDeleteஅரைச்ச மாவை அரைக்க வேண்டாம்... ஈசன் என சொல்லிருக்கீங்க. சசி கேட்டுக்கோங்க. பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்
ReplyDeleteஇதுவும் ஒரு பொது சேவைதான். பணம் மிச்சம்.
ReplyDeleteவிமர்சனம் அருமை. வாழ்த்துகள்
ReplyDeleteசசி குமார் சந்திக்கும் முதல் தோல்வி ஆக இந்த படம் இருக்க கூடும்
ReplyDeleteநல்ல விமர்சனம்.
ReplyDeleteஅங்கங்க நல்லா இருக்கற கேமிரா கோணங்கள்...... மத்தபடி எல்லாமே கோணல்கள்.....
வார்த்தை ஜாலத்தை ரசித்தேன்
நல்லாவே கதையை அலசி இருக்கீங்க. இப்படி புதுப் படமா கதை சொன்னா எங்களுக்கு காசாவது மிச்சமாகும். வாழ்க உங்கள் தொண்டு.
ReplyDeleteIts really inspirational story. I just love this kind of film. Thanks for giving review about this film.
ReplyDeleteWeb Design Qatar|Website Design Qatar