Search This Blog

Friday, September 03, 2010

இதோ வருகிறான் இறைவன்...


என் படைப்பில் நீ
அதிசயமானவன்
என்றான் இறைவன்!!

ஏன் என்றேன்...

நீ நடந்தால் உன்னோடு
இரு நிழல்கள்
வருகின்றனவே!
என்றான் அவன்.

இல்லை இறைவா
உன் படைப்பில்
என்னவள்தான் அதிசயம்
என்றேன் நான்!

ஏன் என்றான்...

நிஜமாய் அவள்
அங்கிருக்க..
அவள் நிழல்
எப்போதும் என்னைச்
சுற்றுகின்றதே!!!
என்றேன்....

இதோ வருகிறான்
இறைவன் உனைக்கான
ஆவலுடன்!!!


பிரியமுடன் 
ரமேஷ் K

15 comments:

  1. அடேங்கப்பா.....!!! :-)

    ReplyDelete
  2. இதமான கவிதை :)

    ReplyDelete
  3. பாஸ் நாங்க வரலாமா அவங்கள பார்க்க...

    ReplyDelete
  4. ////நிஜமாய் அவள்
    அங்கிருக்க..
    அவள் நிழல்
    எப்போதும் என்னைச்
    சுற்றுகின்றதே!!!
    என்றேன்....///

    பட்டைய கிளப்பிருக்கீங்க ..
    எங்கிருந்து கிளம்புறீங்க இப்படியெலாம் ...?
    எனக்கு மட்டும் கவிதையே வரமாட்டேங்குது ..?
    கவிதை வரதுக்கு ஏதாவது மருந்து இருந்தா கொடுங்களேன் ..

    ReplyDelete
  5. என்னவள் தான் அதிசயம் என்று சொல்லும் இடம்..காதலின் உச்சம்......ஜொலிக்கிறது.

    ReplyDelete
  6. நன்றிங்க சித்ரா...

    நன்றி பாலாஜி சரவணா

    @வெறும்பய
    கண்டிப்பா வாங்க..வர 12 ஆம் தேதி எங்க ரெண்டு பேத்துக்கும் கல்யாணம்.....

    நன்றி ரமேஷ், அருண்.

    *ப. செல்வக்குமார்

    கவிதை எழுதறதுக்கு மருந்து தேவையில்லைங்க செல்வக்குமார்....ஒரு மாதிரி வியாதிதான் வரனும்....:D
    பாராட்டுக்கு ரொம்ப நன்றிங்க...சந்தோசமா இருக்கு....

    ரொம்ப நன்றிங்க தேவா, அன்பரசன்..

    ReplyDelete
  7. அட அட , இப்போ கவிதை பக்கமும் பட்டைய கிளப்புறீங்க ...கிளப்புங்க கிளப்புங்க வாழ்த்துக்கள்

    ReplyDelete
  8. அரும்மை நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது. நன்றி தொடர்கிறேன்

    ReplyDelete
  9. அருமை நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் நன்றி தொடர்கிறேன்

    ReplyDelete
  10. அருமை நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள் நன்றி தொடர்கிறேன்

    ReplyDelete
  11. அருமை நண்பரே கவிதை நன்றாக இருக்கிறது, தொடர்ந்து எழுதுங்கள் நன்றி தொடர்கிறேன்.

    ReplyDelete
  12. வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றிங்க கமல்

    ReplyDelete