Search This Blog

Tuesday, November 23, 2010

கார்ப்பரேட் இந்தியா..!

 மத்தியில் திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக குடும்பத்தினருக்கு பதவி கிடைக்கக் கூடாது (காங்கிரஸ் கோஷ்டிகளைவிட திமுகவோட குடும்ப கோஷ்டி இப்ப அதிகமாயிடுச்சே) என்பதற்காக அவர்கள் செய்த தகிடு தித்தங்கள். ஆடியோ டேப்பாக இப்போது வெளிவந்திருக்கிறது. அதனை தெளிவாக தமிழ்படுத்தி உண்மைத்தமிழன் - சரவணன் இந்த இணைப்பில் http://truetamilans.blogspot.com/2010/11/blog-post_9136.html எழுதியிருக்கிறார். கொஞ்சம் பெரிய பதிவுதான். ஆனால் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல் அதனால் கொஞ்சம் பொறுமையாக முழுதாகப் படியுங்கள்.
 கீழே நான் குறிப்பிட்டிருக்கும் விசயங்கள் உங்களுக்குத் தெளிவாகப் புரியும்.

1. திமுகவுக்குள் இருக்கும் குடும்பச் சண்டை.
2. குடும்பத்தில் அனைவரும் சென்று கும்மியடிக்கும் அளவு செல்வாக்கு பெற்ற முதல்வர். குடும்ப நலனிற்காக மட்டுமே மத்திய அரசை பயன்படுத்துவது.
3. மத்தியில் உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் நிறுவனத் தலைவர்களே.
4. ஊடகங்கள் (செய்தித்தாள், தொலைக்காட்சி) கைப்பாவையாக செயல்படுவது.
5. இதெல்லாம் பெரிய விசயமே இல்லை என நாம் நினைப்பது.
 

தொலைத் தொடர்புத் துறையில் மொபைல் பேசுவதிலும், இணைய இணைப்புப் பெறுவதிலும் நாம் படும் அல்லல்கள், அடையும் பண இழப்புகள் கொஞ்ச நஞ்சமல்ல. ஆனால் இந்திய அரசாங்கமே அவர்கள் கையில்.. நாம் ஒன்றும் செய்ய முடியாது.. என்று நன்கு தெரிந்ததால்.. நாம் தெரிந்தே ஏமாற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நம் இந்தியா மாதிரி ஒரு ஜனநாயக நாடு உலகில் இல்லை என்று நாம் பெருமை கொள்கிறோம். ஆனால் நம் இந்தியா ஜனநாயக நாடு அல்ல. இந்தியாவை உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் முதலாளிகள்தான்.

நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நிச்சயம் அடியில் இருக்கும் கண்ணி வெடி வெடிக்கும் அப்போது அழுவோம். அதுவரை....

ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..


39 comments:

  1. எங்களுக்கு இதலாம் ஒரு மேட்டரே கிடையாதுங்க .எங்க ஊருல ஓட்டுக்கு ஒழுங்கா காசு குடுக்கலைன்னு அரசியல் வாதி சட்டைய புடுச்சவீங்க நாங்க .அவுங்களோட அங்காளி பங்காளி சண்டைக்கு மூணு பேத்தகொளுத்தனத கூட மறந்துட்டு கண்கள் பணித்தது இதயம் இனித்தத பாத்து கண் கலங்கீனவீங்க நாங்க . இப்ப அடிச்ச பணம் எதுக்கு எல்லாம் எங்களுக்கு தான் .பணத்த வாங்கீட்டு ஓட்ட போடுறத விட்டு புட்டு பதிவ போட்டுக்கிட்டு இருக்கீங்க .போங்கண்ணே போய் பொழப்ப பாருங்க .இவிங்க எப்பவுமே இப்படிதான்

    ReplyDelete
  2. @நா.மணிவண்ணன்

    சரிதான்.. நீங்க சொல்றது..

    ReplyDelete
  3. ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே

    ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று..//

    நெத்தி அடி

    ReplyDelete
  4. சாதாரணமாக முடியலியே... தண்ணிப் போட்டுதான் ஆடனும்... நம் இயலாமையும் மறக்க.

    ReplyDelete
  5. @அருண்

    வாங்க அருண்

    @யுவா

    ஆமாங்க யுவா..

    ReplyDelete
  6. வரும் தேர்தலிலாவது நல்ல முடிவு எடுப்போம்

    ReplyDelete
  7. அருமையான விளக்கம் நண்பரே தொடருங்கள் உங்கள் பணியை

    ReplyDelete
  8. சாதாரண பொதுமக்களான நாம் புலம்புவதை தவிர என்ன செய்ய!

    ReplyDelete
  9. //// ஆனால் நம் இந்தியா ஜனநாயக நாடு அல்ல. இந்தியாவை உண்மையில் ஆளுவது கார்ப்பரேட் முதலாளிகள்தான்.
    ///

    உண்மை தான் அண்ணா ., இதெயெல்லாம் என்ன செய்வது . நானும் அந்தப் பதிவப் படிச்சு பாக்குறேன் ..!!

    ReplyDelete
  10. அவசியமான பதிவு...

    ReplyDelete
  11. //Balajisaravana said...

    வரும் தேர்தலிலாவது நல்ல முடிவு எடுப்போம்

    நல்ல முடிவு எங்கங்க எடுக்கறது... இந்த ரெண்டு விரல்ல ஒன்னத் தொடுன்னு ஒரே ஒரு விரலதான காட்றாங்க..

    ReplyDelete
  12. @யாதவன்

    நன்றிங்க யாதவன்

    @எஸ்.கே

    ஆமாம்.. புலம்பிவிட்டு.. மறப்பதுதானே நம் பண்பாடு...

    @ப.செல்வக்குமார்

    கண்டிப்பா படிங்க செல்வா..

    @ஹரிஸ்

    ஆமாங்க ஹரிஸ்

    ReplyDelete
  13. //நல்ல முடிவு எங்கங்க எடுக்கறது... இந்த ரெண்டு விரல்ல ஒன்னத் தொடுன்னு ஒரே ஒரு விரலதான காட்றாங்க.//

    இதுதான் இங்க பிரச்சனையே........

    ReplyDelete
  14. அருமையான பதிவு நண்பரே. தொடரட்டும் உங்களின் பணி.

    ReplyDelete
  15. @ஜீவன்பென்னி

    ஆமாங்க..

    @Lakshmi

    நன்றிங்க..

    ReplyDelete
  16. இனிமேல் உலகில் ஜனநாயக நாடு என்று ஒரு நாடும் இருக்கப் போவதில்லை.


    //கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். //

    இது உண்மை தான். என்றாவது ஒருநாள் இப்போது நாம் செல்போன் இணைப்பு, கூடுதல் கட்டணங்கள் போன்றவற்றால் படும் கஷ்டங்கள் சாப்பாட்டுக்கும் வரும் அப்போது தெரியும்.

    ReplyDelete
  17. அருமையான பகிர்வு நண்பா வாழ்த்துக்கள்

    ReplyDelete
  18. //நாகராஜசோழன் MA

    வாங்க சோழரே.. நீங்க ஆட்சிய கைப்பற்றி நல்லாட்சி தாங்களேன் தயவு செய்து...

    ReplyDelete
  19. //எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்//

    Real

    ReplyDelete
  20. @டிலீப்

    நன்றிங்க..

    ReplyDelete
  21. சிறப்பான ஒரு பதிவு. வாழ்த்துக்கள். தொடருங்கள்.

    ReplyDelete
  22. @கக்கு-மாணிக்கம்

    நன்றிங்க

    ReplyDelete
  23. @ஜெயந்த்

    நன்றி நண்பா..

    ReplyDelete
  24. இயலாமையும் கோபமும் ஒருங்கே வெளிப்படுகிறது உங்கள் பதிவில். உங்கள் கருத்துகளை வழிமொழிகிறேன்.

    ReplyDelete
  25. @சாதாரணமானவள்

    ஆமாங்க.. நம்ம கைல எதுவுமே இல்லையே...

    ReplyDelete
  26. அப்படிப் போடுய்யா அருவாள.....!

    ReplyDelete
  27. நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். ///மிக சரி பங்கு

    ReplyDelete
  28. @ பன்னிக்குட்டி ராம்சாமி

    வாங்க ராம்சாமி..

    @ karthikkumar

    வாங்க பங்கு..

    ReplyDelete
  29. @ரமேஷ்

    அப்படிங்களா சரிங்க...

    ReplyDelete
  30. //padichitten. konjam busy//
    இலவச தொலைக்காட்சி வாங்க போகிறார் :)

    நல்லா பகிர்வு..

    ReplyDelete
  31. //நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம். ஒரு நாள் நிச்சயம் அடியில் இருக்கும் கண்ணி வெடி வெடிக்கும் அப்போது அழுவோம். //

    நிச்சயம்

    சமூகத்தின் மீதும் அரசியல்வாதிகளின் மீதான கோபமும் பட்டாசாய் வெடித்திருக்கிறது

    ஸ்பெக்ட்ரம் விவகாரம் வரும் தேர்தலின் முடிவை 50% நிர்ணயித்துவிட்டது

    ReplyDelete
  32. நமக்கு எதுவும் முக்கியமில்லை. நமக்கு இலவசமாக எதாவது பொருள் கிடைத்தால் சரி. எவன் எக்கேடு கெட்டா நமக்கென்ன நம்ம தலைல குண்டு விழலை என்று கண்ணி வெடியின் மீது அமர்ந்து கொண்டு நாம் பாதுகாப்பாக இருப்பதாக உணர்ந்து கொண்டிருக்கிறோம்


    ...... நல்ல அலசல்.

    ReplyDelete
  33. "சாதாரணமாக முடியலியே... தண்ணிப் போட்டுதான் ஆடனும்... நம் இயலாமையும் மறக்க".
    அதுக்குதான அரசாங்கமே தொறந்து வச்சிருக்கு.

    ReplyDelete
  34. ஜமீன் சாமி - ஒன்பது கோழி போன்ற திரைப்பட நட்சத்திரங்களின் காதல பத்தி ஏதும் எழுதறத விட்டுப்புட்டு இதென்ன சின்னப்புள்ள தனமா.நாலு பேரு வந்து போற எடமுல்லா.

    ReplyDelete
  35. ஜனநாயக நாடு அப்படின்னா?
    நல்ல விழிப்புணர்வுப் பதிவு.

    ReplyDelete
  36. :) perusa oruuu mudivum yedukka mattom!!

    intha thirudan illana innoru thirudan..

    ReplyDelete