Search This Blog

Wednesday, December 08, 2010

இரத்தத்தில் கலந்தவள் - சிறுகதை

ஃபோரத்தில் (பெங்களூரில் உள்ள மிகப்பெரிய ஷாப்பிங் மால்களில் ஒன்று) இருந்து வெளியே வந்தனர் நவீனும், அரவிந்தும்.

"இதெல்லாம் நம்மளுக்கே கொஞ்சம் ஓவரா தெரியலை மச்சி" என்றான் நவீன்.

"இல்லை.. தெரியலைடா" இது அரவிந்த்.

"ஆமாம் அதெல்லாம் தெரிஞ்சுருந்தாதான் நாம எப்பவோ முன்னேறி இருப்பமே."

"ஸ்டுபிட் இப்ப என்ன கெட்டுப் போயிட்டம்னு புலம்ப ஆரம்பிக்கற.. நிறுத்துடா"

நின்றான்....

என்னடாது நாம இவன நிறுத்துடான்னா இன்னொருத்தன் நம்ம முன்னாடி நிக்கறானே என்று நிமிர்ந்து பார்த்தான் அரவிந்த்.

"ஏய் மச்சி நீ இந்த ஊர்லதான் இருக்கியாடா? என்னடா ஷாப்பிங்கா? எப்படி இருக்க?" என்று விடை தேவைப்படாத கேள்விகளாகவே கேட்டான் அவனது கல்லூரி (கால) நண்பன் ராஜூ. கிட்டத்தட்ட ஏழெட்டு வருடங்கள் கழித்து இப்போதுதான் பார்க்கிறார்கள். ஆனால் இருவருக்குமே எந்த ஆச்சரிய உணர்ச்சியும் இல்லை.

"ம் நீயா.. நீயும் இந்த ஊர்லதான் இருக்கியா? நான் நல்லாருக்கேண்டா. ஷாப்பிங்லாம் ஒன்னும் இல்லடா. இவன் என்னோட ஃபிரண்டு. உச்சா போகனும்னான் அதான் ஃபோரம்ல இருக்கற டாய்லட் போயி போயிட்டு வந்தோம்"

அவன் அதிர்ந்தவனாய் இதெல்லாம் ஒரு பொழப்பாடா என்பது மாதிரி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.

"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" -அரவிந்த்.

அவனது நண்பன் மனதிற்குள்ளேயே தலையில் அடித்துக் கொண்டிருக்க வேண்டும்.

"சரிடா நான் கிளம்பரேன். எனக்கு வேலை இருக்கு" என்று சொன்னவாரே பதிலை எதிர்பார்க்காமல் அங்கிருந்து அகன்றான்.

"எப்படி எஸ் ஆயிட்டான் பார்த்தியா.. எப்படிடா நம்மள பாத்தவுடனே இவனுங்களுக்கெல்லாம் புரிஞ்சுடுது. ஒதுங்கி ஓடிப்போயிடறானுங்க. வேஸ்ட் ஃபெல்லோஸ்" என்றவாரே அங்கிருந்து நடக்க ஆரம்பித்தனர் இருவரும்.

சிறிது தூரம் நடந்து இருவரும் அந்த பார் அண்ட் ரெஸ்டாரெண்டுக்குள் நுழைந்தனர்.
வெளிச்சம் அதிகம் நுழையாதவாறு, ஆங்காங்கே வர்ண விளக்குகளின் ஜாலத்தில் குடிமகன்களால் நிரம்பியிருந்தது அந்த பார். பாரின் இருபுறமும் எல்.சி.டி டிஸ்பிளே தொலைக்காட்சிப் பெட்டியை சுவற்றில் பதித்திருந்தனர். அதில் எதோ ஒரு இந்தி நடிகன் சட்டையைக் கழற்றிப் போட்டு விட்டு ஆடிக்கொண்டிருந்தான்.

"என்னடா பொண்ணுங்கள்லாம் வந்திருக்காங்க" - நவீன்.

"ஆமாடா இதுங்கெல்லாம் எங்க உருப்படப் போகுதுங்க. எவன் மாட்டப் போறானோ தெரியலை. மாசா மாசம் இதுங்களுக்கு தண்ணி வாங்கித் தரவே தனியா சம்பாதிக்கனும் அந்த பார்ட்டி. நல்ல வேலை என் ஆளு தங்கம்டா."

"அதையும் உரசிப் பாத்துட்டியா மச்சி"

"ஏய் நோ பேட் தாட்ஸ். அவளைப் பத்தி பேசும் போது இப்படி எல்லாம் பேசுனா எனக்குப் புடிக்காது. ஃபிரண்டுன்னு பாக்க மாட்டேன். கொன்றுவேன்"

"சரி சரி ஓவரா டெம்ப் ஆவதடா.. நாம பார்ல வந்து சும்மாதான் உக்காந்துருக்கோம். இன்னும் ஆர்டர் கூட பண்ணலை அதுக்குள்ள பெனாத்தாதே. ஒரு அரை மணி நேரம் உள்ள போவட்டும்.." என்று சொல்லிவிட்டு சிரித்தான் நவீன்.

இருடா மவனே மாட்டாமயா போயிடப்போற கொஞ்சம் உள்ள போவட்டும் அப்புறம் உன்னை வெச்சிக்கறேன் என்று மனதில் நினைத்தவாறே மெனு கார்டை எடுத்தான்.

"நீயே நீயே.. நானே நீயே.. நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே" என்ற பாடல் ரிங் டோனாக ஒலித்தது.

"ஏய் அம்மா கூப்பிடறாங்கடா.. நான் வெளிய போய் பேசிட்டு வர்ரேன். எனக்கு ஒரு லார்ஜ் சிக்னேச்சர் அப்புறம் உனக்கு என்ன வேனுமோ ஆர்டர் பண்ணு. தோ வந்துடறேன்" என்றவாறே எழுந்து வெளியே சென்றான்.

"ம் சொல்லுங்கம்மா"

"டேய்.. வீட்டுக்கு வர நேரமாகுமாடா"

"ஆமாம்மா இன்னிக்கு வீட்டுக்கு வந்தாதான் வருவேன்மா. ஃபிரண்டு ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு. நானே போன் பண்ணனும்னு நினைச்சேன். நீங்களே கூப்பிட்டுட்டீங்க"

"ஓ.. சரிடா.. பிரமீ எதோ சேலை சுடிதார்லாம் எடுக்கனும்னா கூட வரச் சொல்றா.. பக்கத்துலதான்.. நான் அவ கூட போயிட்டு வந்திடறேன். சாவி கொடுத்துட்டு போகலாமான்னுதான் கூப்பிட்டேன்"

"இல்லம்மா நீங்க சாவி எடுத்துக்கிட்டே போங்கம்மா. நான் நவீன் ரூம்லயே இருந்துக்கறேன். பாத்து போயிட்டு வாங்க"

"சரிப்பா. நீ பாத்து.. சாப்பிட்டுடு வேலை இருக்குன்னு சாப்பிடாம விட்டுடாத"

"சரிம்மா" இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அரவிந்துக்கு அப்பா இல்லை.. அவனை கஸ்டப்பட்டு வளர்த்து ஆளாக்கியது அவன் அம்மாதான். அம்மாவின் மீது மிகவும் பாசமாய் இருந்தான்.

அவன் வந்து அமர்வதற்கும் பேரர் ஆர்டர் பண்ணியவற்றைக் கொண்டு வந்து வைக்கவும் சரியாய் இருந்தது.

மீண்டும் அரவிந்தின் மொபைலில் "எங்கிருந்தோ அழைக்கும் உன் ஜீவன்...." என்ற பாடல் ஒலித்தது.

"எங்கருந்து மச்சி அழைக்குது உன் ஜீவன்?"

"ஏய் சும்மா இருடா" என்றவாரே காலை அட்டெண்ட் செய்தான்.

"சொல்லுடா செல்லம்." குரல் பம்மியிருந்தது.

"---------"

"இல்லடா எங்க மேனேஜருக்கு இன்னிக்கு பர்த்டே அதான் பார்ட்டிக்கு கூப்பிட்டிருக்காரு.. அதான் வந்திருக்கேன். அந்த சத்தம்தான் கேக்குது. உங்கிட்ட பிராமிஸ் பண்ணதை மீறுவனா செல்லம். கண்டிப்பா கிளாஸைத் தொட மாட்டேன்" என்றவாரே. சிக்னேச்சர் கிளாஸைத் தொட்டு எடுத்து சத்தம் வராதவாறு மெதுவாக நவீன் கையிலிருக்கும் கிளாசுக்கு சியர்ஸ் வைத்தான்.

"சரிடா செல்லம்.. பார்ட்டி முடிஞ்சதும் நான் மெசெஜ் பன்றேன்."

"----------"

"சரி சரி மறப்பேனா என் இரத்தத்துலயே நீ கலந்திருக்கயே செல்லம். ஐ லவ் யூ" என்றவாரே இணைப்பைத் துண்டித்தான்.

"இரத்தத்துல எல்லாம் அவங்க வந்து எப்படா, எப்படிடா கலந்தாங்க."

"டேய் இன்னிக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கே போல இருக்கு... எனக்கும் ஒரே முடிவுதான்.. அதை ஏற்கனவே சொல்லிட்டேன்.. வீனா எங்கையால சாகாத."

"சரி சரி.. விடு விடு கூல்... இரத்தத்துல கலந்துருக்கறன்னு சொல்றது எல்லாம் ரொம்ப டிராமாத்தனமா இருக்கு மச்சி.. அவ்ளோ லவ் பன்றியா அவங்களை".

"இல்லடா என்னோட பிளட் க்ரூப் AB-. என் பேரு அரவிந்த் அவ பேரு பிருந்தா... பாருடா.. இரத்தத்துலயே நாங்க ரெண்டு பேரும் ஒன்னா கலந்து இருக்கோம் பாத்தியா"

நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான். அதை அரவிந்த் கவனித்து விட்டான்.

"ஏய்.. போடா இதுக்குதான் நான் என் லவ் பத்தி யார்கிட்டயும் சொல்றதில்லை"

"சே..சே.. தப்பா எடுத்துக்காதடா. நீ சொல்லு. எனக்கும் ஆச்சரியமாதான் இருக்கு. என்னவொரு மேட்ச் பாரு உங்க ரெண்டு பேருக்கும். சரி இவளோ உணர்ச்சிப் பூர்வமா காதலிக்கறவன் ஏண்டா அவங்ககிட்ட பொய் சொல்ற. உண்மைலயே குடிக்காம இருக்க வேண்டியதுதான"

"அதுக்குதான் முயற்சி பண்ணிட்டிருக்கேன்.. கொஞ்ச நாள்ல நிச்சயம் நிறுத்திடுவேன் மச்சி. ஆனா அது வரைக்கும் என் ஆளு மனசு கஸ்டப்படறதை என்னால தாங்க முடியாதுடா. அவளோட சந்தோசத்துக்காகத்தான் இப்படி அப்பப்ப கொஞ்சம் பொய் சொல்ல வேண்டியிருக்கு"

மீண்டும் கையை மெல்ல பின்னே கொண்டு செல்ல இருந்த நவீன். அரவிந்த் உஷாராக அவன் கையையே பார்த்துக் கொண்டிருந்ததால் கட்டுப்படுத்திக் கொண்டான்.

"அதுசரி மச்சி... இதுவரை உன் இரத்தத்துல பிருந்தா கலந்திருக்காங்கன்னு சொன்ன. இப்ப தண்ணியடிச்சிட்ட.. ஆல்காஹாலும் இல்ல கலந்திருக்கு"

உடனே அரவிந்தின் முகம் மாறியது. இவன் சொல்வது சரிதானே.. இரத்த வகையில் எழுத்துப் பொறுத்தம் சரியாக இருப்பதையே நினைத்து புழங்காகிதம் அடையும் நான் ஏன் இதுவரை இதை யோசிக்கவில்லை என நினைத்தான்.

அந்த நேரம் மீண்டும் "நீயே நீயே நானே நீயே" ஒலித்தது. எடுத்தான்..

"நான் பிரமீளா பேசறேன்பா.. அம்மாவுக்கு இங்க ஒரு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சுப்பா. நிறைய பிளட் லாஸ் ஆகிடுச்சு.. AB- ரேர் க்ரூப் கிடைக்காதுங்கறாங்க. எங்கப்பா இருக்க.. எனக்கு என்ன பன்றதுன்னே தெரியலை. சீக்கிரம் வாப்பா"

அம்மாவுக்கு ஆக்சிடெண்டா... அரவிந்தின் உடல் நடுங்கியது... உடனே பதட்டத்துடனும் பயத்துடனும் எழுந்தான்..

"அம்மாவுக்கு ஆக்சிடெண்ட் ஆயிடுச்சாம்டா உடனே போலாம் வாடா.. நிறைய பிளட் லாசாம் என் க்ருப்தான் அவங்களுக்....."

"ஆல்கஹாலும் இல்ல உன் இரத்துல கலந்திருக்கு" அந்த வார்த்தைகள் மீண்டும் நினைவுக்கு வந்தன.

"அய்யோ" என்று தலையில் கை வைத்தவாரே அந்த இடத்திலேயே தரையில் அமர்ந்தான். கண்களில் தாரை தாரையாய் கண்ணீர் வழிந்தது...

"மப்பு ஏத்திக்க வேண்டியது அப்புறம் ஓவர் மப்புல... இடம் பொருள் தெரியாம உக்காந்து எதையாவது நினைச்சு அழ வேண்டியது. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு" என்றவாரே இருவர் அவர்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டே சென்றனர்.

அரவிந்தின் காதில் இப்போது யார் பேசுவதும் விழவில்லை...

"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."

மீண்டும் பாடல் ஒலித்தது.

mother’sday Quotes


70 comments:

  1. நல்லா இருக்குங்க...புரியிரவங்களுக்கு புரிந்தால் சரி)))

    ReplyDelete
  2. அடடா..! வடை போச்சே..!! சரி பொறுமையா படிச்சுட்டு வரேன் தல..!!

    ReplyDelete
  3. அம்மா படமே ஒரு 1000 கதை சொல்கிறதே...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    கருத்தடை முறை உருவான கதை - contraception

    ReplyDelete
  4. வசனங்கள் வெகு அருமை . சூப்பர்

    ReplyDelete
  5. கதை மட்டுமில்லாம படமும் நல்லா இருக்குங்க நல்லா எழுதி இருக்கீங்க பங்கு. உங்களுக்கு கதைகள் ரொம்ப நல்லா வருது.

    ReplyDelete
  6. //"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" //
    எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க ப்ப ..நல்ல தான் இருக்கு பஞ்ச்

    ReplyDelete
  7. சூப்பர் தலைவா..... நச் மெசேஜ்...

    ReplyDelete
  8. @அருண்
    //வடை வடை

    வாங்க அருண்... நல்லா சாப்பிடுங்க... டேஸ்ட் எப்படி இருந்தது.

    ReplyDelete
  9. @கனேஷ்

    வாங்க கனேஷ்... ஆமாம் புரிய வைக்கிற முயற்சியாய்தான் இந்தக் கதை...

    ReplyDelete
  10. ஒன்றி படிக்க முடியுது

    ReplyDelete
  11. @பிரவின் குமார்.

    வாங்க வாங்க.. பொறுமையா படிச்சிட்டு வாங்க

    ReplyDelete
  12. @ம.தி.சுதா
    //அம்மா படமே ஒரு 1000 கதை சொல்கிறதே...

    அந்தப் படம்தான் ரொம்ப நேரம் தேடினேன்.. கதை படிச்சீங்களா...

    ReplyDelete
  13. @எஸ்.கே

    ரொம்ப நன்றிங்க எஸ்.கே

    ReplyDelete
  14. @பார்வையாளன்
    //வசனங்கள் வெகு அருமை . சூப்பர்

    ரொம்ப நன்றிங்க பார்வையாளரே..

    ReplyDelete
  15. @karthikkumar
    //கதை மட்டுமில்லாம படமும் நல்லா இருக்குங்க நல்லா எழுதி இருக்கீங்க பங்கு. உங்களுக்கு கதைகள் ரொம்ப நல்லா வருது.

    வாங்க பங்கு... ரொம்ப சந்தோசமா இருக்குங்க

    ReplyDelete
  16. @இம்சைஅரசன் பாபு..
    ////"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" //
    எப்படி எல்லாம் சிந்திக்கிறாங்க ப்ப ..நல்ல தான் இருக்கு பஞ்ச்

    ஆமாங்க உண்மைல இன்னிக்கு காலைல இந்த ஒரு வரி மட்டும்தான் மனசுல தோணுச்சு... அட நல்லாருகேன்னு.. அதை டெவலப் பண்ணிதான் இப்படி ஒரு கதையாக்கிட்டேன்..

    ReplyDelete
  17. நல்ல இருக்கு கதை .கடைசி பினிஷிங் சூப்பர் ..............

    ReplyDelete
  18. //நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான்//
    :-))

    ReplyDelete
  19. @ஜீ...

    வாங்க ஜீ

    ////நவீன் மண்டையில் இப்பவே லைட்டா குடையற மாதிரி இருந்தது. ஸ்டைலாக கையை பின்னே கொண்டு சென்று தலையை சொரிந்து கொண்டான்//
    :-))

    என்ன பன்றது.. இந்த மாதிரி சீன் வச்சா.. நாமளே அதை ஓட்டிட்டம்னா பிரச்சினை இல்லை பாருங்க...

    ReplyDelete
  20. @Arun Prasath
    //சூப்பர் தலைவா..... நச் மெசேஜ்...

    ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  21. @இம்சைஅரசன் பாபு..
    //நல்ல இருக்கு கதை .கடைசி பினிஷிங் சூப்பர் ..............

    ரொம்ப நன்றிங்க பாபு..

    ReplyDelete
  22. கதை நல்லா இருக்கு ரமேஷ்...

    ReplyDelete
  23. @TERROR-PANDIYAN(VAS)

    வாங்க... ரொம்ப நன்றிங்க டெர்ரர்...

    ReplyDelete
  24. ஜாலியாக ஆரம்பித்து முடிவு மனதை கணக்கா வைக்கிறது..

    அருமை...

    ReplyDelete
  25. @வெறும்பய
    //ஜாலியாக ஆரம்பித்து முடிவு மனதை கணக்கா வைக்கிறது..

    அருமை...

    வாங்க ஜெயந்த்... ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  26. இந்த முடிவை எதிர்பார்த்தேன் ரமெஷ்

    ReplyDelete
  27. @அருண் பிரசாத்

    வாங்க அருண்... அப்படிங்களா... நீங்க சொன்ன ஐடியாவ வெச்சி இன்னொரு கதை எழுதிடறேன் விடுங்க..

    ReplyDelete
  28. //அவன் அதிர்ந்தவனாய் இதெல்லாம் ஒரு பொழப்பாடா என்பது மாதிரி இருவரையும் மாறி மாறி பார்த்தான்.//

    அட அட , இதிலென்ன தப்பு இருக்கு ..?

    ReplyDelete
  29. @ப.செல்வக்குமார் = வடை (வாங்கி) வங்கி

    //அட அட , இதிலென்ன தப்பு இருக்கு ..?

    அதானே.. இவனுங்களுக்கு எல்லாம் எங்க தெரியப் போகுது.. அதுல இருக்கற சுகம்..

    ReplyDelete
  30. படங்களும் கதையும் அருமை நண்பரே...

    ReplyDelete
  31. அருமை ரமேஷ்...!!! கதையோட பர்ஸ்ட் ஆப் நம்மை ஞாபக்கபடுத்துது...!!!

    ReplyDelete
  32. //"டேய் இன்னிக்கு ஒரு முடிவோடதான் வந்திருக்கே போல இருக்கு... எனக்கும் ஒரே முடிவுதான்.. அதை ஏற்கனவே சொல்லிட்டேன்.. வீனா எங்கையால சாகாத."//

    ஓ , அந்த அளவுக்கு பெரிய தாதாவா ..?

    ReplyDelete
  33. //"மப்பு ஏத்திக்க வேண்டியது அப்புறம் ஓவர் மப்புல... இடம் பொருள் தெரியாம உக்காந்து எதையாவது நினைச்சு அழ வேண்டியது. இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு" என்றவாரே இருவர் அவர்களுக்குள் சிரித்து பேசிக் கொண்டே சென்றனர். //

    செம செம டச்சிங் .. நல்லா இருக்கு அண்ணா ..!!

    ReplyDelete
  34. "நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" -அரவிந்த்.////

    அட பஞ்ச் டயலாக்....

    ReplyDelete
  35. வசன நடை பிரமாதம்

    //"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."//
    மிகவும் பிடிக்கும்

    ReplyDelete
  36. குடித்தால் ரத்தம் கொடுக்க முடியாது என்று நல்ல கருத்து இருக்கிறது போன் வருவதை ரிங் டோன்வுடன் பயன்படுத்தி இருப்பது மேன்மை...

    ReplyDelete
  37. மனதை, பாசத்தால் நெகிழ வைத்த கதை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  38. @வினோ

    வாங்க.. ரொம்ப நன்றி நண்பரே

    ReplyDelete
  39. @சிற்றரசர்

    ஹ ஹ ஹ... உண்மைதாங்க அரசு...

    ReplyDelete
  40. @ப.செல்வக்குமார்

    //ஓ , அந்த அளவுக்கு பெரிய தாதாவா ..?

    நண்பர்களுக்குள்ள பீலா விட்டுக்கறது சகஜம்தான விடுங்க..

    ReplyDelete
  41. @சௌந்தர்

    //"நாங்கள்லாம் உச்சா போனாலும் ரிச்சா போவம்டா" -அரவிந்த்.////

    அட பஞ்ச் டயலாக்....
    ஆமாங்க... ஹி ஹி ஹி

    //குடித்தால் ரத்தம் கொடுக்க முடியாது என்று நல்ல கருத்து இருக்கிறது போன் வருவதை ரிங் டோன்வுடன் பயன்படுத்தி இருப்பது மேன்மை...

    ஆமாங்க.. அதை கேசுவலா அதே நேரம் கொஞ்சம் சுருக்குன்னு சொல்ல நினைச்சேன்.. அதான் இந்தக் கதை... நன்றிங்க....

    ReplyDelete
  42. முடிவு நல்லாயிருந்தது..
    படங்களின் தேர்வு நல்ல ரசனை..

    ReplyDelete
  43. @nis

    //வசன நடை பிரமாதம்

    நன்றிங்க

    ////"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."//
    மிகவும் பிடிக்கும்

    ஆமாங்க எனக்கும் பிடிச்ச பாட்டு அது...

    ReplyDelete
  44. @nis

    //வசன நடை பிரமாதம்

    நன்றிங்க

    ////"நீயே நீயே நானே நீயே நெஞ்சில் வாழும் உயிர் தீயே நீயே...."//
    மிகவும் பிடிக்கும்

    ஆமாங்க எனக்கும் பிடிச்ச பாட்டு அது...

    ReplyDelete
  45. @சித்ரா

    //மனதை, பாசத்தால் நெகிழ வைத்த கதை. பாராட்டுக்கள்!

    நன்றிங்க சித்ரா...

    ReplyDelete
  46. @பாரத்.. பாரதி

    //முடிவு நல்லாயிருந்தது..
    படங்களின் தேர்வு நல்ல ரசனை..

    நன்றிங்க...

    ReplyDelete
  47. அருமை அண்ணே,

    சுவாரசியமாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்

    தொடரட்டும் உங்கள் பணி....

    ReplyDelete
  48. மேலே என்னாண்ணே கலர் கலர் பாட்டில்ல இருக்கு டானிக்கா...
    ஹிஹிஹி....

    ReplyDelete
  49. காமடி கலந்த மெசேஜ் கதை. கலக்கல் ரமேஷ்

    ReplyDelete
  50. @மாணவன்

    //சுவாரசியமாகவும் சிறப்பாகவும் பதிவு செய்துள்ளீர்கள் சூப்பர்

    தொடரட்டும் உங்கள் பணி.... //

    நன்றிங்க...

    //மேலே என்னாண்ணே கலர் கலர் பாட்டில்ல இருக்கு டானிக்கா...
    ஹிஹிஹி....

    ஆமாம்... ஆனா அதக் குடிச்சாதான் ஹாஸ்பிட்டல் போவாங்க ஒருநாள்

    ReplyDelete
  51. @ரமேஷ்

    //காமடி கலந்த மெசேஜ் கதை. கலக்கல் ரமேஷ்

    நன்றிங்க ரமேஷ்..

    ReplyDelete
  52. ரமேஷ், கதைக்கு எடுத்துக் கொண்ட கருவை இரு வழிகளில் யோசித்தேன்.
    மது குடித்தால் ரத்த தானம் செய்ய முடியாது
    மது குடிப்பது தவறு.
    இரண்டாவது பற்றி இப்போது விவாதிக்க அவசியமில்லையென கருதுகிறேன்.
    ஒரு தேர்ந்த சிறுகதையின் முடிச்சுக்கள் கொண்டதாக இதை நினைக்கிறேன் ரமேஷ்.
    சிறுகதையோட்டத்தில் எங்கும் இடரவில்லை. உங்களது எழுத்துக்களில் ( சிறுகதைகளில் ) மிகுந்த நம்பிக்கை வருகிறது ரமேஷ்.
    இன்னும் ஆழமான கருக்கலில் சிறுகதைகள் அமைக்க விழைகிறேன் மற்றும் வாழ்த்துகிறேன். :)

    ReplyDelete
  53. @அப்பாவி தங்கமணி

    //Very nice story

    ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  54. @Balaji saravana

    //இரண்டாவது பற்றி இப்போது விவாதிக்க அவசியமில்லையென கருதுகிறேன்.

    தாராளமாக விவாதிக்கலாம் சரவணா அதிலென்ன தவறு இருக்கிறது.

    //ஒரு தேர்ந்த சிறுகதையின் முடிச்சுக்கள் கொண்டதாக இதை நினைக்கிறேன் ரமேஷ்.
    சிறுகதையோட்டத்தில் எங்கும் இடரவில்லை. உங்களது எழுத்துக்களில் ( சிறுகதைகளில் ) மிகுந்த நம்பிக்கை வருகிறது ரமேஷ்.
    இன்னும் ஆழமான கருக்கலில் சிறுகதைகள் அமைக்க விழைகிறேன் மற்றும் வாழ்த்துகிறேன். :)

    என் மீது உங்களுக்கு நம்பிக்கை வந்தமைக்கு ரொம்ப நன்றிங்க பாலாஜி... கண்டிப்பாக இனிவரும் கதைகளில் ஆழமான கருக்கலை எடுத்துக் கொண்டு கவனமாக எழுத முயற்சிக்கிறேன்... வாழ்த்துக்கு நன்றி..

    ReplyDelete
  55. ரொம்ப...........லேட்டா வந்துட்டேனோ.....பரவாயில்லை.
    சும்மா சொல்லக்கூடாது நண்பரே....கதை சூப்பருங்க...

    ReplyDelete
  56. @ தமிழ் வாழ்க....

    //ரொம்ப...........லேட்டா வந்துட்டேனோ.

    எங்க போயிடப் போறோம்.. நேரம் கிடைக்கும் போது பொறுமையாவே வந்து படிங்க...

    //சும்மா சொல்லக்கூடாது நண்பரே....கதை சூப்பருங்க...

    ரொம்ப நன்றிங்க நண்பரே... நிஜமாத்தேன் சொல்றேனுங்க..

    ReplyDelete
  57. @தமிழ் வாழ்க...

    உங்கள் டெம்ப்லேட்டில் எதோ பிரச்சினை உள்ளது நண்பரே... பின்னூட்டமிட முடியவில்லை... வலைப்பதிவின் ஃபாண்ட் சைசும் மிகவும் சிறிய எழுத்துக்களைக் கொண்டதாக இருப்பதால் படிக்க மிகவும் சிரமமாக இருக்கிறது... உங்கள் ஈ-மெயில் முகவரி அங்கில்லை.. எப்படி தொடர்பு கொள்றதுன்னு தெரியல... அதனாலதான் இங்க போடறேன்...

    ReplyDelete
  58. நானும் லேட்டா வந்துட்டேன்..
    ஆனாலும் நல்ல சிறுகதை படிச்ச திருப்தி.
    வாழ்த்துக்கள்

    ReplyDelete
  59. @இந்திரா

    //நானும் லேட்டா வந்துட்டேன்..

    அச்சச்சோ அப்படியெல்லாம் இல்லீங்க.. நேத்து சாயந்திரம்தான் பப்ளிஸ் பண்ணினேன் இதை..


    //ஆனாலும் நல்ல சிறுகதை படிச்ச திருப்தி.
    வாழ்த்துக்கள்

    ரொம்ப நன்றிங்க

    ReplyDelete
  60. டேம்ப்ளட் பிரச்சனை இருக்கு கொஞ்சம் சரி பண்ணிகுங்க நண்பரே

    ReplyDelete
  61. நல்ல சிறுகதை..ரொம்ப நல்லாருக்கு

    ReplyDelete
  62. @ஆர்.கே. சதீஸ்குமார்

    //டேம்ப்ளட் பிரச்சனை இருக்கு கொஞ்சம் சரி பண்ணிகுங்க நண்பரே

    டெம்ப்லேட் இப்பதான் செட் பண்ணிட்ருக்கேங்க.. அதான் இப்படி சோ ஆகுது.. இன்னும் 10, 15 நிமிசத்துக்குள்ள சரி பண்ணிடுவேன்..

    /நல்ல சிறுகதை..ரொம்ப நல்லாருக்கு

    ரொம்ப நன்றிங்க நண்பரே

    ReplyDelete
  63. /டேம்ப்ளட் பிரச்சனை இருக்கு கொஞ்சம் சரி பண்ணிகுங்க நண்பரே//
    சரியாயிடுச்சு..

    ReplyDelete
  64. @தெய்வசுகந்தி

    ஃபஸ்ட் டைம் வர்ரீங்க... வாங்க தெய்வசுகந்தி... பாராட்டுக்கு நன்றீங்க...

    ReplyDelete