Search This Blog

Friday, December 10, 2010

இன்று புதிதாய் பிறந்தோம் - பாரதியார்


சென்றதினி மீளாது,மூட ரே!நீர்
எப்போதும் சென்றதையே சிந்தை செய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர்!சென்றதனைக் குறித்தல் வேண்டாம்
இன்றுபுதி தாய்ப்பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்றுவிளை யாடியின்புற் றிருந்து வாழ்வீர்;
தீமையெலாம் அழிந்துபோம்,திரும்பி வாரா.


- மகாகவி பாரதியார். 

பின்குறிப்பு: நாளை பாரதியார் பிறந்த நாள். அதனால் அவர் நினைவாக மகாகவி பாரதியார் கவிதைகளில் எனக்குப் பிடித்ததில் ஒன்று.


22 comments:

  1. எனக்கும் ரொம்ப பிடிக்கும் அண்ணா .,
    அதனாலதான் என் மெயில் ஐடி கூட தமிழ்பாரதி.!

    ReplyDelete
  2. அடடா வடை வாங்கிட்டேனே ..!!

    ReplyDelete
  3. @செல்வா = வடை வ(வா)ங்கி

    சூப்பர் அதான் உடனே வந்து வடை வாங்கிட்டீங்க செல்வா..

    ReplyDelete
  4. பாரதிக்கு வணக்கம் ...

    ReplyDelete
  5. மீசைத் தமிழுக்கு வந்தனம். ;-)

    ReplyDelete
  6. பாரதிக்கு வந்தனம் :)

    ReplyDelete
  7. அருமை. பகிர்வுக்கு நன்றிங்க.

    ReplyDelete
  8. அருமையான பதிவு பாரதிக்கு வணக்கம்.

    ReplyDelete
  9. பாரதியார் தமிழர்களின் அடையாளம், சிலர் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் கூட, தமிழ், தமிழர் வாழ்வியலை அழகாய், ஆக்ரோஷமாய், உணர்ச்சிப்பிழம்பாய் வெளிப்படுத்திய பாரதியை நினைவு கூர்ந்ததில் உங்களுடன் நாங்களும் இணைகிறோம்..
    பதிவுக்கு வாழ்த்துக்களும், வாக்குகளும்...

    பாரத்... பாரதி...

    ReplyDelete
  10. மிக்க நன்றி நண்பா... நம் பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  11. பாரதிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்
    நினைவு படுத்தியதற்கு நன்றி

    template super

    ReplyDelete
  12. அருமையான கவிதையுடன் பாரதியார் பிறந்த நாளை நினைவுகூர்ந்த உங்களுக்கு ஒரு பூச்செண்டு.

    ReplyDelete
  13. //
    அருண் பிரசாத்

    Happy Birthday to Mr பாரதியார்///


    எங்க பாரதியார் யாருன்னு சொல்லு பாப்போம்?

    ReplyDelete
  14. அற்புதமான எனக்கும் பிடித்த கவிதை

    ReplyDelete
  15. விரைவில் சதம் (100 followers)அடிக்க போகிறீர்கள். அட்வான்ஸ் வாழ்த்துகள்

    ReplyDelete
  16. எம் மனதில் நின்றகலாத ஒரு வீரனை நினைவு கூர்வோமாக..

    ReplyDelete
  17. அருமையான கவிதை... பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  18. எனக்கு மிகவும் பிடித்த கவிதை

    ReplyDelete