Thursday, December 23, 2010

மன்மதன் அம்பு - திரை விமர்சனம்

எந்த ஆர்ப்பாட்டமும் இல்லாம ரொம்ப சாதாரணமா ஆரம்பிக்குது படம்... திரிஷா ஒரு திரைப்பட நடிகை.. இது எங்களுக்குத் தெரியாதான்னு கேக்காதீங்க... படத்திலயும் நடிகையாவே வர்றாங்க... அவங்களைக் காதலிக்கற தொழிலதிபரா மாதவன் வர்றார். படம் ஆரம்பிக்கும் போது சூட்டிங் ஸ்பாட்ல இருக்கற அவங்களைப் பாக்க மாதவனோட குடும்பம் வருது.. அங்க அவங்க சூர்யாவோட (நடிகர் சூர்யாவேதான்) கட்டிப்பிடிச்சு... ஆடறதைப் பாக்க சகிக்காம மாதவனோட அம்மா எழுந்து போயிடறாங்க... சூர்யாவோட பொண்ணோட கான்ஃபிரன்ஸ் கால்ல திரிஷா பேசறதை, முத்தம் கொடுக்கறதை... சூர்யாவுக்குக் கொடுக்கறதா மாதவன் தப்பா நினைச்சுடறார்.. அப்புறம் ஒரே கேரவன்ல வேற வேற பகுதிகள்ல... ஒரே நேரத்துல சூர்யாவும், திரிஷாவும் உள்ளே போறதை ஒன்னா போறதா நினைச்சுக்கறார் மாதவன்... இதனால திரிஷா மேல சந்தேகமும் கோபமும் அதிகமாகுது அவருக்கு...

அதை கார்ல போய்க்கிட்டே மாதவன் திரிஷாகிட்ட கேக்க... அந்த ஆத்திரத்துலயும், கோவத்துலயும் வண்டி ஓட்டிட்டு வரும் போது எதிர்ல வர்ற ஒரு கார் மேல மோதிடறாங்க திரிஷா... அப்ப கோபத்தோட ரெண்டு பேரும் தற்காலிகமா பிரியறாங்க... அப்புறம் மூனு வருசம் கழிச்சி திரிஷா... அமைதியா இருக்கனும்ங்கறதுக்காக.. அவங்களோட தோழி சங்கீதாவோட பாரிஸ் போயி அங்க இருந்து கிளம்பர ஒரு சொகுசுக் கப்பல்ல டிராவல் பண்ணி ரிலாக்ஸ் பண்ணிட்டு வரலாம்னு கிளம்பறாங்க.... அங்க அவங்க என்ன பண்றாங்க அப்படிங்கறதை வேவு பாக்க ஒருத்தரை நியமிக்கறார் மாதவன்... அப்படி வேவு பாக்க நியமிக்கப் படறவர்தான்.. முன்னால் இராணுவ வீரரான கமல்....

கமலோட நண்பர் ரமேஷ் அரவிந்த்.. அவருக்கு கேன்சர் நோய் இருக்கு... அதுக்கான சிகிச்சைக்காக பணம் தேவைப்படறதாலதான் இந்த வேவு பாக்கற வேலைக்கே ஒத்துக்கறார் கமல். கமலும் திரிஷாவை அவருக்குத் தெரியாம பின் தொடர்ந்து வர்றார்.. திரிஷா ரொம்ப நல்லவங்க.. அவங்க மாதவன உண்மையிலேயே விரும்பறாங்க... எந்த தப்புத்தண்டா பண்ணவும் இங்க வரலை... உண்மைலயே ரிலாக்ஸ் பண்ணத்தான் அந்த டிரிப் வந்திருக்காங்கறதைத் தெரிஞ்சுக்கிட்டு... மாதவன்கிட்ட சொல்றார்.. உடனே அவர் சரி உன் வேலை முடிஞ்சது நீ இந்தியா வந்திருன்னு சொல்றார்.. அவருக்குத் தரவேண்டிய பணத்தையும், இனிமே உனக்கு அங்க வேலை இல்லையேன்னு சொல்லித் தர முடியாதுன்னு கல்தா கொடுக்க பாக்கறார்....

அதுக்குள்ள ரமேஷ் அரவிந்துக்கு ஆபரேசன் பண்ணியே ஆகனும்ங்கற கட்டாயமும் வந்திடுது... அதனால திரிஷாவைப் பத்தி கமல் மாதவன்கிட்ட தப்பா சொல்ல ஆரம்பிக்கிறார்.. அதுல ஆர்வமாகி ஆபரேசனுக்குப் பணம் கட்டறார்... அதனால வர்ற குழப்பங்களும்.. அதை அவங்க எப்படி அவிழ்க்கிறாங்க அப்படிங்கறதுதான் மீதி கதை......

கமல் எல்லாரையும் ஓரங்கட்டி நான் மட்டும்தான் நடிப்பேன்... எல்லாரும் வேடிக்கை பாக்கனும்னு அடம்புடிக்காம... அந்த ரோலுக்கு என்ன தேவையோ அதை மட்டும் சரியா செஞ்சிருக்கார்.. அதுவே பாக்க நல்லாருக்கு... படத்துல கமலயும் மீறி ஸ்கோர் பண்றாங்கன்னா அது சங்கீதாதான்...

திரிஷாவோட தோழியா வர்றாங்க.. ஆனா படம் முழுக்க திரிஷாவைவிட இவங்களுக்குதான் நடிக்கறதுக்கு வாய்ப்பு அதிகம்... அதையும் நல்லா பயன்படுத்திக்கிட்டு அசால்ட்டா நடிச்சிருக்காங்க... திரிஷாவையும் குறை சொல்ல முடியாது அளவான நடிப்பு... மாதவன் சான்சே இல்லை... பிச்சு உதறிருக்கார்...
ரமேஷ் அரவிந்த்.. அடையாளமே தெரியாம வர்றார்.. ஆனா நல்லா நடிச்சிருக்கார்... ஊர்வசி அவரோட மனைவியா வர்றாங்க... மாதவனோட முறைப்பொண்ணா.... களவானி ஓவியா - பாவம்யா.....

கமலுக்காக வர்ற அந்த ஃபிளாஷ்பேக் பாடல்காட்சி அருமை.. பாடல் ஃபுல்லா ரிவர்ஸ்லயே காட்சியமைப்பு... நேரா சீன் எடுத்துட்டு ரிவர்ஸ்ல ஓட்டறது பழைய ஸ்டைல்தானேன்னு நினைக்கறீங்களா... அதுதான் இல்லை... அந்தப் பாட்டுல... சீனெல்லாம் ரிவர்ஸ்ல ஓடுது... ஆனா பாடற கமலோட வாயசைப்பு மட்டும் நேரா ஓடுது... நல்லாருக்கு பாக்கும் போது அந்தப் பாடல்.. அதுவும் இல்லாம அந்தப் பாடலோட ஆரம்பம் படத்துல ஒரு முக்கியமான ட்விஸ்டோட வருது... அது என்னன்னு படத்தைப் பாத்து தெரிஞ்சுக்கோங்க... ஆனா... மேட்டர் ஒன்னும் பெருசா இல்லை... கமல் தசாவதாரத்துல சொல்லிருந்த அதே பட்டர்பிளை எஃபக்ட்தான்....
கமல் அவரை வேவு பாக்கத்தான் வந்திருக்காருன்னே தெரியாம அவரோட நட்பா பழக ஆரம்பிச்சுடறாங்க திரிஷா.... அந்த ஃபிளாஷ்பேக் சீனுக்கு அப்புறம்... ரெண்டு பேருமே அவங்களுக்குள்ள மறைச்சி வெச்சிருக்கற உண்மைய ஒருத்தொருக்கொருத்தர் சொல்லிடனும்னு நினைக்கிறாங்க.. அந்த சீனெல்லாம் நல்லாருக்கு...

பின்னணி இசை நல்லாருக்கு... பாட்டெல்லாம்.. படத்தோட திரைக்கதையோட ஒட்டியே வர்றதால எதுவும் தனியா பிரிச்சு பாக்க முடியாதபடி நல்லாருக்கு பாக்கறதுக்கு....

படத்துக்கு இன்னொரு பெரிய பிளஸ்.. வசனங்கள்... படம் ஆரம்பிச்சதுல இருந்தே நிறைய வசனங்கள் நல்லாருக்கு.... வசனத்துக்காகவே இன்னொரு தடவை பாக்கலாம்னு இருக்கேன்... அதே நேரம்....

தமிழ் மெல்லச் சாகட்டும்
தமிழ் பொருக்கப் போயிருக்கு

அப்படிங்கற வசனம்லாம் வந்து கோவப்படுத்தறதையும் சொல்லியாகனும்... இந்த ரெண்டு வசனம் வந்துதான்.. இது கலைஞரோட பேரன் தயாரிச்சப் படம்ங்கறதை நியாபகப்படுத்துது.... ஏன் இப்படில்லாம்... கலைஞர் ஐயா... நீங்க இதுக்கு ஒரு நியாயம் சொல்லுங்கய்யா....

படம் ஆரம்பத்துல இருந்தே சீரியஸா போகுது... அங்கங்க லைட்டா சிரிக்க முடியுது.. அப்புறம் இடைவேளைக்கு அப்புறம்... மாதவனும் வந்து இவங்களோட சேர்ந்தப்புறம் கொஞ்ச நேரம் நல்ல காமெடி... ஆனா கிளைமேக்ஸ்.. ஏத்துக்கக் கூடியதா இல்லை.... சப்புன்னு ஆயிடுது... என்ன இப்படி பண்ணிட்டாங்க அப்படின்னு ஒரு நினைப்பு வந்திடுது..

மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு..

64 comments:

  1. எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

    அன்புச் சகோதரன்...
    மதி.சுதா.
    மறக்கப்பட்ட பிரபல பாடகர்கள் Boney M (கிறிஸ்மஸ் சிறப்பு பதிவு)

    ReplyDelete
  2. KS Ravikumar அவருடைய விசிறி நான் கண்டிப்பா பாப்பேன். நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  3. தங்கள் பார்வையும் நல்லாயிருக்கிறது.. வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  4. படத்துக்கு கே எஸ் ரவிக்குமார்தான் டைரக்டர்ன்னு இன்னும் நம்புறீங்களா மாப்பு சிரிப்பு போலீஸ் ?

    ReplyDelete
  5. சுடசுட விமர்சனம்.......நல்லாருக்கு.....!!!!

    ReplyDelete
  6. @ரமேஷ்

    //வடை//

    எடுத்துக்கோங்க.. உங்களுக்குதான்...

    @ம.தி.சுதா...

    //எனக்குத் தான் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...//

    ஜஸ்ட் மிஸ்ஸு...

    //தங்கள் பார்வையும் நல்லாயிருக்கிறது.. வாழ்த்துக்கள்..//

    நன்றி நண்பரே

    ReplyDelete
  7. @ரமேஷ்

    //KS Ravikumar அவருடைய விசிறி நான் கண்டிப்பா பாப்பேன். நல்ல விமர்சனம்.//

    ஆமாங்க அவர் ஒரு சீன்ல வரார்.. பாருங்க...

    ReplyDelete
  8. @ப்ரியமுடன் வசந்த்

    //நல்ல விமர்சனம் ரமேஷ் !///

    நன்றி நண்பா

    //படத்துக்கு கே எஸ் ரவிக்குமார்தான் டைரக்டர்ன்னு இன்னும் நம்புறீங்களா மாப்பு சிரிப்பு போலீஸ் ?//

    இல்லீங்க வசந்த் படத்துல ஒரு சீன்ல அவர் டைரக்டரா வரார்.. அதைச் சொல்றாருன்னு நினைக்கிறேன்...

    ReplyDelete
  9. /////ப்ரியமுடன் வசந்த் said: 24 December 2010 12:15 AM படத்துக்கு கே எஸ் ரவிக்குமார்தான் டைரக்டர்ன்னு இன்னும் நம்புறீங்களா மாப்பு சிரிப்பு போலீஸ் ?//////

    அதுனாலதான் அவரு சிரிப்பு போலீசு மாப்ள....!

    ReplyDelete
  10. விமர்சனம் நடுநிலையாகவும் நிதானமாகவும் டேக் ஆஃப் ஆகி, ஸேஃப் லேன்டிங்!!

    ReplyDelete
  11. @பன்னிக்குட்டி ராம்சாமி

    வாங்க ராம்சாமி...

    //சுடசுட விமர்சனம்.......நல்லாருக்கு.....!!!!//

    நன்றிங்க

    ReplyDelete
  12. @எம்.அப்துல்காதர்

    வாங்க அப்துல்காதர்

    //
    விமர்சனம் நடுநிலையாகவும் நிதானமாகவும் டேக் ஆஃப் ஆகி, ஸேஃப் லேன்டிங்!! //

    என்னோட விமர்சனத்தை நீங்க விமர்சித்த விதம் அருமையா இருக்குங்க... நன்றிங்க..

    ReplyDelete
  13. ரமேஷ் உங்களோட விமர்சனம் தான் முதலா படிக்கிறேன்.. கண்டிப்பா படம் பார்ப்பேன்... நன்றி

    ReplyDelete
  14. நல்ல விமர்சனம் பாஸ்! எக்குத்தப்பான விமர்சனங்கள் இல்லாததால படம் கண்டிப்பா எல்லா தரப்பு மக்களையும் கவரும் அப்படின்னு நினைக்கிறேன்.

    ReplyDelete
  15. நல்ல விமர்சனம் நண்பரே.. எப்படியோ படம் பார்க்கலாமுன்னு தோணுது...

    ReplyDelete
  16. படத்துக்கு கே எஸ் ரவிக்குமார்தான் டைரக்டர்ன்னு இன்னும் நம்புறீங்களா மாப்பு சிரிப்பு போலீஸ் ?//

    hehe

    ReplyDelete
  17. விமரிசனம் ஜோராக உள்ளது . இங்கு அமெரிக்காவில்
    தமிழ் பத்திரிகை விலை அதிகம் . இலவசமாக தரமான
    விமரிசனம் தந்ததற்கு என் நன்றி

    ReplyDelete
  18. அருமையான விமர்சனம்...ட்விஸ்ட்டைச் சொல்லாமல் விட்டது நல்லது..ஏன்னா படத்துல தேறுவதே அதானே..

    --செங்கோவி

    ReplyDelete
  19. This comment has been removed by the author.

    ReplyDelete
  20. விமர்சனம் நல்லா இருக்கு கடைசியில் மாதவன் கூட சேர்ந்து இருப்பாங்க அவ்வளவு தானே...சூப்பர் விமர்சனம்

    ReplyDelete
  21. புரியற மாதிரி கதை சொல்லிருக்கீங்க. நல்ல விமர்சனம். படம் பெயிலியர் ஆகும்னு தோணுது

    ReplyDelete
  22. என்னை பொருத்தவரை படம் பாடு மொக்கை... கண்டிப்பாக இது மிக பெரிய தோல்விப் படமாக அமையும்... காரணம் இரண்டு..

    1. கமலின் அளவிற்கு சிந்திக்கும் நபர்கள் தமிழகத்தில் வெகு சிலரே...
    2. இது ஏ க்லாஸ் ரசிகனுக்கான படம். பாமரனால் இதை ஊட்கொள்ளவோ ரசிக்கவோ முடியாது.

    கேரளாவிலும், ஆந்திரவிலும் படம் படு தோல்வி என்று செய்திகள் கூறுகின்றன. சென்னையில் சுமாராக ஓடுவதாக நண்பர்கள் கூறி உள்ளனர். இங்கு மலேசியாவில் படம் படு தோல்வி. தேன் தமிழகத்தில் படம் கண்டிப்பாக ஓடாது.

    கமல் மீண்டும் மீண்டும் உலகப் படங்களை தழுவி திரைப்படம் எடுப்பது சிறிது வருத்தமே. அவருக்கு இருக்கும் அறிவிற்கு அவர் சொந்தமாக யோசித்து எடுக்க வேண்டும்...

    பாவம் கமல்... மேலும் ஒரு தோல்விப்படம்... இந்த நிலையில் அவரது 'ஓர்க்குட்' இணைய ரசிகர்கள் இந்த படம் எந்திரத்தை பிளக்கும் என்று சொல்லுகின்றார்கள்... என்ன கொடுமையோ...

    அஜித், விஜய் இவர்களுக்கு கூட, கமல் விட நல்ல ஒப்பனீங் இருக்கும் போல...

    மொத்ததில் மன்மதன் அம்பு... நொந்து போன சொம்பு... மொக்கை படம்.. கலைஞர் டீவீயில் பார்க்க வேண்டிய படம்.. தியேடர் சென்று காசை செலவு செய்வது முட்டாள் தனம்... மேலும்.. இந்த கலைஞர் குடும்ப ஆதிக்கத்தை ஆதரிக்க கூடாது...

    ReplyDelete
  23. மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு.///
    இந்த பஞ்ச் சூப்பர் :)

    ReplyDelete
  24. @வினோ

    //ரமேஷ் உங்களோட விமர்சனம் தான் முதலா படிக்கிறேன்.. கண்டிப்பா படம் பார்ப்பேன்... நன்றி//

    கண்டிப்பா பாருங்க.. வினோ நன்றி..

    @பாலாஜி சரவணா

    //நல்ல விமர்சனம் பாஸ்!//

    நன்றிங்க பாலாஜி

    @வெறும்பய

    //நல்ல விமர்சனம் நண்பரே.. எப்படியோ படம் பார்க்கலாமுன்னு தோணுது...//

    வாங்க ஜெயந்த்.. ஆமாம் படம் கட்டாயம் பாக்கலாம்.. ஆனா.. காதல் படங்களுக்கு படம் முடியும் போது வர்ற ஃபீல் இதுல வரலை...

    @மீனா

    //விமரிசனம் ஜோராக உள்ளது . இங்கு அமெரிக்காவில்
    தமிழ் பத்திரிகை விலை அதிகம் . இலவசமாக தரமான
    விமரிசனம் தந்ததற்கு என் நன்றி//

    ரொம்ப நன்றிங்க மீனா

    @செங்கோவி

    //அருமையான விமர்சனம்...ட்விஸ்ட்டைச் சொல்லாமல் விட்டது நல்லது..ஏன்னா படத்துல தேறுவதே அதானே..//

    நன்றிங்க.. உண்மைதாங்க

    @பி.தளபதி

    வருகைக்கு நன்றிங்க...

    @செளந்தர்

    //விமர்சனம் நல்லா இருக்கு கடைசியில் மாதவன் கூட சேர்ந்து இருப்பாங்க அவ்வளவு தானே...சூப்பர் விமர்சனம்//

    நன்றிங்க.. அதுதான் இல்லை.. அந்தக் கொடுமையை ஏன் கேக்கறீங்க...

    @மோகன் குமார்

    //புரியற மாதிரி கதை சொல்லிருக்கீங்க. நல்ல விமர்சனம். படம் பெயிலியர் ஆகும்னு தோணுது//

    நன்றிங்க படம் ஃபெயிலியர் ஆகும்னு சொல்ல முடியாது.. ஆவரேஜா கலெக்ட் ஆகும்னு நினைக்கிறேன்..

    @வி.ஜே

    வருகைக்கு நன்றிங்க... மினி விமர்சனமே போட்டுட்டீங்க...

    @கார்த்திக்குமார்

    //மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு.///
    இந்த பஞ்ச் சூப்பர் :)//

    வாங்க பங்கு... நன்றிங்க

    ReplyDelete
  25. விமர்சனம் நல்லாயிருக்கு! படம் சுமார்தானா?

    ReplyDelete
  26. படத்தோட மொத்த கதையையும் சொல்லிட்டு கடைசியில மட்டும் டிவிஸ்ட் வைக்கிறீங்களே என்ன நியாயம்? :-) நல்ல விமர்சனம்.

    ReplyDelete
  27. @எஸ்.கே

    //விமர்சனம் நல்லாயிருக்கு! படம் சுமார்தானா?//

    படம் நல்லாருக்குங்க எஸ்.கே... ஆனா.. கிளைமேக்ஸ் திருப்தியா இல்லை...

    ReplyDelete
  28. @இரவு வானம்

    //படத்தோட மொத்த கதையையும் சொல்லிட்டு கடைசியில மட்டும் டிவிஸ்ட் வைக்கிறீங்களே என்ன நியாயம்? :-)//

    அப்படி இல்லீங்க நண்பா... நான் முழுக்கதையும் சொல்லலை.. முதல் 20 நிமிசக் கதை மட்டும்தான் அப்படியே சொன்னேன்.. மத்தபடி நம்ம ஹீரோவுக்கான கதையை எதுவும் சொல்லாமத்தான் விமர்சனம் எழுதிருக்கேன்.. படம் பாத்தீங்கன்னா உங்களுக்கே புரியும்..

    //நல்ல விமர்சனம்.//

    நன்றி நண்பா..

    ReplyDelete
  29. மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு..

    அருமை

    ReplyDelete
  30. Hello ramesh,

    Before put the review of the film. You should see the movie. where and when you watch the movied in bangalore

    ReplyDelete
  31. Movie release today only. Have you seen the movie?

    How you guys are put review like these. If really u watch the movie.. then u dont have any work in bangalore i believe.

    ReplyDelete
  32. @vivek.dgl

    //Hello ramesh,

    Before put the review of the film. You should see the movie. where and when you watch the movied in bangalore

    Movie release today only. Have you seen the movie?

    How you guys are put review like these. If really u watch the movie.. then u dont have any work in bangalore i believe//

    ஹல்லோ... படமே பாக்காம விமர்சனம் போட என்னை என்ன கேனப்பயன்னு நினைச்சீங்களா.. விவரம் புரியாம யாரையும் பிளேம் பண்ணாதீங்க முதல்ல.. படம் நேத்தே ரிலீஸ் ஆயிடுச்சு.. இங்க பெங்களூர்ல.. வைபவி (உத்தரஹல்லி), மாதேஸ்வரா (பனசங்கரி) ரெண்டு தியேட்டர்லயும் ரிலீஸ் ஆயிருக்கு.. இது என்னோட ஆபிஸ் பக்கத்துல இருக்கற தியேட்டர்ஸ் அதனால எனக்குத் தெரியும்..
    மத்த தியேட்டர்லாம் எதுன்னு தெரியலை.. கூகுள்ல சர்ச் பண்ணுங்க வரும்.. மத்தபடி பெங்களூர்ல எனக்கு என்ன வேலைன்னு இல்லாம் நீங்க ஆராய்ச்சி பண்ண வேண்டியது இல்லை.. போய் உருப்படியா வேற வேலை இருந்தா பாருங்க...

    ReplyDelete
  33. i am kamal fan. i do not diggest your comments. thats why i put wrong comments to u. if i hurt u sorry..

    ReplyDelete
  34. @vivek.dgl

    //i am kamal fan. i do not diggest your comments. thats why i put wrong comments to u. if i hurt u sorry..//

    எனக்கும் கமல் படம் பிடிக்கும்.. கமல் ரசிகர்களைக் கோவப்படுத்தற மாதிரி நான் இதுல எதுவும் எழுதலைன்னு நினைக்கிறேன்.. சரி விடுங்க.. எதுக்கு நாம சண்டை போட்டுக்கிட்டு..

    ReplyDelete
  35. @கஸாலி

    வாங்க கஸாலி...

    //மன்மதன் அம்பு - இலக்கு வரை சரியாகப் பாய்ந்து... கடைசி நேரத்தில் குறிதவறிய அம்பு..

    அருமை//

    நன்றிங்க

    ReplyDelete
  36. அந்த ரிவர்ஸ் செக்மெண்ட்டுக்காகவாச்சும் பார்கறேன் ரமெஷ்

    @ vivek.dgl
    //How you guys are put review like these. If really u watch the movie.. then u dont have any work in bangalore i believe.//
    Boss whats your problem? உங்களுக்கு டிக்கெட் கிடைக்கலைனு பொறாமையா இல்லை, கமல் மேல கோபமா இல்ல, ரமெஷ் மேல கோபமா?

    ReplyDelete
  37. @அருண் பிரசாத்

    //அந்த ரிவர்ஸ் செக்மெண்ட்டுக்காகவாச்சும் பார்கறேன் ரமேஷ்//

    ஆமாங்க அருண்.. அதுக்காகவும், வசனத்துகாகவுமே படம் பாக்கலாம்.. பாருங்க..

    //உங்களுக்கு டிக்கெட் கிடைக்கலைனு பொறாமையா இல்லை, கமல் மேல கோபமா இல்ல, ரமேஷ் மேல கோபமா?//

    சப்போர்ட்டுக்கு ரொம்ப நன்றிங்க அருண்...

    ReplyDelete
  38. @தமிழ்க்காதலன்

    வாங்க.. நன்றிங்க..

    ReplyDelete
  39. அந்த பாட்டு சீன் உண்மைலயே சூப்பர் தல.... அருமையான expression .. அப்பறம் முக்கியமா timing காமெடி தான் எல்லாமே .... ஒன்னும் குறிப்பிட்டு சொல்ல முடியாது...ஆனா எனக்கு புடிச்சது உங்களுக்கு புடிக்காத கிளைமாக்ஸ்....

    ReplyDelete
  40. @அருண் பிரசாத்

    //அந்த பாட்டு சீன் உண்மைலயே சூப்பர் தல.... அருமையான expression .. அப்பறம் முக்கியமா timing காமெடி தான் எல்லாமே .... ஒன்னும் குறிப்பிட்டு சொல்ல முடியாது...ஆனா எனக்கு புடிச்சது உங்களுக்கு புடிக்காத கிளைமாக்ஸ்....//

    ஆமாங்க.. டைமிங் காமெடிதான்.. அதுவும் இல்லாம வசனமே இல்லாம.. பேக்ரவுண்ட்ல இருக்கற ஃபுட்பால் பிளேயர்.. டேன்சர் பெண்களோட சைகைகள்னு காமெடி பண்ணியிருந்ததும் நல்லா இருந்தது.

    தன்னோட மனைவியோட சாவுக்குக் காரணமாக (தெரியாமத்தான்னாலும்) இருந்தவளையே கல்யாணம் பன்னிக்கறார்ங்கறதை ஏத்துக்க முடியலை என்னால..

    ReplyDelete
  41. தன்னோட மனைவியோட சாவுக்குக் காரணமாக (தெரியாமத்தான்னாலும்) இருந்தவளையே கல்யாணம் பன்னிக்கறார்ங்கறதை ஏத்துக்க முடியலை என்னால..//

    நீங்க சொல்றது சரி தான்... அத explain பண்ற மாறி சீன் இல்ல....

    ReplyDelete
  42. நடு நிலையா இருக்கு கருத்து அது வரை ஓக்கே தான் :-)

    ReplyDelete
  43. @ஜெய்லானி

    //நடு நிலையா இருக்கு கருத்து அது வரை ஓக்கே தான் :-)//

    நன்றிங்க..

    ReplyDelete
  44. @ஆனந்தி

    //ok ok..:)))

    இதுக்கு என்ன அர்த்தம்னு புரியலீங்க..

    ReplyDelete
  45. @ஆனந்தி

    //Meant it is good and good:)) ))//

    ஓ... ரொம்ப நன்றிங்க.. ஆனந்தி..

    ReplyDelete
  46. நான் கமலின் தீவிர ரசிகன்.. நானும் ப்ரிவியு காட்சி பார்த்தேன். உங்க விமர்சனம் நல்ல நடுநிலைமையா இருந்தது.. இன்னும் சொல்லப் போன ரொம்ப டீசண்டா நல்ல விஷயங்களை மட்டும் தான் சொல்லியிருக்கீங்க.. கொஞ்சம் டிராமா மாதிரி தான் இருந்தது.

    மன்மதன் அம்பு - கமலின் பார்வையில் -- http://kovaiaavee.blogspot.com/2010/12/blog-post_24.html

    ReplyDelete
  47. விமர்சனம் சூப்பர் நண்பா .. படம் செம பொழுதுபோக்கு ,கத்தாரில் அதிகமான தமிழ் படங்கள் வெளியிடுவதில்லை இந்த வருடம் வெளியான படங்களிலேயே படம் ஆரம்பத்தில் இருந்து கடைசிவரை திரையரங்கு சிரிப்பிலே கதிகலங்கியது ...நீண்ட நாட்களுக்கு பிறகு சலிப்பு வராமல் பார்த்த படம்

    ReplyDelete
  48. I don't like Kamal for his "thalaik kanam" He pretends as if he is the only person to uplift the status of Tamil film to that of Hollywood films. His films equal Hollywood movies only in kissing scenes.

    Hell with Kamal!

    ReplyDelete
  49. உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக்கொள்ளவும். நன்றி!!
    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

    ReplyDelete
  50. படம் ஆரம்பத்துல இருந்தே சீரியஸா போகுது... அங்கங்க லைட்டா சிரிக்க முடியுது.//
    கமல் படங்கள் இப்பல்லாம் இப்பிடித்தான் இருக்கு நல்ல விமர்சனம்

    ReplyDelete
  51. விமர்சனம் அருமையா இருக்கு நல்ல டச்

    ReplyDelete
  52. பகிர்வுக்கு நன்றிங்க

    ReplyDelete
  53. I would have preferred to see a few more examples that didn't have anything to do with Nevertheless, your advice has me going back to an upcoming post on my own blog so I can "fine tune the Website Design Delhi

    ReplyDelete
  54. உங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கேன் நேரம்
    கிடைக்கும்போது பார்க்கவும்.

    http://blogintamil.blogspot.com/2011/06/blog-post_07.html

    ReplyDelete
  55. மிகசிறந்த விமர்சனம் பாராட்டுகள்

    ReplyDelete