Search This Blog
Wednesday, July 28, 2010
ஃபிளைட்பிளான் (2005) -திரை விமர்சனம் (Flightplan)
Robert Schwentk இன் இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த படம்தான் ஃபிளைட்பிளான். விபத்தில் கணவன் இறந்துவிட...அந்த கணவனின் சடலத்துடன் தனது 6 வயது குழதையுடன் விவரிக்க முடியாத துயருடன் விமானத்தில் தன் சொந்த ஊருக்கு பயணிக்கிறாள் ஒரு பெண் (ஜூடி ஃபோஸ்டர்). தூக்க மாத்திரைகள் உட்கொண்டதால் சிறிது நேரம் தூங்கிவிடுகிறாள். எழுந்து பார்த்தால் அவள் குழந்தை அவள் அருகில் இல்லை. தன் குழந்தையைத் தேடி விமானத்தில் அங்கும் இங்கும் படபடப்புடன் அழைகிறார்..விமானத்தில் எங்கு தேடியும் குழந்தை கிடைக்கவில்லை. நடுவானில் பறந்து கொண்டிருக்கும் விமானத்தில் இருந்து குழந்தை எவ்வாறு காணாமல் போயிருக்கும். அதுவரை சற்று மெதுவாக நகரும் திரைக்கதையில் வேகம் பிடிக்கிறது. என்ன ஆயிருக்கும் என்று நம்மையும் யோசனையோடே படம் பார்க்கத் தூண்டுகிறது திரைக்கதை.
குழந்தையைத் தேடி ஜூடி ஃபோஸ்டர் தவிக்கும் போது நமக்கும் தொற்றிக் கொள்கிறது அந்தத் தவிப்பு. அந்த விமானத்தில் பயணம் செய்யும் பயணிகள் யாருமே அந்தக் குழந்தையைப் பார்த்திருக்கவில்லை. விமானப் பணிப்பெண் ஒருவரும் விமானத்தில் அப்படி ஒரு குழந்தை பயணிக்கவே இல்லை. ஜூடி மட்டுமே விமானத்தில் ஏறினார் என்கிறார். சிறிது நேரத்தில் திடீரென ஒரு வயர்லெஸ் செய்தி வருகிறது. அதில் ஜூடியின் கணவன் கட்டிடத்தின் கூரையில் இருந்து விழுந்து இறக்கும் போது அவளது 6 வயது மகளும் உடன் இருந்ததாகவும் அவளும் அந்த விபத்தில் இறந்துவிட்டாள் என்ற செய்தி இருக்கிறது. இதைக்கேட்டு ஜூடி மிகவும் அதிர்ச்சி அடைகிறார். அவர் அதை மறுக்கிறார். ஆனால் அனைவருமே அவளை நம்ப மறுக்கின்றனர். அனைவரும் அவளை ஒரு மனநோயாளியைப் போல் பார்க்கின்றனர். நாமும் சிறிது நேரம் அவ்வாறுதான் நினைப்போம். அப்படித்தான் இருக்கிறது காட்சி அமைப்பு.
யாருமே அவளை நம்ப மறுக்கும் போதும் ஏர் மார்ஷல் கார்சன் மட்டும் அவளுக்கு உதவுகிறான். அவனிடம் எப்படியாவது எனக்கு உதவுங்கள் என் குழந்தை இறக்கவில்லை. அவள் இந்த விமானத்தில் என்னுடன் பயணம் செய்தது உண்மை அவள் நிச்சயம் இங்குதான் எங்கோ இருக்கிறாள் என்கிறாள். அவனும் சரி என்று கூறிவிட்டு. கேப்டனிடம் பேசுவதாகக் கூறிவிட்டு. கேப்டனைச் சந்திக்கிறான். அப்போதுதான் கதையே மாறுகிறது. அதற்குப் பின் நமக்கு எல்லாமே புரிந்துவிடுகிறது. எனினும் அதற்குப் பிறகு வரும் காட்சிகள் விருவிருப்பின் உச்சம்.
படம் முழுவதும் விமானத்திற்குள்தான் என்றாலும் படம் ஆரம்பித்து 10 நிமிடம் வரை சிறிது மெதுவாக நகர்ந்து பின் வேகமாக டேக் ஆஃப் எடுக்கிறது திரைக்கதை, அதற்குப் பிறகு இறுதி வரை நம்மையும் படபடப்போடே பார்க்கத் தூண்டுகிறது படம். 90 நிமிடங்களில் படம் முடிந்துவிடுகிறது. ஒரு நல்ல திரில்லர் பார்த்த திருப்தி நிச்சயம், கூடவே படத்தில் உணர்ச்சி மயமான காட்சிகளுக்கும் குறைவில்லை.
Subscribe to:
Post Comments (Atom)
நல்ல விமர்சனம் ரமேஷ், நீங்க சொல்றதப் பார்த்தா படம் நல்ல விறுவிறுப்பா தான் இருக்கும் போல. சீக்கிரம் பார்த்துட்டு வந்து சொல்றேன்.
ReplyDeleteவிமர்சனமும் சூப்பர்,பிளாக்கோட லே அவுட்டும் சூப்பர்
ReplyDeleteதங்கள் வருகைக்கு நன்றி சி.பி. செந்தில்குமார்
ReplyDeleteஇன்னும் பார்க்கவில்லை,இனிமேல தான் பாக்கணும் ரமேஷ், பார்க்கணும் போல தூண்டுகிறது உங்க விமர்சனம்...பார்த்துட்டு சொல்றேன்
ReplyDeleteபாராட்டுக்கு நன்றி விஜய்...கண்டிப்பா பாருங்க..
ReplyDelete