Wednesday, August 18, 2010

நித்திய சேகரானந்தா.....


நித்தியானந்தாவின் திடீர் தீவிர பக்தர் ஆகியிருக்கும் எஸ்.வி. சேகரின் பேட்டியை ஒரு வார இதழில் படிக்க நேர்ந்தது...

அவரு பெங்களூருக்கு ஒரு நாடகத்துக்காக வந்திருந்தாராம் (நானும் பெங்களூருதான்). அப்ப அவருக்கு தொண்டைல பிரச்சினை வந்துச்சாம்..உடனே நித்தியானந்தா ஞாபகம் வந்துச்சாம்...அவரை ஏன் இப்படி துரத்துறாங்களோ தெரியலையே? அப்படின்னு அவரு மேல பரிதாபம் வந்துச்சாம்...பாவம் இந்த மேட்டர் சன் பிக்சர்ஸ் பட விளம்பரம் ரேஞ்சுக்கு (படம் ரேஞ்சுக்கு இல்ல) ஓடனப்ப இவரு பாக்கலை போல இருக்கு...ஏன்னே தெரியலைன்னு வருத்தப்படறாரு....

உடனே அவர போய் பாத்தாராம்...அவரு தொண்டைல (!!!!!!!) திருநீறு வெச்சு எதோ பிரார்த்தனை பண்ணாராம்...என்ன ஆச்சரியம் உடனே சரி ஆயிடுச்சாம்...

என்னாங்க சார் கூத்தடிக்கறீங்க...கடவுள் நம்பிக்கைக்கு..இந்த மாதிரி ஆசாமிங்க நம்பிக்கைக்கும் நிறைய வேறுபாடு இருக்கு...இப்ப கூட அவருக்கு சக்தி இருக்கறதாலதான்..இவ்வளவு பிரச்சினைக்கு அப்புறமும் வெளிய வந்துட்டாருன்னு..யாராவது சொல்ல வந்தீங்கன்னா தயவு செஞ்சு புரிஞ்சுக்கங்க..அவருக்கிட்ட இப்ப இருக்கற ஆற்றல்.. கோடிக்கணக்குல இருக்கற பணம்...

இதுல சைக்கிள் கேப்ல அவர விமர்சிக்கறவங்களை பயமுறுத்தவும் ட்ரை பன்றார் இந்த எஸ்.வி சேகர்..

சங்கராச்சாரியாரை கைது செய்தவர்களுக்கு ஒருவருக்கு கிட்னி ஃபெயிலியர் ஆயிடுச்சாம், ரெண்டு பேரு கை விளங்காம போயிட்டாங்களாம்...
எப்படி பயமுறுத்தறாரு பாருங்க....

அப்புறம் அந்த நடிகை ரஞ்சிதாவே இல்லையாம்..உலகத்துல ஒரே மாதிரி 7 பேரு இருப்பாங்களாம்...மீதி இருக்கற 6 பேத்துல ஒருத்தராம் அவர்...ஸ்ஸ்ஸ்ஸ்...அப்பா...முடியலை......

அடுத்து அவர் சொன்னதுதான் பயங்கர காமெடி நித்தியானந்தாவின் புத்தகங்களை வாங்கி அட்டைப்படத்தைக் கிழித்துவிட்டு படித்துப் பார்க்கனுமாம்....அது என்ன சரோஜா தேவி புத்தகமா அட்டைப்படத்தைக் கிழிச்சுட்டு புக்குக்குல்ல ஒழிச்சு வைச்சுப் படிக்க.....இவரு நித்தியானந்தாவுக்கு சப்போர்ட் பன்றாரா...கிண்டல் பன்றாராங்கறதையே வேற மறந்திட்டாரு போல...(இப்ப தமிழக அரசியல்ல....எந்த கட்சில இருக்கம்னே தெரியாம இருக்காறே...அப்படி)

நித்தியானந்தாவுக்கு எதிரான சதி..கடவுள் நம்பிக்கையுள்ள இந்துக்களுக்கு எதிரான சதியாம்....மதத்திற்கு எதிரான செயலாம்.....

ஐயா நானும் கடவுள் நம்பிக்கை உள்ளவன்தான்... மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்கள் சார்ந்த மதத்து மேல நிச்சயம் நல்ல மதிப்பு இருக்கும் அல்லது மத நம்பிக்கை இல்லைன்னு சொல்றவங்களுக்கு அவங்களோட கொள்கை மீது மிகுந்த நம்பிக்கை இருக்கும்....இரண்டும் ஒன்னுதாங்கறது என் கருத்து....அப்படி நான் பிறந்த இந்து மதத்தின் மீது எனக்கு ஒரு நல்ல மதிப்பு இருக்கிறது.....தயவு செய்து...இப்படி புறம்போக்கு (நில) சாமியார்களையெல்லாம்...இந்து மதத்தின் பிரதிநிதிகளாக சித்தரித்து இந்து மதத்தை கேவலப்படுத்தாதீர்கள்...இந்து மதத்தை கேவலப்படுத்துவது....இது போன்ற ஆட்களை எதிர்ப்பவர்கள் அல்ல..இது போன்ற சாமியார்களையும் கூட ஆதரித்து பேசும் நீங்கள்தான் என்பதை புரிந்து கொள்ளுங்கள்...


7 comments:

 1. // அப்புறம் அந்த நடிகை ரஞ்சிதாவே இல்லையாம்..உலகத்துல ஒரே மாதிரி 7 பேரு இருப்பாங்களாம். //

  இவங்கள விடமாட்டாங்க போல...

  ReplyDelete
 2. ஆமாம்...இந்த மேட்டர்ல...பாதிப்பு ரஞ்சிதாவுக்கு மட்டுதான்...

  ReplyDelete
 3. ஆஹா..... கிளம்பிட்டாங்கையா கிளம்பிட்டாங்க. :-)

  ReplyDelete
 4. நித்ய சேகரானந்தா வாழ்க வாழ்க :)

  ReplyDelete
 5. ஆஹா மறுபடியும் வந்துட்டாங்கய்யா

  இனி அடுத்த டி.விக் காட்சி எப்பங்க

  ReplyDelete
 6. currency கை மாறி இருக்குமோ ?

  ReplyDelete
 7. இப்ப அதுதான் நடக்குதுன்னு நானும் கேள்விப்பட்டேன்...இருக்கலாம்..விஜய்..

  என்னுடைய பதிவுகள் அனைத்துக்கும் வந்து உங்களுடைய கருத்துக்களை பகிர்ந்துகொள்வதற்கு..நன்றி விஜய்...

  ReplyDelete