Search This Blog

Friday, August 20, 2010

மருத்துவரும் நானும்..

நீயா? நானா? - மருத்துவர்களும் நாமும்.. என்ற தலைப்பில் நீயா? நானா? நிகழ்ச்சி குறித்து நான் எழுதியிருந்த பதிவிற்கு புருனோ என்ற மருத்துவர் பின்னூட்டம் அனுப்பி இருந்தார்..இருவருக்கும் நடந்த விவாதங்களை உங்கள் பார்வைக்கும் கொடுக்க நினைக்கிறேன்....இனி அதைப் பார்ப்போம்...

Blogger புருனோ Bruno said...

 //உண்மையில் நமக்குத் தெரிந்து எத்தனை மருத்துவர்கள் நோயாளியின் பிரச்சினையை முழுமையாகக் கேட்கின்றனர்? //

அனைவரும்.

ஆனால் எத்தனை நோயாளிகள் மருத்துவர் கூறுவதை முழுவதும் கேட்கிறார்கள் என்றால் அது 10 சதத்திற்கும் குறைவு
20 August 2010 7:27 AM

நான்:

வருகைக்கு நன்றி புருனோ..நீங்கள் அனுப்பிய லிங்க் படித்தேன்...கிராமப்புறங்களில் (ஏன்? நகர்ப்புறங்களிலும் கூட) பொதுமக்கள் இவ்வாறு நடந்து கொள்வதும் இயல்பாகவே நடக்கக்கூடிய ஒன்றுதான்..நீங்கள்தான் அவர்களுக்கு புரிய வைத்திருக்க வேண்டும் (வைட்டமின் இஞ்ஜக்சனை போடுவதற்கு முன்பே). அதை விட்டு விட்டு...அவருக்கு ஊசி குத்தினால்தான் சேட்டிஸ்ஃபேக்சன் என்பதற்காக ஒரு வைட்டமின் ஊசியைப் போட்டேன்...என்பது எந்தளவில் சரி...நோயாளியின் பிரச்சினையை எத்தனை மருத்துவர்கள் முழுமையாக கேட்கின்றனர்? என்ற கேள்விக்கு...அனைவரும் என்ற உங்களது ஒற்றை வார்த்தை பதில் நிச்சயம் ஏற்புடையதல்ல..என்பது...உங்களுக்கும் நன்றாகவே தெரியும்..நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறீர்கள் மறுக்கவில்லை...ஆனால்..எல்லோரும் அப்படித்தான் இருக்கிறோம் என்று சொல்வது..முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைக்கும் வேலை..மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.

Blogger  புருனோ Bruno said...

மருத்துவர் மீது அவநம்பிக்கையுடன் இருப்பவருக்கு எப்படி புரிய வைப்பது

ஒரே நாளில் அனைவருக்கும் புரிய வைக்க முடியாது. தொடர்ந்து முயற்சி நடந்து கொண்டு தானிருக்கிறது. இன்று புரிந்தவர்களுக்கு மாத்திரை, இன்று புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி.

ஆனால் முயற்சி தொடரும்

இன்று புரியாதவர் நாளை புரிந்து கொண்டால் அவருக்கு ஊசி நிறுத்தப்படும்

வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து ஒரு ஐந்து பேருக்கு புரிய வைத்து

அனைவருக்கும் ஒரே நாளில் எப்படி புரிய வைப்பது என்று சொல்லி தாருங்கள்

ஆனால் ஒரு மருத்துவர் முழுமையாக கேட்டபின்னரும், ஊசி தான் வேண்டும் என்று அடம்பிடிப்பவரிடம் ஒவ்வொரு முறையும் முழுவதும் கேட்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நடைமுறையில் சாத்தியமில்லாதது

//மருத்துவர்களின் தவறுகளினால், அலட்சியத்தினால் உயிரிழந்த கதைகளை, உறுப்பிழந்த கதைகளை, அறுவை சிகிச்சை உபகரணங்களை வயிற்றில் வைத்து தைத்துவிடும் கதைகளை நாம் தினம் தினம் காண்கிறோம்..அதனால் அந்த லிங்குகளை எல்லாம்..நான் உங்களுக்கு அனுப்ப வேண்டிய அவசியம் இல்லை என நினைக்கிறேன்.//

தவறு நடக்கிறது
அது 1 சதத்திற்கும் குறைவே

ஆனால் அனைவரையும் குற்றம் சாட்டு போக்கு தான் இருக்கிறது. இதை நீங்கள் மறுக்கிறீர்களா

அதை தவிர தவறு செய்யாவிட்டாலும் குற்றம் சாட்டும் போக்கு இருக்கிறது. இது ஏன். இதை நீங்கள் ஏன் எதிர்க்க மறுக்கிறீர்கள்

இப்படி அனுப்பி இருக்கிறார்..இதற்கு நான் அளிக்க நினைத்த பதில் கீழே...

மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும். நன்றாக பணிபுரியும் உங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் சில மோசமான மருத்துவர்களே காரணம்..அந்த காலத்தில் மருத்துவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று நம்புவார்கள்..இப்போது அப்படியா..என்னுடைய தாயாருக்கு உடல் நலம் குன்றிய போது சேலத்தில் ஒரு மருத்துவரைப் பார்த்தோம். அவர்கள் கொடுத்த மாத்திரையில் எந்த பலனும் இல்லை...பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூர் வரவேண்டி இருந்ததால் வந்துவிட்டோம்..இங்கு வந்து..குணமாகாததால் இன்னொரு மருத்துவரைப் பார்த்தோம்...சேலத்து மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்சனையும் எடுத்துச் சென்றோம்..அதனைப் பார்த்த அவர்..எந்த டாக்டர்கிட்ட போனீங்க..அவர் எழுதிக்கொடுத்த மருந்தே தப்பு...இதற்கு இந்த மருந்தெல்லாம்..எழுதக்கூடாதே...என்று கிலி ஏற்படுத்திவிட்டு..பின்னர் வைத்தியம் பார்த்தார்..சரி ஆகிவிட்டது...ஒரு மருத்துவருக்கு இன்னொரு மருத்துவரே எதிரியாக இருக்கிறார். இப்படி இருந்தால் எப்படி மருத்துவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்...மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஒரு தேசத்தில் உங்கள் பாடு திண்டாட்டம்தான்..ஆனால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் ஒன்றும் குறைவில்லை என்பதையும் மறுக்க முடியாது இல்லையா...

புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...பொதுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.

மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவது நிச்சயம் தவறுதான் ஏற்றுக்கொள்கிறேன்..உங்கள் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு ஒரு சதத்திற்கும் குறைவே..இல்லையா...தவறு நடக்கிறது ஆனால் அது 1 சதத்திற்கும் குறைவே என்று சொல்லி இருக்கிறீர்கள். மருத்துவரின் தவறினால் நூறில் ஒருவர்தானே இறக்கிறார்...அதனால் என்ன பரவாயில்லை என்கிறீர்களா...

29 comments:

  1. //மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...//

    உண்மைதான்

    நாங்கள் மறுக்கவில்லையே

    ஆனால் ஒரே நாளில் அனைவரையும் திருத்த முடியாது

    //அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும்.//

    என்னால் ஒரே நாளில் அனைவ்ரிடமும் நம்பிக்கை ஏற்படுத்த முடியாது

    உங்களால் முடியுமென்றால் உங்களை அழைப்பது எப்படி தவறாகும்

    இந்த விவாதம் ஆரம்பித்த உங்கள் கருத்தை மீண்டும் படியுங்கள்

    ஊசி போடுவது தவறு என்று சொன்னது நீங்கள் தானே

    ReplyDelete
  2. // நன்றாக பணிபுரியும் உங்கள் மீதும் நம்பிக்கை இல்லாமல் போவதற்கும் சில மோசமான மருத்துவர்களே காரணம்..அந்த காலத்தில் மருத்துவர்கள் என்ன சொன்னாலும் சரி என்று நம்புவார்கள்..இப்போது அப்படியா..//

    அதற்கு மற்றொரு காரணம் பொறாமையின் காரணமாக மருத்துவர்கள் மீது தொடர்ந்து கூறப்படும் பொய் குற்றச்சாட்டுக்கள்

    //என்னுடைய தாயாருக்கு உடல் நலம் குன்றிய போது சேலத்தில் ஒரு மருத்துவரைப் பார்த்தோம். அவர்கள் கொடுத்த மாத்திரையில் எந்த பலனும் இல்லை...பின்னர் ஓரிரு நாட்களில் பெங்களூர் வரவேண்டி இருந்ததால் வந்துவிட்டோம்..இங்கு வந்து..குணமாகாததால் இன்னொரு மருத்துவரைப் பார்த்தோம்...சேலத்து மருத்துவர் கொடுத்த பிரிஸ்கிரிப்சனையும் எடுத்துச் சென்றோம்..அதனைப் பார்த்த அவர்..எந்த டாக்டர்கிட்ட போனீங்க..அவர் எழுதிக்கொடுத்த மருந்தே தப்பு...இதற்கு இந்த மருந்தெல்லாம்..எழுதக்கூடாதே...என்று கிலி ஏற்படுத்திவிட்டு..பின்னர் வைத்தியம் பார்த்தார்..சரி ஆகிவிட்டது...ஒரு மருத்துவருக்கு இன்னொரு மருத்துவரே எதிரியாக இருக்கிறார்.//

    எதிரி என்று நீங்களே நினைத்துக்கொண்டால் அது உங்கள் கருத்து

    // இப்படி இருந்தால் எப்படி மருத்துவர்கள் மேல் நம்பிக்கை ஏற்படும்...மக்கள் தொகை அதிகம் இருக்கும் ஒரு தேசத்தில் உங்கள் பாடு திண்டாட்டம்தான்..ஆனால் இந்தியாவில் மருத்துவர்கள் எண்ணிக்கையும் ஒன்றும் குறைவில்லை என்பதையும் மறுக்க முடியாது இல்லையா...//

    //புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...பொதுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.//

    ஐயா

    பிறகு நான் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள். கண்டிப்பாக செய்கிறேன்

    அதையும் கூற மாட்டேன் என்கிறீர்கள்

    குற்றம் கூற வேண்டும் என்பது மட்டும் தான் உங்கள் நோக்கமா

    ReplyDelete
  3. //மருத்துவர் தவறு செய்யாவிட்டாலும் அவர் மீது குற்றம் சாட்டுவது நிச்சயம் தவறுதான் ஏற்றுக்கொள்கிறேன்..உங்கள் பாணியில் பதில் சொல்ல வேண்டுமானால் இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பு ஒரு சதத்திற்கும் குறைவே..இல்லையா...தவறு நடக்கிறது ஆனால் அது 1 சதத்திற்கும் குறைவே என்று சொல்லி இருக்கிறீர்கள்.//

    மன்னிக்கவும்

    அது 99 சதம்

    ReplyDelete
  4. // மருத்துவரின் தவறினால் நூறில் ஒருவர்தானே இறக்கிறார்...அதனால் என்ன பரவாயில்லை என்கிறீர்களா...//

    நான் அப்படி சொல்லவில்லை

    ஆனால் தவறு செய்யாதவர்கள் மீது நீங்கள் ஏன் குற்றம் சுமத்துகிறீர்கள்

    அதைத்தான் தவறு என்கிறேன்

    ReplyDelete
  5. //புரியாதவர்களுக்கு மாத்திரை + ஊசி...என்கிறீர்கள்..ஊசி போட்ட பிறகு எதற்கு மாத்திரை என்று அதனைப் பயன்படுத்தத் தேவையில்லை என்ற எண்ணத்தில் பொதுமக்கள் இருக்கும் போது...உங்களது இந்த வைத்தியத்தினால் என்ன பலன் என்று சொல்லுங்கள்...///

    சரி

    அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள்

    அதையும் கூற மறுக்கிறீர்கள்

    நோயாளிக்கு ஊசி போடுவது நோயாளிக்கு மருத்துவர் மீது நம்பிக்கை ஏற்படுத்தும் செயல்தான்

    //மருத்துவர்கள் மீதான நம்பிக்கையை மருத்துவர்கள்தான் ஏற்படுத்த வேண்டும் புருனோ அவர்களே...அதற்கு எங்களைக் கூப்பிடுவது எப்படி நியாயமாகும்.//

    நாங்கள் தான் நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று கூறுகிறீர்கள்

    ஆனால் அதையும் குற்றம் சொல்கிறீர்கள்

    இது தான் பிரச்சனை

    ReplyDelete
  6. //பொதுமக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற காரணத்தை வைத்து நீங்கள் செய்வதை நியாயப்படுத்தாதீர்கள்.//

    சரி என்ன செய்யலாம்
    நீங்களே கூறுங்கள்

    ஒரு மருத்துவமனைக்கு வந்து குறைந்து ஐந்து பேரிடமாவது பேச நீங்கள் தயாரா

    ReplyDelete
  7. சில மருத்துவர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சொன்னால்..நீங்களே வந்து மருத்துவம் பாருங்கள் என்று சொல்வது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை அல்லது எங்களால் நிச்சயம் மருத்துவம் பார்க்க முடியாது என்பதால்தான் நீங்கள் இப்படி சொல்கிறீர்களா...தயவு செய்து நல்ல மருத்துவர்கள் மோசமான மருத்துவர்கள் பக்கம், அவரும் மருத்துவப்பட்டம் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக சாயாதீர்கள்...நீங்கள் மருத்துவரானது மக்களுக்குக்காகத்தான்...அவர்களை துச்சமாக நினைத்துப் பேசாதீர்கள்..தயவு செய்து...

    ReplyDelete
  8. நிஜமா அருமையான அவசியமான நல்ல பதிவு தோழா, விழிப்புணர்வு ஏற்படுத்த எடுத்த முயற்சிக்கு ஒரு பெரிய சலாம் நண்பா ....டாக்டரிடம் இன்னும் நிறையா இதுபோன்ற பயனுள்ள கேள்விகளை கேட்டு, இன்னும் நிறையா பதிவுகளாய் பதிவு செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்...அருமை தோழா

    இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர் பார்க்கிறேன்

    ReplyDelete
  9. நிச்சயம் செய்வோம் விஜய்...

    ReplyDelete
  10. உங்களது சிறிய தவறுகளும் பெரிதுபடுத்தப்படுகின்றன..என்று குறைபட்டுக்கொள்கிறீர்கள்..உங்களது சிறிய தவறுகளும் பெரிய விளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை அல்லவா....

    குற்றம் கூறுவது மட்டும் எனது நோக்கம் அல்ல..அதற்கு அவசியமும் அல்ல...

    ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்..நாங்கள் மருத்துவர்களை குறை கூறவில்லை...நல்ல மருத்துவர்கள் நிச்சயம் இருக்கிறார்கள்..அவர்களை பாராட்டவும் மக்கள் தயங்குவதில்லை...தங்கள் குழந்தைகளை மற்ற உறவுகளைக் காப்பாற்றிய எவ்வளவோ மருத்துவர்களை...தங்கள் குலதெய்வமாக பாவிக்கும் நிறைய மனிதர்கள் நிச்சயம் நீங்கள் நம்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்...நான் சொல்வது..தவறு செய்யும் மருத்துவர்களை, உங்கள் குழுவில் இருந்து விலக்கி வைக்கத் தயங்காதீர்கள்..அவர் மருத்துவர் என்ற காரணத்திற்காக அவருக்கு சப்பைகட்டு கட்டாதீர்கள் என்பதுதான்..எப்படியும் அனைத்து மருத்துவர்களும் நமக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்ற காரணத்தினால்தான்...மோசமாக நடந்து கொள்ளும் அந்த மருத்துவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.....அதைப் புரிந்து கொள்ளுங்கள்...

    ReplyDelete
  11. தொடரட்டும் உங்கள் பணி.

    ReplyDelete
  12. //சில மருத்துவர்கள் தவறாக நடந்து கொள்கிறார்கள் என்று சொன்னால்..நீங்களே வந்து மருத்துவம் பாருங்கள் என்று சொல்வது எப்படி சரி என எனக்குப் புரியவில்லை//

    உங்களை மருத்துவம் பார்க்க அழைக்கவில்லை

    உங்களை வந்து நோயாளிகளிடம் விளக்கி கூற அழைத்தேன்

    நன்றாக வாசித்து பாருங்கள்

    உங்களுக்கு வைத்தியம் பார்க்க தெரியாது என்று எனக்கு தெரியும் !!

    ReplyDelete
  13. //அல்லது எங்களால் நிச்சயம் மருத்துவம் பார்க்க முடியாது என்பதால்தான் நீங்கள் இப்படி சொல்கிறீர்களா...//

    உங்களை அங்கு வந்து இதய அறுவை சிகிச்சை செய்ய சொல்லவில்லை

    குறைந்தது 10 பேரிடமாவது ஊசி தேவையில்லை என்று விளக்கினால் மருத்துவரின் வேலைப்பளு குறையும் !!

    மருத்துவர் மட்டுமே அவ்வளவு மக்களையும் அறிவுரை கூறி திருத்த பல வருடங்களாகும் என்பதால் உங்கள் உதவி கோரப்பட்டது

    ReplyDelete
  14. //தயவு செய்து நல்ல மருத்துவர்கள் மோசமான மருத்துவர்கள் பக்கம், அவரும் மருத்துவப்பட்டம் பெற்றவர் என்ற ஒரே காரணத்திற்காக சாயாதீர்கள்...நீங்கள் மருத்துவரானது மக்களுக்குக்காகத்தான்...அவர்களை துச்சமாக நினைத்துப் பேசாதீர்கள்..தயவு செய்து...//

    ஐயா

    நான் மக்களை துச்சமாக மதிக்கவில்லை

    அதனால் தான் ஊசி கேட்பவருக்கு ஊசியும் போட்டு மாத்திரையும் உடன் தருகிறேன்

    அதை தவறு என்று கூறியது நீங்கள் தானே ஐயா

    நான் மக்களை துச்சமாக மதித்திருந்தால் “நீ டாக்டரா, நான் டாக்டரா, உனக்கு ஊசி கிடையாது” என்று கூறியிருப்பேன்

    ReplyDelete
  15. //குற்றம் கூறுவது மட்டும் எனது நோக்கம் அல்ல..அதற்கு அவசியமும் அல்ல...//

    மன்னிக்கவும்

    இது வரை நீங்கள் குற்றம் மற்றுமே கூறிவந்துள்ளீர்கள்

    ReplyDelete
  16. //ஒன்றை நீங்கள் புரிந்து கொள்ளாமல் பேசுகிறீர்கள்..நாங்கள் மருத்துவர்களை குறை கூறவில்லை...//

    ஊசி போடுவதை கூட தவறு என்று கூறினீர்களே ஐயா

    அது எந்த வகை :) :) :)

    ReplyDelete
  17. //தங்கள் குழந்தைகளை மற்ற உறவுகளைக் காப்பாற்றிய எவ்வளவோ மருத்துவர்களை...தங்கள் குலதெய்வமாக பாவிக்கும் நிறைய மனிதர்கள் நிச்சயம் நீங்கள் நம்நாட்டில் மட்டுமே பார்க்க முடியும்...//

    எல்லா நாட்டிலும் பார்க்க முடியும்

    ஆனால் தவறு செய்யாத மருத்துவரை கூட குற்றவாளி ஆக்குவது இங்கு மட்டும் தான்

    அதற்கு இந்த வலைப்பதிவுகளில் இருக்கும் இடுகைகளே ஆதாரம்

    ReplyDelete
  18. //நான் சொல்வது..தவறு செய்யும் மருத்துவர்களை, உங்கள் குழுவில் இருந்து விலக்கி வைக்கத் தயங்காதீர்கள்.. அவர் மருத்துவர் என்ற காரணத்திற்காக அவருக்கு சப்பைகட்டு கட்டாதீர்கள் என்பதுதான்..//

    தவறு என்றால் அதை உங்களுக்கு முன்னர் நாங்கள் கண்டிப்போம்

    ஆனால் சரியான வைத்தியத்தை கூட தவறு என்று கூறும் குற்றச்சாட்டுகள் தான் அதிகம் வருகின்றன

    ReplyDelete
  19. //எப்படியும் அனைத்து மருத்துவர்களும் நமக்குத்தான் ஆதரவாக இருப்பார்கள் என்ற காரணத்தினால்தான்...மோசமாக நடந்து கொள்ளும் அந்த மருத்துவர்கள் அலட்சியமாக இருக்கிறார்கள்.....அதைப் புரிந்து கொள்ளுங்கள்...//

    அது சரி சார்

    தவறு செய்யாத போது கூட குற்றம் சாட்டுவது பற்றி உங்கள் கருத்து என்ன

    ReplyDelete
  20. திரு புருனோ அவர்களே..தயவு செய்து...என்னுடைய பதிவு மற்றும் அது தொடர்பான பதில்களை திரும்பவும் படியுங்கள்...உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கும்...

    ReplyDelete
  21. //திரு புருனோ அவர்களே..தயவு செய்து...என்னுடைய பதிவு மற்றும் அது தொடர்பான பதில்களை திரும்பவும் படியுங்கள்...உங்களுக்கு இதற்கு விடை கிடைக்கும்... //

    கிடைக்கவில்லை

    ஒரு வேளை என் கவனக்குறைவாகவும் இருக்கலாம் :) :)

    எனவே எந்த வரி என்று சுட்டிக்காட்டினால் மீண்டும் கவனமாக படித்து தெரிந்து கொள்கிறேன்

    ReplyDelete
  22. ஆரோக்க்யமான விவாதம்..தொடருங்கள்..

    ReplyDelete
  23. உங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி திரு கந்தசாமி அவர்களே...

    ReplyDelete
  24. வருகைக்கு நன்றி ஜெய்..

    ReplyDelete
  25. நண்பரே,
    வாதம் செய்வது பலனளிக்கும்
    விதண்டாவதம் செய்வது?
    ஆகவே,விட்டு தள்ளுங்கள்
    ==
    பிரியாணி ருசியில்லை என்று சொன்னால் நீ பிரியாணி செய்,என்று சொல்லுவது போலிருக்கு,அப்படின்னா பிரியாணி செய்ய தெரிந்தவன் தான் பிரியாணி துண்ணணும் போலிருக்கு.
    ==
    நாம் ஒன்றும் எல்லா மருத்துவர்களையும் சொல்லவில்லையே,சுட்டிக்காட்டுவது கருங்காலி மருத்துவர்களைத்தான்.நல்ல பதிவு போட்டீர்கள்.

    ReplyDelete
  26. ஆமாங்க கீதப்ப்ரியன் சரியா சொன்னீங்க... நானும் அதனால்தான் இவரிடம் வாதம் செய்வது வீண் என விட்டுவிட்டேன்....

    ReplyDelete
  27. //நண்பரே,
    வாதம் செய்வது பலனளிக்கும்
    விதண்டாவதம் செய்வது?
    ஆகவே,விட்டு தள்ளுங்கள்//

    நல்ல கருத்து

    ஆனால் எது விதண்டாவாதம்

    ReplyDelete
  28. //பிரியாணி ருசியில்லை என்று சொன்னால் நீ பிரியாணி செய்,என்று சொல்லுவது போலிருக்கு,அப்படின்னா பிரியாணி செய்ய தெரிந்தவன் தான் பிரியாணி துண்ணணும் போலிருக்கு.//

    பண்பில் சிறந்த கீதப்பிரியன் அவர்களே

    நான் ஒன்றும் ரமேஷ் அவர்களை மருத்துவம் பார்க்க சொல்லவில்லை

    அதற்கான தகுதி அவருக்கு கிடையாது என்று எனக்கு நன்றாகவே தெரியும்

    நான் கூறியதை திரும்ப படியுங்கள்

    ReplyDelete
  29. ஒருவர் பிரியாணி சரியில்லை என்று கூறுகிறார் என்றால்

    அதில் என்ன சரியில்லை என்று கூறவேண்டும்

    உப்பு அதிகமா குறைவா
    காரம் அதிகமா குறைவா
    மசாலா அதிகமா குறைவா
    அதிகம் வெந்து விட்டதா, அல்லது வேகவில்லையா

    என்று கூற வேண்டும்

    அப்படி கூறினால் தான் சமையல் செய்பவருக்கு திருத்த முடியும்

    இப்படி எதுவுமே கூறாமல் மொட்டையாக பிரியாணி நல்லாயில்லை என்று மட்டும் கூறினால் என்ன அர்த்தம்

    கூறுப்வருக்கு ஒன்று நாக்கில் ஊனம் அல்லது மனதில் ஊனம்

    ReplyDelete