Monday, October 04, 2010

எந்திரன் - நாங்கள் பார்த்த முதல் திரைப்படம்

எந்திரன் விமர்சனம் போடலீன்னா நானெல்லாம் ஒரு பதிவரே கிடையாது அப்படீங்கற ரேஞ்சுக்கு இதுவரை விமர்சனமே எழுதியிருக்காத பதிவர்கள்லாம் கூட எந்திரன் படத்துக்கு விமர்சனம் எழுதிட்டாங்க...என்னோட எந்திரன் அனுபவம் கொஞ்சம் வித்தியாசமானது..ஏன்னா நான் இந்தப் படத்தை என் மனைவியுடன் போய் பார்த்தேன்...

இதுல என்னடா வித்தியாசம் இருக்கு...அப்படின்னு திட்டாதீங்க...எங்களுக்கு திருமணம் போன செப்டம்பர் 12 ஆம் தேதிதான் ஆச்சு...எல்லாரும் பாஸ் (எ) பாஸ்கரன் படத்தை திருமணத்துக்குப் பிறகு இரண்டு பேரையும் சேர்ந்து பாக்கச் சொல்லிட்டு இருந்தாங்க...ஏன்னா வேற படம் இல்லையே...ஆனா நான் நாங்க கல்யாணத்துக்கு அப்புறம் பாக்கற முதல் படம் எங்க காலத்துக்கும் மறக்காத விசயங்கள்ல சேரக்கூடியது..அதை எதோ ஒன்னுன்னு போய் பாக்கறதுல எங்களுக்கு விருப்பம் இல்லை...நல்ல படமா போய் பாத்துக்கறோம்னு மட்டும் பதில் சொல்லிட்டு இருந்தேன்..

அப்புறம்...எந்திரன் ரிலீஸ் ஆச்சு...இது பெட்டர் சாய்ஸா இருக்கும்னு நானும் என் மனைவியும் இந்த படத்துக்கு போனோம்....எதிர்பார்ப்பு வீண் போகலை...முதல் பாதி பயங்கற உற்சாகம்...இதுவரை என் வாழ்நாள்ல எந்த படத்தையும் பார்த்து இவ்வளவு உற்சாகமா உணர்ந்ததே இல்லை....அந்த அளவுக்கு பயங்கற உற்சாகத்தக் கொடுத்தது.

இடைவேளைக்கு அப்புறம்..முதல் பாதியில கிடைச்ச அதீத உற்சாகத்துனாலயோ என்னவோ..காட்சிகள் சற்று மெதுவா நகர்ர மாதிரி ஃபீல் ஆச்சு..அப்புறம் நம்ம ரஜினி வில்லன் அவதாரம் எடுத்ததுக்கு அப்புறம்...அதகளம்....பின்னி எடுத்துட்டாரு.. அவருக்கு 60 வயசுன்னு சொன்னா நிச்சயம் யாரும் நம்ப முடியாது.. அவருக்கு 30, 35 வயசு இருக்கும்போதே படத்தை எடுத்து..இத்தனை வருசம் கழிச்சு இப்ப ரிலீஸ் செய்யற மாதிரியே ஒரு ஃபீல்..
பொதுவா ரஜினி படம்னா ஸ்க்ரீன் முழுக்க திரும்பன பக்கம் எல்லாம் அவர்தான் தெரிவார்...மத்த கேரக்டர்ஸ் பத்தி யாருக்கும் அதிக கவனம் இருக்காதுன்னு சொல்லுவாங்க...ஆனா இந்த படத்துல இடைவேளைக்கு அப்புறம்..அவர் வில்லன் அவதாரம் (அவதாரங்கள்) எடுத்ததுக்கு அப்புறம்..உண்மையிலேயே ஸ்க்ரீன் முழுக்க அவர்தான்..படத்துல சிட்டி ரோபோ சார்ஜ் ஏத்திக்கற மாதிரி ரஜினி ஃபேன்ஸ் எல்லாம்..ஃபுல்லா சார்ஜ் ஏத்திக்கிட்ட குஷியோட என்ன பன்றதுன்னே தெரியாம உற்சாக வெள்ளத்துல மிதந்தாங்க..

பொதுவா லாஜிக் பத்தி யோசிச்சா..சினிமா அப்படிங்கற ஒரு மீடியமே இருக்காது...ஆனா படம் பாக்கும் போது அந்த லாஜிக் பத்தியெல்லாம் யோசிக்கவிடாம செய்யறதுலதான் வெற்றியே இருக்கு..அதை இயக்குனர் ஷங்கர் பக்காவா பன்னியிருக்காரு இந்த படத்துல..அவர் அமைச்சுருக்கற காட்சி அமைப்புகள்...நிச்சயமா ரஜினி இருந்தா மட்டும்தான் சாத்தியம்..வேற யார் இந்த பாத்திரத்துல வந்திருந்தாலும் கை கொட்டி சிரிச்சிருப்போம்..

படத்துல இருந்த உற்சாகம் பாடல்கள்ல இல்லைன்னுதான் சொல்லுவேன்...ஏ.ஆர்.ரகுமானோட இசை நிச்சயம் உலகத்தரத்துக்குதான் இருந்தது அதில் சந்தேகமே இல்லை..ஆனா ரஜினி ரசிகர்கள்லாம்..படத்தோட காட்சிகளுக்கு அளித்த உற்சாகமான செயல்பாடுகளை..பாடல்கள்ல செய்ய முடியாம தவிச்சதை வெளிப்படையா உணர முடிஞ்சது..

உணர்வே இல்லாத இயந்திரத்தைக் கொண்டும் உணர்ச்சிப்பூர்வமான காட்சிகளையும் எடுத்து அசத்தியிருக்கிறார் ஷங்கர்..கடவுள் இருக்கிறாரா?, தீ விபத்து, பிரசவம் பார்ப்பது இந்த காட்சிகள் எல்லாம் உதாரணங்கள்..

உணர்ச்சிகள் கொடுக்கப்பட்ட எந்திரன்..என்ன அழிச்சிடாதீங்க..நான் வாழனும்னு ஆசைப்படறேன்னு உருகுவது..உருக்கம்..

மொத்தத்தில் இயற்கையை மீறினால் அது எவ்வளவு ஆபத்தில் கொண்டு போய் விடும் என்பதை...செயற்கையான தொழில்நுட்பங்களை செம்மையாகப் பயன்படுத்தி..கமர்சியலாகச் சொல்லி..அசத்தியிருக்கிறார் ஷங்கர், அதில் ஒரு இயக்குனரின் நடிகராகவே மாறி..தனது கடுமையான உழைப்பைக்கொடுத்து பின்னி பெடலெடுத்திருக்கிறார் ரஜினிகாந்த்..

21 comments:

 1. உங்கள் திருமண வாழ்க்கை நல்லபடியா தொடர என் வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. உங்கள் மணவாழ்க்கை நன்றாக அமைந்திட இறைவனை வேண்டுகிறேன் ..!!

  ReplyDelete
 3. ///.இதுவரை என் வாழ்நாள்ல எந்த படத்தையும் பார்த்து இவ்வளவு உற்சாகமா உணர்ந்ததே இல்லை....அந்த அளவுக்கு பயங்கற உற்சாகத்தக் கொடுத்தது.

  //  அண்ணா அது எந்திரன் படத்துனால இல்ல , அண்ணி பக்கத்துல இருக்கறதால.!!

  ReplyDelete
 4. வாழ்த்துக்கு நன்றிங்க ரமேஷ் & செல்வ குமார்..

  //
  அண்ணா அது எந்திரன் படத்துனால இல்ல , அண்ணி பக்கத்துல இருக்கறதால.!!

  ஹ ஹ ஹ

  ReplyDelete
 5. முதல் படம் கலக்கல் படமாதான் பார்த்து இருக்கீங்க.... வாழ்த்துக்கள்...

  நாங்கள் திருமணத்திற்கு பின் பார்த்த முதல் படம் “தசாவதாரம்” இதையும் பிளான் பண்ணி தான் போனோம் ;)

  ReplyDelete
 6. திருமண வாழ்க்கை நல்லபடியா தொடர என் வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 7. வருகைக்கு நன்றி அருண்.. வாழ்த்துக்கு நன்றிங்க வெறும்பய..

  ReplyDelete
 8. //

  அருண் பிரசாத் said...

  முதல் படம் கலக்கல் படமாதான் பார்த்து இருக்கீங்க.... வாழ்த்துக்கள்...

  நாங்கள் திருமணத்திற்கு பின் பார்த்த முதல் படம் “தசாவதாரம்” இதையும் பிளான் பண்ணி தான் போனோம் ;)//

  யோவ் அருண் உங்ககிட்டா யார் கேட்டா. ஏன் இந்த விளம்பரம்.

  ReplyDelete
 9. வாழ்த்துக்கள். போன செப்டம்பர்-னா? போன வருடமா?

  ReplyDelete
 10. @ ரமெஷ்
  யோவ் அருண் உங்ககிட்டா யார் கேட்டா. ஏன் இந்த விளம்பரம்.//

  யோவ்... நீங்க மட்டும் எந்திரன் பார்த்துட்டேன், எந்திரன் பார்த்துட்டேன்னு எல்லா பிளாக்லயும் கமெண்ட் போடுறப்போ...

  நான் தசாவதாரம் பார்த்துட்டேன்னு போட கூடாதா?

  ReplyDelete
 11. இன்றைய டாப் பிரபல தமிழ் blogs களை www.sinhacity.com il வாசியுங்கள்

  ReplyDelete
 12. அருமை நண்பரே

  ReplyDelete
 13. // அண்ணா அது எந்திரன் படத்துனால இல்ல, அண்ணி பக்கத்துல இருக்கறதால.!! //

  உண்மை அதுவாகவும் இருக்கலாம். ஹி..ஹி..

  ReplyDelete
 14. இனிய திருமண வாழ்த்துக்கள்....ரமேஷ்

  கொஞ்சம் உருகி உணர்ச்சிபோங்க எழுதியிருக்கிங்க ரமேஷ்
  அதுவும் அண்ணியுடன் எந்திரன்....
  தங்க நினைவுகள்....

  ReplyDelete
 15. வாழ்த்துக்கள் நண்பா..!

  -
  DREAMER

  ReplyDelete
 16. இனிய திருமண வாழ்த்துக்கள்

  ReplyDelete
 17. தலைவர் படம் மாதிரியே உங்கள் வாழ்க்கையும் சூப்பரா இருக்கும், வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 18. புதுசா திருமணமானவரா?வாழ்த்துக்கள்

  ReplyDelete