Search This Blog

Tuesday, August 17, 2010

ஒரு ரூபாய்க்கு திரைப்படம்!!!

  சிறு, குறு விவசாயிகளுக்கு புதிய மின் மோட்டார் இலவசமா வழங்கப்படும்னு நம்ம முதல்வர் கருணாநிதி அவர்கள் சுதந்திர தின உரையில் வெளியிட்ட அறிவுப்புகள்ல அறிவிச்சிருக்காரு....

சில ஆண்டுகள்  பின்னாடி போய் பாத்தம்னா...

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி தர ஆரம்பிச்சு..மக்கள் வயித்துல பால வார்த்தாரு முதல்வர்...மக்கள் வயித்துல ஊத்துன பால் மட்டும் இல்ல அது, விவசாயிகள் வாயில ஊத்துன பாலும் கூட.
கஸ்டப்பட்டு வியர்வையை இரத்தமா ஓடவிட்டு...வேலை செஞ்சா..அதுக்கு மதிப்பே இல்லை..ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோன்னா...அவங்களோட உழைப்புக்கு எல்லாம்..என்னங்க மதிப்பு இருக்கு.....அசலை விட கம்மியா ஒருத்தன் விக்கனும்னா..அவன் எவ்வளோ கஷ்டப்படுவான்...கிட்டத்தட்ட விவசாயிங்ககிட்ட இருந்து அதை அடிச்சுப் புடுங்கறாங்கன்னு என்னோட விவசாயி நண்பன் ஒருத்தன் புலம்பினான். ஒருத்தன் வயித்துல அடிச்சு அடுத்தவனுக்கு கொடுத்து... இப்படி ஒரு நல்ல பேரு தேவையா.....

ஏன் இவங்க எடுக்கற படத்துக்கு ஒரு ரூபாய் வாங்கிக்கிட்டு ஜனங்களுக்குக் காட்டச் சொல்லுங்க பாப்போம் செய்றாங்களான்னு...

ஆனா இப்ப தேர்தல் வந்திடுச்சே..விவசாயிங்களுக்கு எல்லாம்..எதாவது செஞ்சாதான அவங்க ஓட்டு விழும்னு...இப்ப பம்பு செட்டு இலவசமாம்...

நல்ல நிலையில இருந்த ஒரு விவசாயிய நீங்களே ஏழை விவசாயியா மாத்திடுவீங்க..அப்புறம் அவன் ஏழையா இருக்கான்னு அவனுக்கு தேர்தல் நேரத்துல இலவசமா கொடுப்பீங்களா....

இலவசம், மலிவு விலை, ஜனங்களுக்கு சலுகைங்கற பேர்ல....நம்ம நாட்ல நடக்குற கொடுமை மாதிரி வேற எங்கயும் நடக்காதுங்க....


18 comments:

  1. இலவசம், மலிவு விலை, ஜனங்களுக்கு சலுகைங்கற பேர்ல....நம்ம நாட்ல நடக்குற கொடுமை மாதிரி வேற எங்கயும் நடக்காதுங்க....///


    சரியா சொல்லி இருக்கீங்க . இலவசம் , இலவசமுன்னு நாட்டையே பாலாக்குராணுக
    பிரீயா இருக்கும் பொது என்னுடைய இந்த பதிவ படிச்சு பாருங்க

    http://manguniamaicher.blogspot.com/2010/06/blog-post_07.html

    ReplyDelete
  2. கண்டிப்பா..இப்பவே படிக்கிறேன்...மங்குனி அமைச்சரே...

    ReplyDelete
  3. நல்ல நிலையில இருந்த ஒரு விவசாயிய நீங்களே ஏழை விவசாயியா மாத்திடுவீங்க..அப்புறம் அவன் ஏழையா இருக்கான்னு அவனுக்கு தேர்தல் நேரத்துல இலவசமா கொடுப்பீங்களா....


    ..... பிள்ளையை கிள்ளி விட்டு, தொட்டில் ஆட்டுற கதைங்க..... :-(

    ReplyDelete
  4. ஆமாங்க..சித்ரா...அதே கதைதான்...ஆனா அதுலயாவது தொட்டில ஆட்டி தூங்க வைப்பாங்க..இதுல தொட்டிலை ஆட்டுகிறேன்..தொட்டிலை ஆட்டுகிறேன்னு..சொல்லியே ஜனங்களை தூங்க வெச்சிடறாங்க...

    ReplyDelete
  5. இது மொத்த தமிழ்நாட்டோட கவலை ரமேஷ்.

    மங்குனி அமைச்சரின் கோபம எல்லாருக்கும் உண்டு.

    தமிழ்நாட்டு மக்கள் எதையும் மறக்கும் மனம் படைத்த படித்த முட்டாள்கள் அல்ல. இந்த இழிநிலையை பற்றி உங்களுக்கு தெரியும் எனக்கும் தெரியும். இருந்தாலும் அநியாயம் மட்டுமே இங்கே நியாயமாகிறது.பணத்திற்கு மட்டும் ஓட்டு போடும் மரியாதை இழந்தவர்கள் (எனக்கு தெரிந்தே பல பேர் உண்டு) இருக்கும் வரை தமிழ்நாடு,கௌரவர்கள் கையில் தான்...

    ReplyDelete
  6. எந்திரன் டிக்கெட்டை ஒரு ரூபாய்க்கு கொடுக்கச் சொல்லவும்.

    ReplyDelete
  7. அருமையான பதிவு. வாழ்த்துகள் ரமேஷ்.

    ReplyDelete
  8. படம் பத்தி சொன்னத ஏத்துக்கலாம்.... எந்த விவசாயி தனது நெல்லை கொள்முதல் நிலையங்களில் ஒரு ரூபாய்க்குக் கம்மியா விற்கிறாங்க அந்த நண்பர்ட்ட கேட்டு சொல்லுங்க...

    இது மத்திய மாநில அரசாங்களோட உணவுக்கிடங்கு அரிசியைத் தான் ஒரு ரூபாய்க்குக் கொடுக்கறாங்களே தவிர நேரடியா விவசாயிகளிடம் 50 பைசாவுக்கு வாங்கி அதை அப்படியே 1 ரூபாய்க்குக் கொடுக்கறது இல்லை..... இன்னமும் நம் நாட்டில் வறுமைகோட்டில் உள்ள ரேஷன் கடை பொருட்களை நம்பற ஜனங்க நிறைய பேர் இருக்காங்க அவங்களுக்கு மட்டும் தான் 1 ரூபாயே தவிர... சாதாரண எந்த மளிகைக் கடையில் 1 ரூபாய்க்கு அரிசி கிடைக்குது...

    நல்ல விசயம் இருக்கும் பட்சத்தில் சிலருக்கு இருக்கும் அசௌகிரியங்கள் இருக்கத்தான் செய்கின்றது.....

    ஆனா படத்துக்கு வரிகளைக் குறைச்சு அதன் விலையைக் குறைக்கலாம் என்பது சரிதான்... ஏன் மிகப்பெரிய நடிகர்கள் கூட தங்கள் சம்பளங்களை குறைத்தாலும் டிக்கெட் விலை குறையும்..........

    ஏன் அவங்க மட்டும் தேர்தலுக்காக செய்யல.... 4 வருசமா மக்கள் செத்தாங்களா பொழைச்சாங்களானு தெரியாத பல ஓய்வாளிகள் திடீரென்று தூங்கி எழுந்து வரிந்துகட்டுறாங்களே!!!!

    ReplyDelete
  9. நீங்க சொல்றது நியாயம்தாங்க அரசு..ஆனா..மளிகைக் கடைகள்ல..ஒரு கிலோ அரிசி விலை குறைந்த பட்சம்..30 ரூபாய்க்கு விக்குது...ஆனா அந்த முப்பது ரூபாய்ல விவசாயிக்கு போய் சேர்ரது வெறும் 4 ரூபாய்தான்..நம்ம நாட்டை பொறுத்த வரைக்கும் உழைப்பவன் ஒருத்தன் பலன் அடையறவன் ஒருத்தனாதான் இருக்கான்..இப்ப அதுல அரசியல்வாதிகளும் சேர்ந்துட்டாங்க..அந்த ஆதங்கத்தைதான் நான் வெளிப்படுத்தி இருக்கேன்...

    ReplyDelete
  10. நன்றாக எழுதி இருக்கிங்க. உங்க ஆதங்கம் நியாமானதே.

    ReplyDelete
  11. என் கருத்தை ஆதரித்தமைக்கு நன்றி பிரியா...

    ReplyDelete
  12. அது சரிதான் ரமேஷ்.. அது இன்று நேற்று அல்ல நமது நாட்டில் காலம் காலமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது... அவங்க இலவசம் கொடுக்கலனாலும் இங்க நிலைமை உடனே மாறிடாது... இன்னைக்கு இவங்க கொடுக்கலனா நாளைக்கு வேறவங்க கொடுக்கப்போறாங்க....


    நிலைமை மாறாதப்போ... கிடைக்கிறதாவது கிடைக்குமே என்ற ஒரு ஏழையின் எதிர்பார்ப்பு...

    யார் வந்தாலும் நம்ம நிலைமை தலைகீழாக மாறாது....

    நமக்கு என்றைக்குமே இப்படி வெறும் ஆதங்கம் மட்டுமே மிச்சம்... அதான் சொன்னேன்......


    இலவச கலர்டிவி வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பு:

    http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=37741

    ReplyDelete
  13. //அது சரிதான் ரமேஷ்.. அது இன்று நேற்று அல்ல நமது நாட்டில் காலம் காலமாகத்தான் நடந்து கொண்டிருக்கின்றது... அவங்க இலவசம் கொடுக்கலனாலும் இங்க நிலைமை உடனே மாறிடாது... இன்னைக்கு இவங்க கொடுக்கலனா நாளைக்கு வேறவங்க கொடுக்கப்போறாங்க....
    நிலைமை மாறாதப்போ... கிடைக்கிறதாவது கிடைக்குமே என்ற ஒரு ஏழையின் எதிர்பார்ப்பு...
    யார் வந்தாலும் நம்ம நிலைமை தலைகீழாக மாறாது....
    நமக்கு என்றைக்குமே இப்படி வெறும் ஆதங்கம் மட்டுமே மிச்சம்... அதான் சொன்னேன்......
    இலவச கலர்டிவி வழக்கில் சமீபத்தில் வந்த தீர்ப்பு://
    யாரு ஆட்சிக்கு வந்தா என்ன ரமேஷ் / சிற்றரசர்,
    இலவசம் (இழவு-வசம்) - என்பது நல்லா நடந்து போயிற்றுக்கும் போதே பாதாள சாக்கடை குழிக்குலே விழற மாதிரித்தான்...
    முதல்ல டிவி....
    ரெண்டாவது அரிசி...
    இந்த ரெண்டுக்கும் மேல மின்வெட்டு...
    இந்தவாட்டி அவங்க இருட்டிலேர்ந்து மக்களை வெளியே கொண்டுவருவது கஷ்டம்தான்..

    ReplyDelete
  14. ஆகாய மனிதனுக்கு நன்றி...!!

    நான் ஒரு திமுக காரராக இருந்தவரின் மகன் என்பதால் மட்டுமல்ல...

    இலவசத்த விடுங்க....

    மின்வெட்டு என்பது தேவை அதிகமானதால் ஏற்பட்ட பாதிப்புதான்... தமிழ்நாட்டில இப்ப பரவாயில்லைனு தான் தோணுது பெங்களூரில நாங்க இருக்கிற ஏரியாவுல ஒரு நாளைக்கு நினைத்த அரை அல்லது ஒரு மணி நேரத்திற்கெல்லாம் ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 5 முதல் 10 முறையாவது மின்வெட்டு அமலாகிறது.... எப்ப வரும் எப்ப போகும்னு தெரியாது...

    அதெல்லாம் வெளியில இருந்து பார்த்தா தமிழ்நாடு இப்ப எவ்வளவோ பரவாயில்லைனுதான் தோணுது....

    அதுக்காக அவங்க நல்லது மட்டுமே பண்றாங்கனு சொல்லல...

    இதுக்கு முன்னாடி இருந்த அரசாங்கம் சரியான மின் திட்டங்களை செயல்படுத்தியிருந்தால், அது இப்ப பயன்பாட்டுக்கு வந்திருக்கும்... நிலைமை இவ்வளவு மோசமா போயிருக்காது... இப்ப போடப்பட்டுள்ள புதிய மின் திட்டங்கள் பயன்பாட்டுக்கு வரும்போது பிரச்சினை இருக்காது... ஒரு திட்டம் செயல்படும் போது அப்போது நமது ஆட்சி இருக்காது என்று எந்தத் திட்டமும் தீட்டலனா இப்படித்தான் அடுத்தவங்கள ஈசியா குறை சொல்லலாம்.....

    இலவசமா டிவி தானே கொடுத்தாங்க... எல்லாமே கொடுக்கலயே....

    http://pathivus.blogspot.com/2009/10/blog-post_29.html

    ReplyDelete
  15. கன்னத்துல அறைஞ்சு கேட்ட மாதிரி கேட்டு இருக்கீங்க ரமேஷ் ..அருமையான கேள்விகள் நிறைந்த பதிவு..வாழ்த்துக்கள் ரமேஷ் ...

    இன்னும் இது போன்ற பதிவுகளை எதிர்பார்க்கிறேன் உங்களிடம்

    ReplyDelete
  16. நிச்சயமா..இது போன்ற பதிவுகள் தொடர்ந்து எழுதுகிறேன்..விஜய்..நம் கேள்விகளுக்கு பதில்தான் யாரிடமிருந்துன்னு தெரியலை...ஆனாலும் நம்ம முயற்சிய நாம செய்வோம்..

    ReplyDelete
  17. அருமையான பதிவு...!உங்கள் பதிவுகளிலே இந்த பதிவு என்னை மிகவும் கவர்ந்துள்ளது.

    ReplyDelete
  18. நல்ல இடுகை வரவேற்கிறேன்

    ReplyDelete