Search This Blog
Monday, October 25, 2010
பயணம் - சிறுகதை
அந்த இரவு நேரத்தில் அந்த அரசுப் பேருந்து தூக்கக் கலக்கத்துடன் நகர்ந்து சென்று கொண்டிருந்தது. ஓட்டுனர் தாமோதரனுக்கு அனுபவம் போதவில்லை என்பது அவர் பேருந்தை ஓட்டிய விதத்திலேயே புரிந்து கொண்டார் அனுபவஸ்தரான நடத்துனர் மனோகரன்.
இந்த தம்பிகிட்ட பேச்சு குடுத்துக்கிட்டெ வந்தாதான் வேலையாகும் போல இருக்கே. இல்லன்னா தூங்கிடுவான் போல இருக்கு என்று நினைத்தார். அதனால் அவனிடம் பேச்சு கொடுத்தார்.
"என்னப்பா தாமோதரா இதுவரைக்கும் உன்ன நான் பார்த்ததே இல்லையே. எந்த ஊருப்பா நீயி"
"நாமக்கல் பக்கத்துல ஒரு கிராமம்னே கொஞ்ச வருசம் பிரைவேட்டா ஓட்டினேண்ணே. இப்பதான்னே அரசு வேலை கிடைச்சது"
"அப்படியா ரொம்ப சந்தோசம். என்ன ஒற்றுமை பாத்தியா நமக்குல்ல. எனக்கு இது கடைசி ட்ரிப்புப்பா"
ஓட்டுனர் தாமோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை.
"என்னண்ணே சொல்றீங்க?"
"ஆமாம்பா நான் இன்னையோட ஓய்வு பெற வேண்டியதுப்பா. சாய்ந்தரம் ஃபங்க்சன்லாம் கூட வெச்சிருந்தாங்களே. அப்புறம் இன்னிக்கு இது சிறப்புப் பேருந்துங்கறதால கண்டக்டர் தேடிட்டிருந்தாங்க. நானா விரும்பி வந்துட்டேன். அப்புறம் நாளைல இருந்து எனக்கு இங்க வேலை இல்லை இல்லையா, அதான்"
"அப்படிங்களான்னே ரொம்ப சந்தோசம்னே. உங்களுக்கு எத்தனை குழந்தைங்கன்னே"
"எனக்கு ஒரே பொண்ணுப்பா அவளுக்கும் இப்ப தேவை நடக்கப்போகுது. எனக்கு ரொம்ப பிடிச்சதே இந்த வேலையும் என் பொண்ணும் தாம்பா. இதோ இன்னியோட இதுவும் முடிஞ்சுடும். அப்புறம் அவளும் கல்யாணமாகிப் போயிட்டா... நினைக்கவே கஷ்டமா இருக்குப்பா"
சிறிது நேரம் அங்கு மவுனம் நிலவியது.
என்ன இது இவனிடம் பேச்சுக் கொடுக்க நினைத்து நம்ம சொந்தப் புலம்பலை ஆரம்பித்து விட்டோமே. என்று சுதாரித்தவராய் பேச்சை வேறு திசையில் திருப்பினார். பேச்சு எங்கெங்கோ சென்றது.. பேருந்தைப் போலவே...
* * *
பிரவீனும் சிவாவும் அந்த அரசு விரைவுப் பேருந்தில் அமர்ந்திருந்தனர். பேருந்து அசுர வேகத்தில் பாய்ந்து சென்று கொண்டிருந்தது.
"நான் இப்ப இருக்கற சந்தோசத்துக்கு அளவே இல்லடா மச்சான். எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்கும்னு நான் எதிர்பார்க்கவே இல்லைடா"
என்று தன் குதூகலத்தை பிரவீனிடம் வெளிப்படுத்தினான் சிவா.
"மச்சி இதையே நீ நூறாவது தடவையா சொல்றடா. வேலை கிடைச்சிருக்கறது சந்தோசமான விசயம்தான். இப்பதான படிச்சி முடிச்சிருக்கோம். இப்ப ஃபீல்டும் ரொம்ப நல்லா இருக்கு. இந்த வேலை கிடைக்கலைன்னாலும் வேற வேலை சீக்கிரம் கிடைச்சிருக்கும்டா மச்சி. நீ ஏன் இவ்ளோ எக்சைட் ஆகறேன்னு புரியலைடா மச்சி"
"அப்படி இல்லடா. உங்கப்பா பெரிய பிசினஸ் மேன். உனக்கு காசு சம்பாதிக்கனும்ங்கற நெசசிட்டி இல்லை. அதாண்டா உனக்கு அருமை தெரியலை. ஆனா நான் அப்படி இல்லைடா. என்ன படிக்க வைக்கிறதுக்காக எங்க குடும்பமே சேர்ந்து கஸ்டப்பட்டதுடா. அப்பா கூலி வேலைதான். யாரையாவது ஒருத்தரைத்தான் படிக்க வைக்க முடியும்னு சொல்லிட்டார். அதனால எங்கக்காங்க மூனு பேரும் படிப்பை பாதிலயே நிறுத்திட்டு அவங்களுக் கூலி வேலைக்கு போனாங்கடா. இனி நான் தலையெடுத்துதான் அவங்களுக்கு கல்யாணம் காச்சின்னு பண்ணனும். இப்ப கூட பாரு. வேலைக்கு நீ முயற்சியே பண்ணலைன்னாலும் சும்மா பெங்களூர சுத்திப் பாக்கனும்னு எங்கூட கிளம்பிட்ட. எங்க ஊர்ல இருந்து திருச்சிக்கே நான் நாலைஞ்சு தடவைதாண்டா வந்திருப்பேன். ஆனா எனக்கு பெங்களூரெல்லாம். ஃபாரின் மாதிரிடா. நீ கூட வரலைன்னா. நான் பயந்து நடுங்கிட்டே இருந்திருப்பேன்டா."
"ஹ ஹ ஹ... சரி அதைவிடு. அக்காங்க கல்யாணத்தை எல்லாம் ஜாம் ஜாம்னு நடத்திடலாம்டா அதான் இப்ப சூப்பர் சேலரில வேலை கிடைச்சிடுச்சே. உனக்கு இனி கவலையே இல்லைடா"
இருவரும் பேசிக்கொண்டிருக்கும் போதே "பட்டீர்" என்று ஒரு வெடிச்சத்தம் கேட்டது. அந்த அரசு விரைவுப் பேருந்தின் ஓட்டுனர் சற்று நிலை தடுமாறி, பின் வண்டியை சாலையின் ஓரத்தில் நிறுத்தினார். உடனே நடத்துனர் இறங்கி என்ன ஆச்சு என்று பார்க்கச் சென்றார்.
"அண்ணே டயர் வெடிச்சிடுச்சிண்ணே" -நடத்துனர்.
ஓட்டுனரும் இறங்கி சென்று பார்த்தார்.
பின் இருவரும் அவர்களுக்குள் பேசிக்கொண்டனர்.
பின் பேருந்துக்குள் ஏறி...
"பஸ் டயர் வெடிச்சிடுச்சி மாற்று இல்ல இப்ப. வேற பஸ் மாத்திவிடறோம் எல்லோரும் எந்துரிச்சி வாங்க" என்று நடத்துனர் கத்தினார்.
அந்த அரசு விரைவுப் பேருந்தில் இருந்த 34 பயணிகளும் தூக்கம் கலைந்த கடுப்பிலும். வேறு பஸ்ஸில் மாற்றிவிட்டால் நின்று கொண்டு பயணிக்க வேண்டி இருக்குமோ என்று கடுப்பிலும் முணுமுணுத்தனர்.
"சீக்கிரம் இறங்கி வாங்க. எங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும் இப்படி ஆகும்னு. இறங்குங்க இறங்குங்க" என்றவாரே. கீழே சென்று நின்று கொண்டார் நடத்துனர்.
பின்னர் வந்த அரசுப்பேருந்துகளில் அவர்களை ஏற்றிவிடும் பணியில் துரிதமாக ஈடுபட்டார். ஒரு வழியாக இரண்டு பேருந்துகளில் முடிந்த அளவு பயணிகளை ஏற்றி அனுப்பியாயிற்று இன்னும் சொற்ப பயணிகளே நின்று கொண்டிருந்தனர். அடுத்து ஒரு பேருந்து வந்தது. அதிலும் நின்று கொண்டுதான் பயணிக்க வேண்டியதாய் இருந்தது. முதலில் முரண்டு பிடித்த சிலர் இனியும் அமர்ந்துதான் செல்வேன் என முரண்டு பிடித்து கீழே நிற்கும் கொடுமைக்கு பஸ்ஸிலேயே நின்று தொலைத்துவிடலாம் என பஸ்ஸில் ஏறினர்.
"ஏய் பிரவீன். வாடா நாமளும் போலாம்டா. இன்னும் மூனு மணி நேரம் தாண்டா அப்புறம் சேலம் போய் வேற பஸ் பிடிச்சுக்கலாம்டா" - சிவா.
"ஏய் போடா இன்னும் மூனு மணி நேரம் நின்னுகிட்டே டிராவல் பண்ணனுமா என்னால முடியாதுடா. நான் உக்காந்துதான் வருவேன்"
"தம்பி முரண்டு பிடிக்காதப்பா. எல்லாரும் கிளம்பிட்டாங்க. உங்க நாலு பேத்தோடதான் ஒரே ரோதனையா போச்சு." இவனுடன் சேர்த்து உக்காந்துதான் பயணிப்போம் என்று முரண்டு பிடித்த நால்வரையும் சேர்த்தே திட்டினார் நடத்துனர்.
அந்தப் பேருந்தும் கிளம்பியது. பிரவீன், சிவா மற்றும் இன்னும் இருவர் மட்டும் உட்கார்ந்து போனால்தான் ஆச்சு என்று நின்று கொண்டிந்தனர். சிவா எவ்வளவோ சொல்லிப் பார்த்தான் பிரவீன் மசிவதாயில்லை.
நால்வரும் அந்த விரைவுப் பேருந்தின் பின்னால் அடுத்த பேருந்து வருகிறதா என பார்த்துக் கொண்டு சோர்வுடன் நின்றிருந்தனர். அது ஒரு வளைவுப்பகுதியாக இருந்ததால் லைட் வெளிச்சம் மட்டுமே தெரிந்தது.. வருவது பேருந்துதானா என பக்கத்தில் வந்தால் மட்டுமே தெரிந்தது. நடத்துனரும் ஓட்டுனரும் அருகில் இருந்த டீ கடையில் புகுந்து தம் அடித்துக் கொண்டிருந்தனர்.
"சே யார் மூஞ்சில முழிச்சமோ சரியான சாவு கிராக்கிகளா இருக்கானுங்...."
சட்டீர் என பெருத்த சப்தம் கூடவே ஆ..... அம்மா.... என அலறல் கேட்டது.. பதறியடித்துக் கொண்டு அவர்கள் திரும்பிப் பார்த்தனர். அங்கே....
அந்த அரசு விரைவுப் பேருந்து அருகில் இருந்த ஒரு பள்ளத்தில் சாய்ந்து கொண்டிருந்தது. ரோட்டின் நடுவில் இருந்த தடுப்புச் சுவர் உடைந்து அதனையும் தாண்டிக்கொண்டு ஒரு அரசுப் பேருந்து அசுர வேகத்தில் 200 அடி சென்று நின்றது.
திடீரென அங்கே கூட்டம் கூடியது. ஆ அம்மா என அலறல்கள்...கதறல்கள்.... சிறிது நேரத்தில் போலீஸ் வாகனங்கள், 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்தன.
அடுத்த நாள் காலை செய்தித்தாளில்.
அரசு விரைவுப் பேருந்து மீது அரசுப் பேருந்து மோதல் 7 பேர் உடல் நசுங்கி பலி, 13 பேர் படுகாயம்.
என்ற தலைப்பில் இது தலைப்புச் செய்தியாயிருந்தது. இரண்டாம் பக்கத்தில் இறந்தவர்கள் விவரம் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது.
1. கிருஷ்ணன் (36), நெல்லையைச் சேர்ந்தவர்.
2. கலாநிதி (65), மதுரை பாலாஜி நகரைச் சேர்ந்தவர்.
3. பிரவீன் (21), திருச்சியைச் சேர்ந்தவர்.
4. சிவா (21), திருச்சி அருகேயுள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் (முழு விவரம் தெரியவில்லை).
(இவர்கள் நாலு பேரும் அரசு விரைவுப் பேருந்தில் பயணம் செய்து டயர் வெடித்ததால் மற்றொரு வாகனத்திற்காக சாலையோரம் காத்திருந்த பயணிகளாவர்.)
5. ராமநாதன் (56), சென்னை கூடுவாஞ்சேரியைச் சேர்ந்த தொழிலதிபர்.
6. தமிழ்வாணன் (55), சென்னையைச் சேர்ந்தவர்.
7. மனோகரன் (58), அரசுப் பேருந்தின் நடத்துனர்.
இதில் மனோகரன் நேற்றுதான் பணி ஓய்வு பெற்றிருந்தார். இவராகவே விருப்பத்தின் பேரில். இறுதியாக ஒரு முறை செல்கிறேன் என்று பணிக்கு வந்திருக்கிறார். விதி அவருடைய வாழ்வில் விளையாடிவிட்டது இதுவே அவரது இறுதிப் பயணம் ஆகிவிட்டது. மேலும் அரசு விரைவுப் பேருந்து பழுதானதால் மற்ற பயணிகள் நின்று கொண்டு சென்றாலும் பரவாயில்லை என்று சென்றுவிட்டனர். இவர்கள் நால்வரும் உட்கார்ந்துதான் பயணிப்போம் என்று பிடிவாதமாக நின்று கொண்டு இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
***
ஆத்திரத்துடன் செய்தித்தாளை விட்டெறிந்தேன்.
"ஏன் என்ன ஆச்சு மச்சி" என்று அதிர்ச்சியுடன் கேட்டான் என் அறைத்தோழன்.
"பேப்பர் நியூஸ் பாத்தியா?"
உடனே புரிந்து கொண்டு..
"ம்" என்றான்.
"வாழ்க்கை.. கனவுகள் நிறைந்தது இல்லையா. அவர்களுக்கும் ஆயிரம் கனவுகள் இருந்திருக்கும். கன நேர பிடிவாதத்திற்கும். தான் செய்த பணியை இறுதியாய் ஒரு முறை செய்து பார்க்க வேண்டும் என்ற ஆசைக்கும் விலை அவர்களது உயிரா?"
என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் விழித்தான் என் நண்பன். நீங்கள் தெரிந்தால் சொல்லுங்களேன்.
Subscribe to:
Post Comments (Atom)
கதை நல்லாயிருக்கு ரமேஷ்..
ReplyDeleteகதை அருமையா இருக்கு.. படிக்கும் போது எதோ உண்மை நிகழ்வு போன்றே தோன்றுகிறது...
ReplyDelete@பதிவுலகில் பாபு
ReplyDeleteநன்றிடா அப்துல்...
@வெறும்பய
ஆமாங்க ஒரு உண்மை சம்பவத்தை மையமா வெச்சிதான் இதை எழுதினேன்.
என்ன சொல்வது. விதிதான் காரணம்.
ReplyDeleteஎனக்கு தெரிந்த ஒரு ஓட்டுனர் ரிடயர்ட் ஆகும் வரை ஆக்கிசன்ட்டே பண்ண வில்லை என விருது வாங்கினார். ஆனால் அவர் இறந்தது ஒரு ஆக்சிட்டேன்டில்.கார் ஓட்டி போகும்போது விபத்து
ReplyDelete@ரமேஷ்
ReplyDeleteஆமாங்க ரமேஷ்.. என்னதான் நாம திட்டமிடறதுலயும் கவனமா இருக்கறதுலயும்தான் எல்லாம் இருக்குன்னு சொல்லிக்கிட்டாலும்.. உண்மை அது இல்ல இல்லையா..
கதை மிக மிக அருமை! உண்மை சம்பவம் போல்தான் உள்ளது! வாழ்த்துக்கள்!
ReplyDeleteநன்றிங்க எஸ்.கே
ReplyDeletestory is nice.
ReplyDeleteமுதல்ல சிறுகதைய சிறுகதையா எழுதினதுக்கு பாராட்டுக்கள் அண்ணா.!
ReplyDeleteநான் எழுதினா பெருங்கதையா வந்திருக்கும் ., அப்புறம் முதல்லையே கடைசி பயணம் , சாவு கிராக்கி இந்த மாதிரியான வார்த்தைகள் இருக்கறதால கதையோட முடிவ கணிக்க முடியுது. நான் அந்த டயர் வெடிக்கும் போதே எல்லோரும் செத்துடுவாங்க அப்படின்னு நினைச்சேன் .. ஆனா அது இல்லாம கடைசில பிடிவாதம் பிடிக்கிறவங்க மட்டும் இறந்து போறது அருமையா இருக்கு ..!! நல்லா இருக்கு அண்ணா ..!!
@Dhosai
ReplyDeleteமுதல் முறைய என்னோட பதிவுக்கு பின்னூட்டம் எழுதியிருக்கீங்க..ரொம்ப நன்றிங்க
@ப.செல்வக்குமார்
ரொம்ப நன்றி செல்வா..அடுத்த கதைல இந்த மாதிரி கணிக்க முடியாம எழுத முயற்சி பண்றேன்..
எளிமையான நடை, நல்ல வார்த்தைகள், உண்மை சம்பவம் போன்ற எளிமை, ரொம்ப நல்ல கதை. ஆனால் முடிவு மட்டும் முதலிலே தெரிந்து விட்டதுபோல ஒரு உணர்வு... சூப்பர்... !
ReplyDeleteWow...presented so well..
ReplyDeleteநல்லாயிருக்கு ரமேஷ்!
ReplyDeleteவிதி வலியது,கதை அருமை
ReplyDeleteடைட்டிலிலேயே கிளைமாக்ஸ் தெரிந்து விடுவதால் அடுத்த முறை சஸ்பென்சை காப்பாற்றுவது மாதிரி டைட்டில் வைக்கவும்.இதற்கு தொழில் பக்தி என்ற டைட்டில் பொருட்த்தமாக இருக்கும் என நினைக்கிறேன்
ReplyDeleteநெஞ்சை தொட்ட கதை விறு விருப்பாக உள்ளது
ReplyDeleteசிறுகதை முடிவை யூகிக்க முடிச்சாலும்.எழுத்து நடை நன்றாக இருந்தது..!
ReplyDelete@ஈரோடு தங்கதுரை
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க தங்கதுரை.. அடுத்த கதையில் மிகவும் கவனமாக இருக்கங்க..
@அப்பாவி தங்கமணி
@Balaji saravana
ரொம்ப நன்றிங்க..
@சி.பி.செந்தில்குமார்
கண்டிப்பா அடுத்த முறை கவனமா இருக்கங்க..
@யாதவன்
ரொம்ப நன்றிங்க யாதவன்
@♥♪•வெற்றி - VETRI•♪♥
ரொம்ப நன்றிங்க வெற்றி.. அடுத்த கதை யூகிக்க முடியாதபடி எழுத முயற்சி பன்றேங்க..
மரணம் எப்படி வேணும்னாலும் வரும்... விதி என்பதை தவிர என்ன சொல்ல
ReplyDeleteஅருமையான கதைங்க... எனக்கு கதையில ரொம்ப பிடிச்சதே கதைக்களமும் அதன் ஆரம்பமும்! ஒருவரின் பணியில் இறுதிநாள் இன்னொருவரின் பணிமுதல்நாள்... நல்ல நடை! வாழ்த்துக்கள்!
ReplyDelete-
DREAMER
@DREAMER
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க... தொடர்ந்து கதை எழுதலாம்னு இருக்கேங்க... நீங்களும் தொடர்ந்து உங்க கருத்துக்களை சொல்லுங்க..
நானும் அந்த நியூஸ் படிச்சேன், நல்ல வேலை, நீங்க எழுதின அப்றம் தான் அது நடந்ததோனு ஒரு நிமிஷம் நெனச்சேன்.... பின்னூட்டம் பாத்த அப்றம் தான் தெரிஞ்சது.... நல்லா எழுதறீங்க....
ReplyDeleteசிறுகதை நல்லா இருக்கு.. :-))
ReplyDeleteஉங்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்..!!