நண்பனின் காதல் திருமணம் நின்று போனதற்குக் காரணமான நண்பர்கள் அவர்களை மீண்டும் எப்படி சேர்த்து வைக்கிறார்கள் அதான் இந்தப்படம்.
பெரும்பாலான ஆண்களுக்கு கல்லூரி வயது துவங்கி வேலை செல்வதற்கு முன்பு வரை எதைப்பற்றியும் வாழ்வில் பயம் இருக்காது. ஒவ்வொரு நொடியையும் தனக்காக, குறும்பாக வாழ்வார்கள். அதை முதல் பாகத்தில் சரியாக செய்திருந்தார் வெங்கட் பிரபு. சலூன் கடையில் முடி வெட்டும் சீனில் கூட பின்னனியில் FM இல் கிச்சு கிச்சு கிச்சுடி.... என்று பாட்டு ஒலிக்கும்.. இப்படி படம் முழுக்கவே உன்னிப்பாக கவனித்து ரசிக்க நிறைய விசயங்கள் இருந்து. எனக்கு மிகவும் பிடித்த படங்களில் அதுவும் ஒன்று. அவர்களுடன் நாமும் சேர்ந்து வாழ்வது போலவே நிறைய காட்சிகள் இருந்து. சிரிக்க வைத்தது, அழ வைத்தது.
அதே ஆண்கள் குடும்பபாரத்தை சுமக்க ஆரம்பிக்கும் தருணத்தில். அவர்களுடைய முதல் இழப்பு நட்பு. :(
அந்த நண்பர்களை நாம் மீண்டும் பார்க்கும், பழகும் வாய்ப்பு இருந்தாலும். மனசே இல்லாமல் அவர்களை இரண்டாம்பட்சத்திற்கு நகர்த்த வேண்டிய சூழல்தான் பெரும்பாலும். அதனால் பழைய ஒட்டுதலுடன் நண்பர்களுடன் இருப்பது கடினம். அதை இந்த பாகத்தில் சரியாக காண்பித்திருக்கிறார் வெங்கட் பிரபு. அதனாலேயே முதல் பாகத்தில் இருந்த சுவாரசியம் இதில் கொஞ்சம் குறைவாகத் தோன்றுகிறது.
முதல் பாகத்தின் காட்சிகளை, அதைப் பார்க்காமல் இதை மட்டும் பார்ப்பவர்களையும் குழப்பாமல் சாமர்த்தியமாக இணைத்திருப்பது அருமை. முதல் பாகத்திலேயே ஏகப்பட்ட நடிகர்கள் அவர்கள் அனைவரையும் அப்படியே பத்து வருடம் கழித்து எடுக்கப்பட்ட இரண்டாம் பாகத்திலும் நடிக்க வைத்திருப்பது சாதனைதான்.
பின்னனி இசையும் பாடல்களும் முதல் பாகத்தில் பட்டாசாய் இருக்கும். இதில் நன்றாக இருக்கிறது. நீ கிடைத்தாய் ஒரு முன்னைத்தவம் போலே... செம... இது கதையா பாடலில்... சோகம், சந்தோசம், மீண்டும் சோகம் என்று வந்து முடியும் போது யாரோ யாருக்குள் இங்கு யாரோ... ட்யூனை இணைத்திருப்பது அருமை. ஹவுஸ் பார்ட்டி... தேவையில்லாத இடைச்செருகல்.
பழைய நினைவுகள் எப்போதுமே பசுமையானது. இந்தப்படம் முடிந்த பிறகும் முதல் பாகமே மனதில் நிற்கிறது. மொத்தத்தில் இந்தப்படம் கணவர்களுக்குப் பிடிக்கும் மனைவிகளுக்கு டவுட்தான் :-p
மறக்காம SHARE பன்னுங்க... :-p :-)