Search This Blog

Thursday, December 02, 2010

கண்கள் இரண்டால் - சிறுகதை

"ஏண்டா மச்சி.. ஜாலியா ஒரு நாள் கிளாஸை கட்டடிச்சுட்டு அங்க போய் ஓபி அடிக்கலாம்னு முடிவு பண்ணிட்ட இல்லியா" -நண்பன் கோவிந்த்.

"இல்லடா கிளாஸைக் கட்டடிக்கனும்னா எதுக்குடா அங்க போய் உட்காரனும்.. நீட்டா தியேட்டர் போயிட மாட்டேனா. அட்டெண்டண்ட்ஸ் லேக் ஆனாதான் பிராப்ளம் இல்லியே. காசு கட்டினா முடிஞ்சது மேட்டர்"

மீண்டும் தொடர்வேன் என என் வாயையே பார்த்துக் கொண்டிருந்தான் கோவிந்த்.

"உண்மையிலேயே அந்தப் பசங்களுக்கு உதவி செய்யனும்னுதான் மச்சான் போறேன். இந்த மாதிரி கண் தெரியாத பசங்களுக்கும் இதே பாடமுறை, தேர்வுமுறை வெச்சிருக்கறதே தப்புடா மச்சான். அவங்களால நம்ம அளவுக்கு படிக்க முடியுமா? இல்ல இந்த மாதிரி வேற ஒரு உதவியாளர வெச்சி தேர்வு எழுதினா... அதுல அவங்களோட திறமை எப்படி வெளிப்படும்? அதுவும் நான் அந்தப் பையனுக்கு உதவி செய்யறதா ஒத்துக்கிட்டது கணித பாடத்துக்கு. எனக்கு கணக்கு நல்லா வரும்னு உனக்கே தெரியும். அதான்... நீட்டா அந்தப் பையன கொஞ்ச நேரம் சும்மா உக்காரு தம்பின்னு சொல்லிட்டு. நானே எக்சாம் எழுதிக் கொடுத்திட்டு வரலாம்னு ஐடியாடா"

"என்னவோடா ஒரு கண் தெரியாத பையனுக்கு ஹெல்ப் பண்றங்கற அதனால உன்ன ஓட்ட முடியலை. போய்ட்டு வா. முடிஞ்ச வரை நல்லா ஹெல்ப் பண்ணு. சொதப்பி வெச்சி.. பாஸாக இருந்த பையனை ஃபெயிலாக்கிடாத" என்றான். நான் முறைத்தேன். சிரித்தான்.

"போடா போடா.. சேவை செய்யறவன் கோவிச்சுக்கக் கூடாதுடா" என்றான்.

நான் கல்லூரியில் B.Sc இரண்டாமாண்டு மாணவன். கண் தெரியாத மாணவர்களுக்கு நடத்தப்படும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்காக, அந்த மாணவர்களுக்கு உதவுவதற்காக எதாவது கல்லூரியில் இருந்து மாணவர்களைக் கேட்பார்கள். இந்த வருடம் எங்கள் கல்லூரியிலும் கேட்டார்கள். அதற்குப் போவதாய் ஒத்துக்கொண்டேன் நான். இதோ நாளை அங்கு செல்லப் போகிறேன். கண்ணாமூச்சி விளையாட்டுல கொஞ்ச நேரம் கண் கட்டியிருந்தாலே நமக்கு எப்படா அந்தத் துணியை அவிழ்ப்போம்னு ஆயிடுது.. ஆயுள் முழுக்க கண்கள் கட்டப்பட்ட அந்த சிறுவனோட நிலைய நினைச்சுப் பாருங்க. பாவம் அந்தக் கண் தெரியாத பையன் என்ன படிச்சிருக்க முடியும். அவனுக்கு உதவி செய்ய நான் ஒத்துக்கொண்டது சரிதானே.

------------------------------------------

அந்த அறையில் தரையில் பத்தடி இடைவெளியில் அனைத்து மாணவர்களையும் அமரச் செய்திருந்தனர். அவர்கள் செய்கைகளைப் பார்க்கும் போதே மிகவும் பரிதாபமாக இருந்தது. அந்த மாணவர்களில் சிலர் தலையை நேராக வைக்கக் கூட சிரமப்பட்டுக்கொண்டு இருந்தனர்.

என்ன வாழ்க்கைடா இது இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா?

அப்படி ஒருவன் இருந்தால்.. ஒரு பாவமும் அறியாத இந்தப் பிஞ்சுகளுக்கு இந்த நிலை நேர்ந்திருக்குமா? மனசு கணத்தது...

"சார்.. சார்.."

ஒரு ஆசிரியை என்னை சார் என அழைத்து என் நினைவைக் கலைத்தார்..

ஆ நம்மளயா சார்னு கூப்பிடறாங்க.... ஒரு நிமிசம் தடுமாறினேன்...

"ம் சொல்லுங்க"

"சார் இவன் பேரு ஆறுமுகம். இவனுக்குதான் நீங்க எக்ஸாம் எழுதித் தரணும்." என்று என்னிடம் சொன்னவாறே.

"ஆறுமுகம் சாருக்கு வணக்கம் சொல்லு"

"வணக்கம் சார்"

"வணக்கம்ப்பா சார்னு கூப்பிடாத அண்ணான்னு கூப்பிடு"

"சரிங்கண்ணா" என்றான் சிரித்துக் கொண்டே. அந்த சிரிப்பை என்னால் ரசிக்க முடியவில்லை. ஏனோ வலித்தது மனது.

"சரிங்க சார் நீங்க அங்க போய் உக்காருங்க. தரைலதான் சார் உக்காந்து எக்ஸாம் எழுதனும். கொஞ்சம் அட்ஜெஸ்ட் பண்ணிக்குங்க சார்." என்று என்னிடம் சொல்லிவிட்டு என் பதிலை எதிர்பார்க்காமல் அவனிடம் திரும்பினார்.

"என்ன ஆறுமுகம் எல்லாத்தையும் மறக்காம எடுத்துக்கிட்டு வந்திட்டியா"

"எடுத்திட்டு வந்திட்டேன் மேடம். நான் ரெடியா இருக்கேன் மேடம்" என்றான்.

அந்தப் பையனைப் பார்க்க பாவமாக இருந்தது. பாவம் இந்தப் பையனுக்கு நாம் நிச்சயம் உதவ வேண்டும். பத்தாம் வகுப்பு கணிதப் புத்தகத்தை இந்த மூன்று நாட்களாக புரட்டி வந்தது நல்லதாய் போயிற்று என நினைத்துக் கொண்டேன்.

தேர்வு நேரம் ஆரம்பித்தது.. அந்தச் சிறுவன் மிகவும் துடிப்பானவனாக இருந்தான்.. தேர்வுக்குத் தேவையான காம்பஸ், பென்சில், பேனா ரப்பர் எல்லாத்தையும் அவன் கைக்கு வசதியான இடத்தில் எடுத்து வைத்தான்.

"தம்பி இருப்பா.. நான் அதெல்லாம் எடுத்துக்கறேன்பா.. நீ ஏன் சிரமப்படறே"

"உட்காந்து செய்யற இந்த வேலையே சிரமமா? என்னன்னா சொல்றீங்க. என்னால பாக்க மட்டும்தான்னா முடியாது. நான் சொல்றத மட்டும் செய்யிங்கன்னா... இல்லன்னா மூனு மணி நேரம் பத்தாது." என்றான்.

பொட்டிலடித்தார் போல் என்னைத் தாக்கியது அவன் கேள்வி.

கேள்வித்தாள் கொடுக்கப்பட்டது.

"அண்ணா அதுல வலது மூளையில. எல்.ஆறுமுகம்னு என் பேர் எழுதுங்க. அப்புறம். ஆன்ஸர் சீட்ல அதே மாதிரி வலது மூளையில.  என் பெயர், என்னோட ரிஜிஸ்ட்ரேசன் நம்பர், பாடம், தேதி இதெல்லாம்.. அடுத்தடுத்து இருக்கும்" அதை ஸ்பெல்லிங் மிஸ்டேக் பண்ணிடாம கவனமா ஃபில் பண்ணுங்கண்ணா.."

என்ன இவன் இதையெல்லாம் எனக்கு சொல்லித் தருகிறான் என சற்றே எரிச்சலுற்றேன்.

"அப்புறம் கேள்வித்தாள்ல மேல கணிதவியல்னு போட்ருக்கா. பாத்தீங்களா. அதுக்கு கீழ என்ன இருக்குன்னு படிங்கண்ணா.."

ரொம்ப ஓவரா போறானே. இந்தப் பையன். எதை எதைல்லாம் பாக்க சொல்றான் பார் இந்தப் பையன். என என் ஈகோ அந்தப் பையனைத் திட்டியது.

நான் மெளனமாக கேள்வியைப் படிக்க ஆரம்பித்தேன்.

"அண்ணா என்ன பன்றீங்க"

"கேள்வியப் படிச்சிட்டு இருக்கேண்டா"

"அண்ணா... நீங்களே படிக்கறதுல என்ன யூஸ்னா?  எனக்கு படிச்சுக் காமிங்க. அதுக்கு நான் பதில் சொல்றேன். சொல்லச் சொல்ல எழுதுங்க. சுறுசுறுப்பா இருங்கண்ணா. ரொம்ப ஸ்லோவா இருக்கீங்க நீங்க. டைம் பத்தாம போயிடும் அப்புறம்"

எனக்கு ஆத்திரம் எல்லை மீறியது. கட்டுப்படுத்திக் கொண்டே அவனுக்கு படித்துக் காட்ட ஆரம்பித்தேன். படிக்க படிக்கவே இதற்கு என்ன பதில் வரும் என யோசிக்க ஆரம்பித்தேன்.

படித்து முடிக்கும் முன்பே சட்டென பதில் வந்தது அவனிடம் இருந்து.

அந்த நிமிடம் முதல் முழுமையாக என்னை ஆட்சி செய்தான். என்னால் ஒரு புள்ளியைக் கூட கூடுதலாக அந்த விடைத்தாளில் வைக்க முடியவில்லை. அரை மணி நேரம் முன்னதாகவே தேர்வை முடித்தான்.

"சரின்னா இப்ப பேப்பரையெல்லாம்.. ஒழுங்கா ஆர்டர் மாறாம அடுக்குங்கண்ணா.. மாத்திக் கட்டிடாதீங்க.. பாத்து ஜாக்கிரதையா செய்ங்க"

அவன் மொழி புரிய ஆரம்பித்திருந்தது. அதனால் இப்போது கோபம் வரவில்லை.

கண் தெரியும் என்னைவிட அவன் வேகமாக செயல்பட்ட விதம். எனக்குத் தேவை உன் கண்தாண்டா... உன் மூளையில்லை என்பதாய் அவன் நடந்து கொண்ட வேகம் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது.

நேரத்தை சரியாய் கணக்கிட்டு அவன் செயல்படும் விதம் கண்டு என்னை நினைத்து நானே முதல் முறையாய் வெட்கப்பட்டேன்.

என் அகங்காரம், கண் தெரியாதவன் தானே இவனுக்கு என்ன தெரியப் போகிறது நாம்தான் அவனுக்காக பாஸாக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.

எனக்கு கண் தெரிய ஆரம்பித்தது.

69 comments:

  1. என்ன வாழ்க்கைடா இது இறைவன் என்று ஒருவன் இருக்கிறானா? ///

    இல்லை, உங்களுக்கும் இந்த டவுட் வந்திருச்சா

    ReplyDelete
  2. டைட்டில் கலக்கல் பா....

    ReplyDelete
  3. @ அருண்

    வாங்க அருண்...வடை உங்களுக்குத்தான் எடுத்துக்கங்க.. நன்றி..

    @ ஜீ

    வருகைக்கு நன்றிங்க..

    ReplyDelete
  4. //கண்ணாமூச்சி விளையாட்டுல கொஞ்ச நேரம் கண் கட்டியிருந்தாலே நமக்கு எப்படா அந்தத் துணியை அவிழ்ப்போம்னு ஆயிடுது.. ஆயுள் முழுக்க கண்கள் கட்டப்பட்ட அந்த சிறுவனோட நிலைய நினைச்சுப் பாருங்க. //

    உண்மைலேயே ரொம்ப கஷ்டம் தான் அண்ணா ..!!

    ReplyDelete
  5. @ப.செல்வக்குமார்

    ஆமாம் செல்வா...

    ReplyDelete
  6. //
    "உட்காந்து செய்யற இந்த வேலையே சிரமமா? என்னன்னா சொல்றீங்க. என்னால பாக்க மட்டும்தான்னா முடியாது. நான் சொல்றத மட்டும் செய்யிங்கன்னா... இல்லன்னா மூனு மணி நேரம் பத்தாது." என்றான்.//

    கலக்கல் ..!!

    ReplyDelete
  7. //அந்த நிமிடம் முதல் முழுமையாக என்னை ஆட்சி செய்தான். என்னால் ஒரு புள்ளியைக் கூட கூடுதலாக அந்த விடைத்தாளில் வைக்க முடியவில்லை//

    // எனக்குத் தேவை உன் கண்தாண்டா... உன் மூளையில்லை என்பதாய் அவன் நடந்து கொண்ட வேகம் எனக்கு ஆச்சரியமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது. //

    //என் அகங்காரம், கண் தெரியாதவன் தானே இவனுக்கு என்ன தெரியப் போகிறது நாம்தான் அவனுக்காக பாஸாக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.//

    ரொம்ப கலக்கலானா கதை அண்ணா ., அதிலும் உங்க நடை வாய்ப்பே இல்ல ., கலக்கிட்டீங்க .!!

    ReplyDelete
  8. @ப.செல்வக்குமார்

    //ரொம்ப கலக்கலானா கதை அண்ணா ., அதிலும் உங்க நடை வாய்ப்பே இல்ல ., கலக்கிட்டீங்க .!!


    ரொம்ப நன்றி செல்வா.. சந்தோசமா இருக்கு..

    ReplyDelete
  9. தல வந்துட்டேன். முழுவதும் படித்துவிட்டு கருத்து சொல்கிறேன்.

    ReplyDelete
  10. நல்ல கதை நண்பரே.. அருமையா சொல்லியிருக்கீங்க...

    ReplyDelete
  11. @வெறும்பய

    வாங்க.. ரொம்ப நன்றிங்க ஜெயந்த்..

    ReplyDelete
  12. @பிரவின்குமார்

    பொறுமையா படிச்சுட்டு வாங்க தல..

    ReplyDelete
  13. நல்லாருக்கு ரமேஷ்ஜி..கண்டினியூ...

    ReplyDelete
  14. @ஹரிஸ்

    வருகைக்கு நன்றி நண்பா... ஏன் இப்படி.. என் பெயருக்கு பின்னாடி எப்படி ஜி ஒட்டுச்சு...

    ReplyDelete
  15. செல்வா சொன்ன குறிப்பிட்ட உங்கள் வரிகள் எல்லாம் சூப்பர் பங்கு. வழக்கம் போல உங்க நடைல இன்னும் சூப்பரா இருக்கு கதை.

    ReplyDelete
  16. @பங்காளி (karthikkumar)

    வாங்க பங்கு.. பாராட்டுக்கு நன்றி பங்கு..

    ReplyDelete
  17. கதை சூப்பர்! கதைக் கரு அருமை!

    ReplyDelete
  18. @எஸ்.கே

    நன்றிங்க எஸ்.கே...

    ReplyDelete
  19. நல்லா இருந்தது ரமேஷ்!!

    ReplyDelete
  20. செம... நல்ல உயிரோட்டமுள்ள கதை...


    வாழ்த்துக்கள் ரமெஷ்

    ReplyDelete
  21. அவன் கண்கள் இரண்டிற்கும்
    ஒளியாய் நீங்கள் இருந்து....
    பரீட்சை எழுதியதற்கு......
    பரிசாக....உங்களுக்கு கண்ணொளி
    கிடைத்ததா.....??

    ......வெரி நைஸ்... ரொம்ப அழகா எழுதி இருக்கீங்க..

    அந்த சிறுவனின் தன்னம்பிக்கையும், அறிவும்....
    உண்மையில் ரொம்ப சந்தோசங்க.....

    ReplyDelete
  22. ரமேஷ், இது கதையாவே இருந்தாலும்...
    உங்களை அந்த கேரக்டர்-ஆ நினச்சு கமெண்ட் பண்ணிட்டேன்.. :-))

    ReplyDelete
  23. கதை நல்லா இருக்கு ரமேஷ். இதுக்கு templete கமெண்ட் தான் போட முடியும்..

    ReplyDelete
  24. என் அகங்காரம், கண் தெரியாதவன் தானே இவனுக்கு என்ன தெரியப் போகிறது நாம்தான் அவனுக்காக பாஸாக்க வேண்டும் என்று நினைத்திருந்த என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.


    ....உங்கள் எழுத்து நடை, அருமை. கதையும் கருத்தும் இன்னும் அருமை. பாராட்டுக்கள்!

    ReplyDelete
  25. உங்க எழுத்து நடை சூப்பரா இருக்கு, கதை சொல்லும் விதமும் நல்லா மனசுல பதியுது. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  26. ரமேஷ் இது கதைதானா இல்லை நிஜமா?

    ஏன் கேட்கிறேன் என்றால் கண்பார்வையற்றோரின் உடனிருந்தே தேர்வு எழுதியிருந்தால்தான் இதுபோன்று ஒவ்வொரு காட்சியையும் கண்முன் நிறுத்தமுடியும் அந்த வகையில் சிறப்பான எழுத்து நடை சபாஷ்!

    ReplyDelete
  27. மிகச் சிறப்பான கதை ரமேஷ்.
    பார்வையற்றவரின் மேல் நாம் பரிதாபம் கொள்ளும் அளவிற்கு அவர்கள் தாழ்ந்து போனவர்கள் அல்லர், அவர்களும் நம் நண்பர்கள் என மிகத் தெளிவாய் சொல்லியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் :)

    ReplyDelete
  28. @கோவை ஆவி

    நன்றிங்க ஆவி

    ReplyDelete
  29. @அருண் பிரசாத்

    நன்றிங்க அருண்

    ReplyDelete
  30. @அன்பரசன்

    நன்றிங்க அன்பு

    ReplyDelete
  31. @ஆனந்தி

    //அவன் கண்கள் இரண்டிற்கும்
    ஒளியாய் நீங்கள் இருந்து....
    பரீட்சை எழுதியதற்கு......
    பரிசாக....உங்களுக்கு கண்ணொளி
    கிடைத்ததா.....??

    பின்னூட்டமும் கவிதை மாதிரியே எழுதறீங்களே சூப்பருங்க

    //ரமேஷ், இது கதையாவே இருந்தாலும்...
    உங்களை அந்த கேரக்டர்-ஆ நினச்சு கமெண்ட் பண்ணிட்டேன்.. :-))

    உண்மையும் அதுதாங்க ஆனந்தி.. என்னோட அனுபவத்தைதான் கதையா மாத்திருக்கேன்.

    ReplyDelete
  32. @ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

    //கதை நல்லா இருக்கு ரமேஷ். இதுக்கு templete கமெண்ட் தான் போட முடியும்..

    :-)

    இதுக்கு டெம்ப்ளேட் ரெஸ்பான்ஸ்தான் பண்ண முடியும்..

    ReplyDelete
  33. நெஞ்சை தொட்ட கதை கண் தான் தெரியாது அனால் மூலை இருக்கலவா

    ReplyDelete
  34. @சித்ரா

    //....உங்கள் எழுத்து நடை, அருமை. கதையும் கருத்தும் இன்னும் அருமை. பாராட்டுக்கள்!

    ரொம்ப நன்றிங்க சித்ரா.. சந்தோசமா இருக்குங்க..

    ReplyDelete
  35. @Lakshmi

    //உங்க எழுத்து நடை சூப்பரா இருக்கு, கதை சொல்லும் விதமும் நல்லா மனசுல பதியுது. வாழ்த்துக்கள்.

    ரொம்ப நன்றிங்க....

    ReplyDelete
  36. @ எம்.அப்துல் காதர்

    ரொம்ப நன்றிங்க காதர்.

    ReplyDelete
  37. @அப்பாவி தங்கமணி

    வாங்க... ரொம்ப சந்தோசம்..

    ReplyDelete
  38. @ப்ரியமுடன் வசந்த்

    //ரமேஷ் இது கதைதானா இல்லை நிஜமா?

    ஏன் கேட்கிறேன் என்றால் கண்பார்வையற்றோரின் உடனிருந்தே தேர்வு எழுதியிருந்தால்தான் இதுபோன்று ஒவ்வொரு காட்சியையும் கண்முன் நிறுத்தமுடியும் அந்த வகையில் சிறப்பான எழுத்து நடை சபாஷ்!

    கரெக்டா யூகிச்சுட்டீங்க வசந்த்... என்னோட நிஜ அனுபவத்தைத்தான் இந்த கதையா மாத்தினேன்..

    ReplyDelete
  39. @Balaji saravana

    ஆமாங்க பாலாஜி நீங்க சொல்றது சரிதான் அவங்க மேல பரிதாபப்படறதை விட ஏளனமா நினைக்கறதுதான் அதிகமா இருக்கு... அதான் இந்த தீம எடுத்துக்கிட்டேன்..

    ReplyDelete
  40. @its me

    கண்டிப்பா பாக்கறேங்க.. என்னால முடிஞ்சத கண்டிப்பா செய்வேன்..

    ReplyDelete
  41. @யாதவன்

    //நெஞ்சை தொட்ட கதை கண் தான் தெரியாது அனால் மூலை இருக்கலவா

    நன்றிங்க யாதவன்.. ஆமாங்க.. அதுவும் நம்மைவிட அதிகமாக மூளைக்கு வேலை தருகிறார்கள் அவர்கள்..

    ReplyDelete
  42. //பின்னூட்டமும் கவிதை மாதிரியே எழுதறீங்களே சூப்பருங்க///

    தேங்க்ஸ் ரமேஷ்... :-))

    ///உண்மையும் அதுதாங்க ஆனந்தி.. என்னோட அனுபவத்தைதான் கதையா மாத்திருக்கேன். ///

    அப்படின்னா.. இன்னமும் ரொம்ப சந்தோசங்க.. உங்கள் சேவை தொடரட்டும்... :-))

    ReplyDelete
  43. @ஆனந்தி

    அட ஆன்லைன்லதான் இருக்கீங்களா.. உடனே ரெஸ்பான்ஸ் பண்றீங்க..

    ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  44. ///அட ஆன்லைன்லதான் இருக்கீங்களா.. உடனே ரெஸ்பான்ஸ் பண்றீங்க..
    ///

    YESSS :-))

    ReplyDelete
  45. அன்பு நண்பா... கதை நல்லக் கருவைக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. கதை சொன்ன விதம் அருமை. நம்முடைய புலங்கள் மீதான உணர்விற்கும் அறிவுக்கும் வேறுபட்ட தொடர்பு இருப்பதை அழகாய் அந்த சிறுவன் மூலம் சொல்லியுள்ளீர்கள். மிக்க நன்றி. நல்ல பகிர்வுக்கு.

    ReplyDelete
  46. @தமிழ்க்காதலன்

    ரொம்ப நன்றிங்க நண்பரே..

    ReplyDelete
  47. உங்களின் இந்த கதையை வலைசரத்தில் அறிமுகப்படுத்தியுள்ளேன்

    http://blogintamil.blogspot.com/2010/12/blog-post_03.html

    நன்றி

    ReplyDelete
  48. @அருண் பிரசாத்

    ஆமாம் பார்த்தேன்.. ரொம்ப நன்றிங்க அருண்... எப்படியும் என்னை நீங்கள் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்துவீர்கள் என எதிர்பார்த்தே இருந்தேன்.. அதுவும் கதை சொல்லும் காந்தள் பிரிவில் அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என எதிர்பார்த்தேன்... அதே போலவே அறிமுகப்படுத்தியமைக்கு ரொம்ப நன்றிங்க... ரொம்ப சந்தோசமா இருக்கு.. இந்த அறிமுகம் எனக்கு.. ஒரு எழுத்தாளனாக அங்கீகரக்கப்படவே நான் விரும்புகிறேன்.. எனது முதல் அங்கீகாரம் இது.. மகிழ்ச்சியாய் இருக்கிறது.. நன்றிங்க...

    ReplyDelete
  49. சிறு கதைகள் மிகவும் அருமை
    உணர்ந்து ஒன்றி அழகாய் எழுதி இருக்கீங்க
    வாசிக்க மிகவும் பிடித்து இருந்தது
    நன்றி

    ReplyDelete
  50. கலக்கல் பதிவு & டெம்லேட்

    தகவல் உலகம் - விருதுகள்
    http://dilleepworld.blogspot.com/2010/12/blog-post_03.html

    ReplyDelete
  51. @SIVA

    ரொம்ப நன்றிங்க சிவா..

    @டிலீப்

    ரொம்ப நன்றிங்க டிலீப்..

    ReplyDelete
  52. சபாஷ்,இது உங்கள் கதையில் வரும் சிறுவனுக்கு.
    வாழ்த்துக்கள்,இது உங்கள் அழகிய ,கவர்ச்சியான எழுத்து நடைக்கு.

    ReplyDelete
  53. @மால்குடி

    வாழ்த்துக்கு நன்றிங்க மால்குடி

    ReplyDelete
  54. ரமேஷ்... பொறுமையா படிக்கணும்னுதான் டைம் எடுத்துகிட்டேன்.....


    கதையின் களம் அருமை. இங்கே கண் திறக்க வேண்டியது அனேக பேருக்குத் தம்பி.... பெரும்பாலும் நாம் புலன்கள் எல்லாம் சரியாக இயங்குகின்றன என்ற ஒரு அலட்சியம் இருக்கிறது....

    நம்மை விட எல்லா வகையிலும் மேம்பட்டவர்களாக மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள்.

    உற்று கவனிக்கிறேன் ரமேஷ்..... ஒரு மாற்றம் சீராக தெரிகிறது எழுத்தில்...சந்தோசமாக இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன் வித் யுவர் ஸ்பெசல் டச்....!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  55. ரமேஷ்... பொறுமையா படிக்கணும்னுதான் டைம் எடுத்துகிட்டேன்.....


    கதையின் களம் அருமை. இங்கே கண் திறக்க வேண்டியது அனேக பேருக்குத் தம்பி.... பெரும்பாலும் நாம் புலன்கள் எல்லாம் சரியாக இயங்குகின்றன என்ற ஒரு அலட்சியம் இருக்கிறது....

    நம்மை விட எல்லா வகையிலும் மேம்பட்டவர்களாக மாற்றுத் திறனாளிகள் இருக்கிறார்கள்.

    உற்று கவனிக்கிறேன் ரமேஷ்..... ஒரு மாற்றம் சீராக தெரிகிறது எழுத்தில்...சந்தோசமாக இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன் வித் யுவர் ஸ்பெசல் டச்....!

    வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  56. sir,chance-e illa..vaalthukal..intha madiri oru kadhaiyai padichi romba naalachu.

    ReplyDelete
  57. @நிர்மல்

    வாங்க நிர்மல்... வாழ்த்துக்கும் வருகைக்கும் ரொம்ப நன்றிங்க..

    ReplyDelete
  58. உண்மையிலேயே நீங்கள் அதிர்ஷ்டசாலி ரமேஷ்.. மாற்றுத்திறனாளிக்கு நல்ல முறையில் உதவினீர்கள். வாழ்த்துக்கள்.... நடை அருமை.

    ReplyDelete
  59. @சாதாரணமானவள்

    வாங்க.. வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் ரொம்ப நன்றிங்க...

    ReplyDelete
  60. @தேவா

    //ஒரு மாற்றம் சீராக தெரிகிறது எழுத்தில்...சந்தோசமாக இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்க்கிறேன் வித் யுவர் ஸ்பெசல் டச்....!

    வாழ்த்துக்கள்!


    கண்டிப்பாக இன்னும் நிறைய நல்ல கதைகள் எழுத முயற்சி செய்றேங்க தேவா...

    வாழ்த்துக்கு நன்றிங்க..

    ReplyDelete
  61. This comment has been removed by the author.

    ReplyDelete
  62. பிரியமுடன் ரமேஷ் அவர்களே அருமை நிறைய பேர் கண்கள் இருந்தும், அவர்கள் மனதால் அவர்களை கண்கள் தெரியாதவர்களாக மாற்றிகொள்கிறார்கள், நாம் அனைவரும் நம் கண்களை திறக்கவேண்டும், நம்மை சுற்றி நடக்கும் கேடுகளை கண் திறந்து பார்க்கவேண்டும்.

    அருமை நண்பா என்னால் முடிந்த வரைக்கும் கண் திறந்து சுற்றி நடப்பதை பார்க்கிறேன்.

    நன்றி... தொடர்ந்து எழுதுங்கள்
    தொடர்கிறேன்...

    ReplyDelete
  63. @கமல்

    வாங்க கமல்.. நன்றிங்க... தொடர்வதற்கும் நன்றி..

    ReplyDelete
  64. என் இறுமாப்பு என என் கண்ணைக் கட்டியிருந்த விசயங்கள் எல்லாம் ஒவ்வொன்றாய் உதிர்ந்து விழ ஆரம்பித்தன.

    எனக்கு கண் தெரிய ஆரம்பித்தது. //
    அருகில் அமர்ந்து கண்ணால் பார்த்த உணர்வுடன் கூடிய நடைக்குப் பாராட்டுக்கள்.

    ReplyDelete