எனக்கு அப்போது ஒரு 12 வயது இருக்கும்... வீட்டில் கட்டிலுக்கு அடியில் அட்டை பெட்டிகள் நிறைய பட்டாசாய் நிறைந்திருந்தது.
அடிக்கடி அதை எடுத்து எடுத்து பார்த்துக் கொண்டேன்.
"அம்மா இதுல இருக்கறதை நான் வெடிக்கலாமா?"
"நீ வெடிக்காமயா வெடிடா... ஆனா நம்ம கடை இங்க இருக்குது இல்லியா. அதனால தூரமா போயி வெடி" என்றார்.
தீபாவளிக்கு நம்ம வீட்டு முன்னாடி பட்டாசு வெடித்து நம் வீட்டு முன்பு வெடித்த பட்டாசு குவியல்கள் இருப்பதைப் பார்ப்பதில் எவ்வளவு மகிழ்ச்சி. எங்கோ போய் பட்டாசு வெடிப்பதில் என்ன இருக்கிறது. அம்மா அப்படி சொன்னதற்கு நான் எதுவும் சொல்லவில்லை.
கடையில் தீபாவளி விற்பனை ஜரூராக நடந்து கொண்டிருந்தது. அதனை சென்று வேடிக்கை பார்த்தேன். தீபாவளி நெருங்க நெருங்க... இரவிலும் கடை முழுதாக திறந்திருந்தது.
வீட்டில் இரவு நேரங்களில் மாற்றி மாற்றி கடையில் அமர்ந்திருப்பார்கள்.
எனக்கு தூங்காமல் அப்படி அவர்களுடன் அமர்ந்திருப்பது பிடித்திருந்தது. தீபாவளி அன்று மதியம் வரையில் எங்களது பட்டாசு கடையில் விற்பனை இருந்தது.
பட்டாசுகள் வரிசையாக மர ரேக்குகளில் அழகாக அடிக்கி வைக்கப்பட்டிருந்தன. தீபாவளி அன்று வந்து வாங்குவது பெரும்பாலும் கூலித் தொழிலாளிகளாக இருந்தனர். அன்று மிகவும் குறைந்த விலையில் பட்டாசு விற்கப்பட்டது.
அம்மாவும் கடையில் நின்று வாங்க வருபவர்களுடன் வரும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதாவது ஒரு பட்டாசு பாக்கெட்டை கூடுதலாக எடுத்துக் கொடுத்தார்.
எனக்கு அது பிடிக்கவில்லை. மர ரேக்குகளில் பட்டாசுகள் குறைய குறைய எனக்கு கஷ்டமாக இருந்தது. என்ன இந்தம்மா சும்மாவே அதுங்களுக்கு எடுத்துக் கொடுக்கறாங்களே. அதோட விலையே 15, 20 ரூபா ஆகுதே என்று நினைத்தேன்.
அது எப்படி அம்மாவுக்கு புரிந்ததோ தெரியவில்லை.
"பாவம் சின்னப்பசங்க நேத்து வரைக்கும் பட்டாசு அப்பா வாங்கித் தருவாரோ மாட்டாரோன்னு ஏங்கி இருக்கும்ங்க. இப்ப கூட தீபாவளி அன்னைக்குதான் வாங்கித்தந்தாருன்னு ஒரு நினைப்பு மனசுல இருக்கும். இப்ப அதுங்களுக்கு ஒரு சின்ன சந்தோசம். இன்னிக்கு வந்ததால இது நமக்கு ஃப்ரியா கிடைச்சதுன்னு அதான்" என்றார் பொதுவாக.
அப்ப நான் மட்டும் சின்னப்பையன் இல்லியா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது.
கடையில் இப்போது எதுவுமே இல்லை. எல்லாமே விற்றும், இலவசமாகக் கொடுக்கப்பட்டும் தீர்ந்துவிட்டது.
பட்டாசுகள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருந்த மர ரேக்குகள் காலியாகக் கிடந்தன.
ஓடிப்போய் கட்டிலுக்கு அடியில் பார்த்தேன் வெறுமையாய் இருந்தது.
அதனைப் பார்ப்பதற்கு எனக்கு என்னவோ போல் இருந்தது. என் மனசும் வெறுமையானது.
அதுவரை உழைத்து மிகவும் களைத்துப் போய் குடும்பத்தில் எல்லோரும் படுக்க இடம் கிடைத்தால் போதும் என சென்று படுத்தனர்.
எனக்கு படுக்கவும் பிடிக்கவில்லை. கண்ணில் என்னையும் மீறி மெலிதாக கண்ணீர். அப்புறம் என்னையும் அறியாமல் தூங்கிப் போனேன்.
மாலையில் அம்மா என்னை எழுப்பிவிட்டார்.
"போடா நாலு மணி ஆயிடுச்சு போய் குளிச்சி இந்த புது சட்டைய போட்டுட்டு வா" என்றார்.
எனக்கு வெறுப்பாக இருந்தது. புது சட்டையை போட்டு என்ன பண்றது என்று நினைத்தவாறே அமர்ந்திருந்தேன். அம்மா என்னை இன்னொரு முறை மிரட்டினார். அதனால் சென்று குளித்துவிட்டு வந்தேன்.
வந்து புது சட்டை போட்டபிறகு...
அம்மா பீரோவில் இருந்து ஒரு கவரை எடுத்துப் பிரித்தார். அதில் நான் கடையில் ஆசையாய் தொட்டுப் பார்த்த பட்டாசுகள் அனைத்தும் சேர்த்து வைக்கப்பட்டிருந்தன.
அதனைப் பார்த்தவுடன் எனக்கு மனசு மகிழ்ச்சியால் துள்ளியது. ஓடிச்சென்று அம்மாவைக் கட்டிக் கொண்டேன். கண்களில் என்னையும் மீறி மீண்டும் கண்ணீர். அம்மா என்னைப் புரிந்தவராய் என்னைப் பார்த்துச் சிரித்தார்.
அந்த பட்டாசுகளை எடுத்துச் சென்று காலியாகக் கிடந்த மர ரேக்கில் வரிசையாக அடுக்கினேன்.
மனசு நிறைவாய் இருந்தது.
தலை தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றிங்க ரமேஷ்
ReplyDeleteதலைதீபாவளி நல்வாழ்த்துக்கள் பாஸ்! :)
ReplyDeleteஅம்மா மனசு அருமை..
நன்றிங்க பாலாஜி..
ReplyDelete///அம்மாவும் கடையில் நின்று வாங்க வருபவர்களுடன் வரும் சிறுவர்களுக்கும் சிறுமிகளுக்கும் எதாவது ஒரு பட்டாசு பாக்கெட்டை கூடுதலாக எடுத்துக் கொடுத்தார். //
ReplyDeleteஇந்த வரிகள் படிக்கும் போது அருமையா இருக்கு அண்ணா ..
நன்றி செல்வா..
ReplyDeleteகதை நல்லா இருக்கு அண்ணா .. அப்புறம் தல தீபாவளி வாழ்த்துக்கள் ..
ReplyDeleteஇந்த வருஷம் எங்க ஊர்ல கொண்டாடப் போறீங்க ..!! அதுக்கு ஒரு வாழ்த்துக்கள்..!!!
நன்றி செல்வா.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்
ReplyDeletenice story
ReplyDeleteரமேஷ்.....
ReplyDeleteட்ராக்ல தெளிவா போய்ட்டே இருங்க....! உங்க எல்லா சிறுகதைகளும் படிக்கிறேன்... ஒரு மெலிதான் உணர்வு கதை முழுதும் படர்ந்து இருப்பதை உணர முடிகிறது.....
பெஞ்ச் மார்க் நாம செட் பண்ணுவோம்.......சரியா! சூப்பர்.. தீபாவளி வாழ்த்துக்கள்!
ஆமாம்ல... தலைதீபாவளி வாழ்த்துக்கள் ரமெஷ்
ReplyDelete@தேவா
ReplyDelete//ரமேஷ்.....
ட்ராக்ல தெளிவா போய்ட்டே இருங்க....! உங்க எல்லா சிறுகதைகளும் படிக்கிறேன்... ஒரு மெலிதான் உணர்வு கதை முழுதும் படர்ந்து இருப்பதை உணர முடிகிறது.....
பெஞ்ச் மார்க் நாம செட் பண்ணுவோம்.......சரியா! சூப்பர்.. தீபாவளி வாழ்த்துக்கள்! //
கண்டிப்பாங்க தேவா.. தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
@அருண்
ReplyDeleteநன்றிங்க அருண்
வாழ்த்துக்கள் நண்பா
ReplyDeleteநன்றிங்க மணிவண்ணன்
ReplyDeleteதலை தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeletekalakkunga...
நன்றிங்க பாலா..
ReplyDeleteமனசு நிறைவாய் இருந்தது........ :-)
ReplyDeleteஉங்களுக்கு எங்களது இனிய தலை தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!! சிறப்பாக கொண்டாட வாழ்த்துகிறோம்!
நன்றிங்க சித்ரா...
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றிங்க சித்ரா.. சூப்பரா கொண்டாடிறோம்...
தலை தீபாவளி வாழ்த்துக்கள்
ReplyDeleteவாங்க ஜெயந்த்... நன்றிங்க...
ReplyDeleteஆமாம் இங்க வர்ரவங்களாம் ஏன் அஜித்துக்கு தீபாவளி வாழ்த்து சொல்றீங்க..
ReplyDelete(செல்வா கூட சகவாசம் வெச்சிக்கிட்டதால இருக்குமோ?)
உங்க கதைகள் முன்பே சொன்ன மாதிரி மெருகு கூடிக்கிட்டே வருது.
ReplyDeleteதலை தீபாவளி வாழ்த்துக்கள் ரமேஷ்
என்னோட கதைகளைத் தொடர்ந்து படித்து என்ன ஊக்குவிப்பதற்கு நன்றிங்க மோகன்ஜி. என் கதைகள்ல மெருகு கூடிட்டு வர்ரதுக்கு உங்க எல்லோரோட ஊக்கம்தான் காரணம்.. நன்றிங்க...
ReplyDeleteதலை தீபாவளி வாழ்த்துக்கும் நன்றிங்க மோகன்ஜி
மிகவும் அழகாகவும், உணர்வுபூர்வமாகவும் எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள் நண்பரே..!
ReplyDeleteஎனது சிறுபிராயத்தில், வீட்டில் வாங்கி வைத்திருக்கும் பட்டாசுகள் குறைய குறைய அடுத்த தீபாவளிக்கு மனது ஏங்கும். தீபாவளியன்று இரவு வெறுமையாய் தோன்றும்... அவ்வளவுதானா..? தீபாவளி முடிந்துவிட்டதா என்று வருத்தபடவைக்கும். அந்த சிறுவயது ஞாபகங்கள் உங்கள் கதையைப் படிக்கும்போது எனக்கு ஏற்பட்டது.
மனநிறைவான தலைதீபாவளி வாழ்த்துக்கள்..!
-
DREAMER
தங்களின் குணத்தைப் போலவே கதைகளும்... நிதானம், அமைதி, straight forward! :-)
ReplyDelete//ஆமாம் இங்க வர்ரவங்களாம் ஏன் அஜித்துக்கு தீபாவளி வாழ்த்து சொல்றீங்க..//
ரமேஷ்! தங்களுக்கு காமெடி சென்ஸ் இருக்கிறதே! :-) எங்களுக்காக ஒரு நகைச்சுவை சிறுகதை எழுதக் கேட்டுக்கொள்கிறேன்!
சின்ன வயசுல காசு சேத்து தீபாவளிக்கு வெடி வாங்கி வெடிச்சதுதான் ஞாபகம் வருது ..
ReplyDelete"ரமேஷ், தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எங்களின் மனங்கனிந்த (தல)'தீபாவளி' நல் வாழ்த்துகள்"
ReplyDeleteதீபாவளி வாழ்த்துக்கள்..!!
ReplyDeleteஉங்க சிறப்பு சிறுகதை சூப்பர்..!
அழகான விவரிப்பு..!
@DREAMER
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி ஹரீஷ் நானும் அப்படி பலமுறை அவ்வளவுதான் தீபாவளியா என்று நினைத்திருக்கிறேன்... இப்போதெல்லாம்.. இந்த நினைப்பு தீபாவளி ஆரம்பிப்பதற்கு முன்னரே கூட சில நேரங்களில் வந்துவிடுகிறது.
@மிதுன்
//தங்களின் குணத்தைப் போலவே கதைகளும்... நிதானம், அமைதி, straight forward! :-)
ரொம்ப நன்றிங்க மிதுன்.. என்னுடைய குணம் உங்களுக்கு எப்படிப் புரிந்தது..! ரொம்ப ஆச்சரியமா இருக்குங்க...
@கே.ஆர்.பி.செந்தில்
ரொம்ப நன்றிங்க செந்தில்..
@எம் அப்துல் காதர்
வாழ்த்துக்கு நன்றிங்க அப்துல் காதர்.
@ஆனந்தி..
வாழ்த்துக்கும் பாராட்டுக்கும் நன்றிங்க ஆனந்தி..
தலை தீபாவளி வாழ்த்துகள் தல!!! இந்த கதைக் கருவை முன்னாடியே ஏதோ பின்னூட்டத்தில் படித்த மாதிரி ஞாபகம்!!
ReplyDelete@கோவை ஆவி
ReplyDeleteஅப்படிங்களா ஆவி.. ஆச்சரியம்தான்.. நாங்க பட்டாசு கடை போட்டிருந்தோம்.. அந்த அனுபவத்துல எழுதின கதைதான் இது..
சூப்பர் தல ....ஒரு குறும்படம் பார்த்த உணர்வை ஏற்படுத்துகிறது .
ReplyDeleteலேட்டா சொல்கிறேன்னு நினைக்கவேணாம் இப்போதான் முதல் முதல் வருகிறேன் தலை தீபாவளி வாழ்த்துக்கள்..
ReplyDeleteஅதோடு அருமையான விளக்கத்துடன் பதிவும் அருமை.. வாழ்த்துக்கள் இரண்டுக்கும் சேர்த்து..
http://niroodai.blogspot.com/
@FARHAN
ReplyDeleteஇந்த அளவுக்கு சொல்வீங்கன்னு எதிர்பாக்கலை..ரொம்ப நன்றிங்க தல..
@அன்புடன் மலிக்கா
முதல் முறை வந்தமைக்கு நன்றிங்க.. பதிவுக்கும் தலை தீபாவளிக்கு வாழ்த்தியமைக்கு ஒரு ஸ்பெசல் நன்றி..
அம்மா மனசு ரொம்ப நெகிழ வெச்சிடுச்சி...
ReplyDeleteரொம்ப நன்றிங்க மணிகண்ட வேல் (கவிதை காதலன்)
ReplyDeleteபெற்ற தாயின் பாசம் சிறுவனின் உணர்வுகள் அத்தனையையும் வார்த்தைகளில் காட்சியாக கொண்டு வந்து விட்டீர்கள் ரமேஷ் பாராட்டுகள்!
ReplyDelete@ப்ரியமுடன் வசந்த்
ReplyDeleteரொம்ப சந்தோசமா இருக்குங்க வசந்த் நன்றி..
நல்லா வந்திருக்கு!
ReplyDeleteவாழ்த்துக்களுடன்,
“ஆரண்யனிவாஸ்”
@ராமமூர்த்தி
ReplyDeleteரொம்ப நன்றிங்க ராமமூர்த்தி