Search This Blog

Wednesday, November 17, 2010

ஆறிலிருந்து முப்பது வரை - நான் ரசித்த ரஜினி படங்கள்

ரஜினிகாந்தோட படங்கள்ல எனக்கு நிறைய படம் புடிக்கும். இந்த தொடர்பதிவுக்கு அழைத்த நண்பர் அருண்பிரசாத்துக்கு (சுற்றுலா விரும்பி) என்னோட நன்றி. இங்க இந்த தொடர்பதிவ நிறைய பேர் எழுதிட்டதால.. எப்படியும் யாரும் படத்தோட டைட்டில மட்டும் படிச்சுட்டு மேட்டரை விட்டுடுவீங்க. அதனால என்னோட ஆறு வயசுல இருந்து இந்த 30 வயசு வரைக்கும் எனக்குப் புடிச்ச ரஜினி படத்து பேரையும் அதுல எனக்கு புடிச்ச பாட்டையும் மட்டும் இங்க நான் குறிப்பிடறேன்...


1.

வேலைக்காரன்

பாடல்கள்: வேலை இல்லாதவன்தான்...., பெத்து எடுத்தவதான்...
இசை: இளையராஜா.

ராஜா சின்ன ரோஜா

பாடல்கள்: ஒரு பண்பாடு இல்லையென்றால்..., பூ பூபோல்..., சூப்பர் ஸ்டாரு யாருன்னு கேட்டா...
இசை: சந்திர போஸ்.

தில்லு முல்லு

பாடல்கள் எதுவும் பிடிக்காது ஆனா படத்தோட பின்னனி இசை சுறுசுறுப்பா இருக்கும் அதனால அது பிடிக்கும். இசை: எம்.எஸ்.வி


2.

பாட்ஷா
பாடல்: தங்கமகன் இன்று...
இசை: தேவா

முத்து
பாடல்கள்: ஒருவன் ஒருவன்.., விடுகதையா...
இசை: ஏ.ஆர். ரகுமான்

அண்ணாமலை

பாடல்கள்: வெற்றி நிச்சயம்...., ஒரு பெண் புறா...., ரக்ககட்டி பறக்குது...
இசை: தேவா


3.

தளபதி
பாடல்கள்: சின்னத்தாயவள்....., யமுனை ஆற்றிலே..., புத்தம் புது....
இசை: இளையராஜா.

படிக்காதவன்.

பாடல்கள்: ஜோடி கிளி எங்கே..., ஒரு கூட்டுக் கிளியாக...., ஊரைத் தெரிஞ்சுகிட்டேன்...
இசை: இளையராஜா..

மாப்பிள்ளை

பாடல்கள்: என்னதான் சுகமோ...., என்னோட ராசி நல்ல....
இசை: இளையராஜா

4.

படையப்பா

பாடல்கள்: வாழ்க்கையில் ஆயிரம்....
இசை: ஏ.ஆர். ரகுமான்..

(உண்மையில் முத்துவில் இந்த கூட்டணியில் பாடல்கள் மிக நன்றாக அமைந்ததால் மிகவும் எதிர்பார்ப்போடு இருந்தேன். ஏமாற்றமே...)

சந்திரமுகி

படம் மட்டும்தான் பிடிக்கும். பாடல்கள் எதுவும் பிடிக்காது.வித்யாசாகர் ரஜினி படத்திற்கு இசையமைக்க கிடைத்த நல்ல வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள தவறிவிட்டார்.

உழைப்பாளி


பாடல்கள்: ஒரு மைனா மைனா...
இசை: இளையராஜா.


5.

அருணாச்சலம்

பாடல்கள்: தலை மகனே கலங்காதே...
இசை: தேவா


பில்லா

பாடல்கள்: மை நேம் இஸ் பில்லா...
இசை: எம்.எஸ்.வி

நினைத்தாலே இனிக்கும்

பாடல்கள்: எங்கேயும் எப்போதும்...
இசை: எம்.எஸ்.வி

6.

முள்ளும் மலரும்

பாடல்: செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்...
இசை: இளையராஜா.

இளமை ஊஞ்சலாடுகிறது

இருவருக்காகவும் பிடிக்கும் (ரஜினி, கமல்)

பாடல்: ஒரே நாள் உனை நான்....
இசை: இளையராஜா.

மிஸ்டர் பாரத்

பாடல்: காத்திருக்கேன் கதவத் தொறந்து..., என் தாயின் மீது...
இசை: இளையராஜா.

7.
தர்மத்தின் தலைவன்

பாடல்கள்: முத்தமிழ் கவியே வருக..., தென்மதுரை வைகை நதி...
இசை: இளையராஜா

குரு சிஷ்யன்

பாடல்கள்: வா வா வஞ்சி இளமானே....
இசை: இளையராஜா

மனிதன்

பாடல்கள்: வானத்தை பார்த்தேன்.., ஏதோ நடக்கிறது...
இசை: சந்திரபோஸ்

8.

நான் அடிமை இல்லை

பாடல்கள்: ஒரு ஜீவன் தான்....,
இசை: விஜய் ஆனந்த்.

நல்லவனுக்கு நல்லவன்

பாடல்கள்: சிட்டுக்கு செல்ல சிட்டுக்கு..., முத்தாடுதே..., உன்னைத்தானே..., வச்சுக்கவா உன்ன மட்டும்....
இசை: இளையராஜா.

தம்பிக்கு எந்த ஊரு

பாடல்கள்:
காதலின் தீபம் ஒன்று....
இசை: இளையராஜா.

9.

நான் மகான் அல்ல

பாடல்கள்: மாலை சூடும் வேலை...
இசை: இளையராஜா.

தங்க மகன்

பாடல்கள்: ராத்திரியில் பூத்திருக்கும்....., அடுக்கு மல்லிகை....
இசை: இளையராஜா.

மூன்று முகம்

படம் மட்டுதான் பிடிக்கும்.


10.


ப்ரியா

பாடல்கள்: ஏ பாடல் ஒன்று..., டார்லிங் டார்லிங் டார்லிங்..., என்னுயிர் நீதானே....
இசை: இளையராஜா.

கை கொடுக்கும் கை

பாடல்: தாழம் பூவே வாசம் வீசு...
இசை: இளையராஜா.

புதுக்கவிதை

பாடல்கள்: வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது.....
இசை: இளையராஜா.


பின்குறிப்பு: கடுமையான போட்டியின் காரணமாக ஒவ்வொரு இடத்திலும் மூன்று படங்கள் இடம்பெற்றிருக்கின்றன என்பதை தாழ்மையுடன் கூறிக்கொள்கிறேன்.

அப்புறம்.. இதனைத் தொடர்வதற்கு நண்பர் பதிவுலகில் பாபுவை அன்புடன் அழைக்கிறேன்....

42 comments:

 1. ரமேஷ்.. நீங்க தொகுத்திருக்கற படங்கள் எல்லாமே அருமை.. அதில் வரும் பாடல்கள் அனைத்தும் எவர்கிரீன்..

  என்னைத் தொடர்பதிவு எழுத அழைத்ததற்கு நன்றி ரமேஷ்..

  ReplyDelete
 2. செம பாஸ்டா இருக்கீங்க

  ReplyDelete
 3. அதனால என்னோட ஆறு வயசுல இருந்து இந்த 30 வயசு வரைக்கும் எனக்குப் புடிச்ச ரஜினி படத்து பேரையும் அதுல எனக்கு புடிச்ச பாட்டையும் மட்டும் இங்க நான் குறிப்பிடறேன்...///
  உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு

  ReplyDelete
 4. பாடல்களின் அணிவகுப்பு சூப்பர் ரமேஷ்!

  ReplyDelete
 5. நன்றி பாபு..

  @கார்த்திகுமார்

  ஆமாங்க அப்புறம் ரஜினின்னாலே ஒரு வேகம் வரத்தான செய்யும்..

  ReplyDelete
 6. @கார்த்திகுமார்

  //உங்க டீலிங் எனக்கு பிடிச்சிருக்கு
  நன்றிங்க கார்த்தி..

  @நாகராஜசோழன்

  நன்றிங்க சோழரே...

  ReplyDelete
 7. தொடர்பதிவு எழுதியதற்கு நன்றி ரமெஷ்....

  வித்தியாசமா தொகுத்து இருக்கீங்க

  ReplyDelete
 8. //எனக்குப் புடிச்ச ரஜினி படத்து பேரையும் அதுல எனக்கு புடிச்ச பாட்டையும் மட்டும் இங்க நான் குறிப்பிடறேன்...//

  கரெக்ட் தான்.... நீங்க தொகுத்து இருக்கறத பாத்தா, ரசிச்சு ரசிச்சு பாட்டு கேப்பீங்க போல...எல்லாமே தாலாட்டும் பாடல்கள் தல, சூப்பர் பாஸ்ட்டா பதிவ போட்டதுக்கு வாழ்த்துக்கள்....

  ReplyDelete
 9. @அருண் பிரசாத்

  சின்ன வயசுல விரும்பிப் பார்த்த படம்தான் இப்பவும் பசுமையா மனசுல இருக்கும் இல்லீங்களா.. அதை வச்சு.. வரிசைப்படுத்தினேன்.. 1 இடத்துல இருக்கற மூனுமே எனக்கு ரொம்ப பிடிக்கும்.. நன்றிங்க அருண்..

  ReplyDelete
 10. //ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஏமாற்றிவிட்டார்.//

  சந்திர முகி இசையமைப்பாளர் வித்யாசாகர்.. தானே...
  ஓ... ரஹ்மான் இசையமைக்காமல் ஏமாத்திட்டாரா?

  ReplyDelete
 11. @Arun Prasath

  //கரெக்ட் தான்.... நீங்க தொகுத்து இருக்கறத பாத்தா, ரசிச்சு ரசிச்சு பாட்டு கேப்பீங்க போல...எல்லாமே தாலாட்டும் பாடல்கள் தல, சூப்பர் பாஸ்ட்டா பதிவ போட்டதுக்கு வாழ்த்துக்கள்....

  ஆமாங்க அருண்.. இதுல பாட்டுக்காகவே புடிச்ச படங்களும் இருக்கு..

  என்னை அழைத்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அருண்

  ReplyDelete
 12. //தளபதி
  பாடல்கள்: சின்னத்தாயவள்....., யமுனை ஆற்றிலே..., புத்தம் புது....//

  "புத்தம் புது பூ பூத்தது" பாடல் படத்தில் இல்லை, ஆனால் அருமையான பாடல்.
  எமக்குப் பிடித்த பாடல்...

  ReplyDelete
 13. @பாரத்... பாரதி...

  //ஏ.ஆர்.ரகுமான் மீண்டும் ஏமாற்றிவிட்டார்.//

  சந்திர முகி இசையமைப்பாளர் வித்யாசாகர்.. தானே...
  ஓ... ரஹ்மான் இசையமைக்காமல் ஏமாத்திட்டாரா? //

  ஓ ஆமாம் இல்ல மறந்திட்டேன்..

  தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிங்க பாரதி.. இதோ இப்பவே சரி பண்ணிடறேன்..

  ReplyDelete
 14. //ஓ ஆமாம் இல்ல மறந்திட்டேன்..

  தவறை சுட்டிக் காட்டியமைக்கு நன்றிங்க பாரதி.. இதோ இப்பவே சரி பண்ணிடறேன்..//

  அப்படியே தலைப்பையும் ஆறிலிருந்து எம்பது வரைனு மாத்திட்டா ..
  நிதர்சனமான உண்மையாக இருக்கும்..

  ReplyDelete
 15. உங்க வரிசைப்படுத்தல் நல்லா இருக்கே ..,
  ஒரு இடத்துல ஒரு படத்த வைக்காம நிறையப்படத்த வச்சிருக்கறது நல்லா இருக்கு .. !!

  ReplyDelete
 16. @பாரத்... பாரதி..

  //அப்படியே தலைப்பையும் ஆறிலிருந்து எம்பது வரைனு மாத்திட்டா ..
  நிதர்சனமான உண்மையாக இருக்கும்..

  (அதனால என்னோட ஆறு வயசுல இருந்து இந்த 30 வயசு வரைக்கும் எனக்குப் புடிச்ச ரஜினி படத்து பேரையும் அதுல எனக்கு புடிச்ச பாட்டையும் மட்டும் இங்க நான் குறிப்பிடறேன்...)

  அச்சச்சோ எனக்கு 29 வயசுதான் ஆகுதுங்க பாரதி.. எதோ தலைப்புக்கு பொறுத்தமா இருக்குன்னு 30 ன்னு போட்டேன்..

  ReplyDelete
 17. @ ப.செல்வக்குமார்

  நன்றிங்க செல்வா..

  ReplyDelete
 18. //ஆமாங்க அருண்.. இதுல பாட்டுக்காகவே புடிச்ச படங்களும் இருக்கு..

  என்னை அழைத்தமைக்கும் வாழ்த்துக்கும் நன்றிங்க அருண்//

  தங்கள் சித்தம், என் பாக்கியம் :P

  ReplyDelete
 19. உண்மையாக 29?
  சரி... சிலருக்கு 29 க்கு பிறகு வயசு மாறுவதே இல்லை என்பது உண்மை தான் போல...

  ReplyDelete
 20. டாப் டெண்ணுல நைசா 30-35 படங்கள சொல்லிட்டீங்க.. இருந்தாலும் நீங்க ரொம்பதான் ரஜினி ரசிகர் ஹிஹி.. எனக்கும் இந்த படங்கள் எல்லாமே பிடிக்கும்..

  ReplyDelete
 21. //உண்மையாக 29?
  சரி... சிலருக்கு 29 க்கு பிறகு வயசு மாறுவதே இல்லை என்பது உண்மை தான் போல... //

  ஹா ஹா ஹா...... இதுக்கு பேர் தான் வஞ்ச புகழ்ச்சி போல

  ReplyDelete
 22. அடுத்து பதிவுலகில் பாபு வா?...

  கடைசியா ரஜினி வந்து தான் முடிச்சு வைக்கணும் போல...

  தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 23. @பாரத்..பாரதி..

  உண்மையாக 29?
  சரி... சிலருக்கு 29 க்கு பிறகு வயசு மாறுவதே இல்லை என்பது உண்மை தான் போல...


  பாரதி.. நீங்க பாரதி காலத்துலயே பிறந்து இன்னும் உயிரோட இருக்கறவரோன்னு எனக்கு டவுட்டா இருக்கு.. எதுக்கும் உங்க நிஜ முகத்தை போடுங்க. பாத்துட்டு சொல்றேன்..

  ReplyDelete
 24. //பாரதி.. நீங்க பாரதி காலத்துலயே பிறந்து இன்னும் உயிரோட இருக்கறவரோன்னு எனக்கு டவுட்டா இருக்கு.. //

  பாரதி காலங்களை கடந்தவன்....

  ReplyDelete
 25. @Prasanna

  நன்றிங்க பிரசன்னா.

  ReplyDelete
 26. //நீங்க தொகுத்திருக்கற படங்கள் எல்லாமே அருமை.. //

  ரமேஷ் உங்க படமும் (சொந்த படம்?) அருமைங்க...
  JUST LIKE THAT ''தளபதி'' ரஜினி - படம் மாதிரி...

  ReplyDelete
 27. @பாரத்.. பாரதி

  //
  ரமேஷ் உங்க படமும் (சொந்த படம்?) அருமைங்க...
  JUST LIKE THAT ''தளபதி'' ரஜினி - படம் மாதிரி...

  ஹ ஹ ஹ... நன்றிங்க..

  ReplyDelete
 28. அருமையா இருக்கு நண்பரே.. எல்லாரையும் விட ரொம்ப வித்தியாசமாக தொகுத்திருக்கீங்க...

  ReplyDelete
 29. @வெறும்பய

  ரொம்ப நன்றிங்க ஜெயந்த்..

  ReplyDelete
 30. @nis

  நன்றிங்க nis

  ReplyDelete
 31. எப்படியும் யாரும் படத்தோட டைட்டில மட்டும் படிச்சுட்டு மேட்டரை விட்டுடுவீங்க.//
  ஹா...ஹா..ஹா..i like it..

  ReplyDelete
 32. ரஜினி படத்து பாட்டு விமர்சனமா இதுவும் சூப்பரா தான் இருக்கு

  ReplyDelete
 33. ஒரு பென்புறா சூப்பரான பாட்டு

  ReplyDelete
 34. ஆறு வயசிலியே படம் பார்த்துட்டியாய்யா

  ReplyDelete
 35. வரிசைப்படுத்தல் நல்லா இருக்கு.

  ReplyDelete
 36. //ஒரு மைனா மைனா...//

  இந்த பாட்டு எதுக்கு பிடிக்கும்னு எனக்கு தெரியுமே..# நாராயணா நாராயணா

  ReplyDelete
 37. உங்க தொகுப்பும் நல்லா இருக்கு!

  ReplyDelete
 38. என்னதான் இருந்தாலும் முள்ளும் மலரும் மறக்க முடியுமா? சந்திரமுகியில வித்யாசாகர் பற்றின உங்க கருத்தும் என் கருத்தும் ஒண்ணுதான்.. ரா..ரா.. ஒன்னுதான் உருப்படி

  ReplyDelete
 39. ரெக்க கட்டிப் பறக்குது....ரய்...ரய்......!

  ReplyDelete
 40. அருமையான தெரிவுகள்.
  தொகுப்பிற்கு நன்றி.

  ReplyDelete