Search This Blog

Sunday, December 19, 2010

கண்ணில் அன்பைச் சொல்வாளே - சிறுகதை

அப்போது நான் 12 ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன்.. ஸ்கூல் முடிஞ்சதும் பிசிக்ஸ் டியூசன் போயிட்டு நைட்டுதான் வீட்டுக்கு வருவேன். அன்று கொஞ்சம் அதிகமாகவே லேட்டா வந்தேன்...

தினமும் நான் நைட்டு வந்தவுடன்... அதுவரை நான் எப்போது வருவேன் என்று என் அக்கா எதிர்பார்த்துக் கொண்டே இருந்திருக்கிறாள் என்பதை அவளது நிம்மதியான வெளிப்பாடுகளே காட்டிக்கொடுத்துவிடும்.. அன்றும் அப்படித்தான்... ஆனால் அவளது முகம் இருண்டிருந்தது....

என் முகம் பாராமல் எனக்கு தோசை ஊற்றிக் கொண்டிருந்தாள்... அவள் விழியோரம் அவளையும் அறியாமல் அவ்வப்போது கண்ணிர் வழிவதும் அதை நான் பார்த்துவிடக்கூடாது என்பதற்காகவோ அல்லது பார்த்துவிடப் போகிறேனோ என்ற பதைபதைப்புடனோ தாவனியில் துடைத்து விட்டுக்கொண்டிருந்தாள்....

அக்கா ஏன் அழுகிறாள்.... எனக்கு பசி பறந்தோடியது....

"என்னாச்சுக்கா ஏன் அழற"

"நாளைக்கு நீலாவுக்குக் கல்யாணம்டா.. போனவாரம் அவ பத்திரிக்கை வைக்க வந்த போது போலாம்னு அம்மா சொன்னாங்க.. இப்ப கடைசி நேரத்துல.. அவ கல்யாணம் கருப்பூர்ல நடக்குது அவ்லோ தூரம்லாம் கூட்டிட்டு போக முடியாதுங்கறாங்க... கண்டிப்பா வருவேன்னு ஃபிரண்ட்ஸ்கிட்ட எல்லாம் சொல்லிட்டேன்.. நீலாவும் எனக்கு எப்படின்னு தெரியும் இல்ல உனக்கு... எதுக்கு என்னை ஆசை காட்டி ஏமாத்தனும்... நீ சாப்பிட்டப்புறம் சொல்லலாம்னு இருந்தேன்டா..." என்றாள்... சொல்ல சொல்லவே அவள் கண்களில் மீண்டும் கண்ணீர் வழிந்தது...

அவள் கண்ணீர் வடிப்பதை என்னால் தாங்க முடியவில்லை.... உடனே அம்மாவிடம் போய் குதித்தேன்... நீங்க அவளை நீலாக்கா கல்யாணத்துக்கு கூட்டிட்டு போங்க இல்லன்னா நான் கூட்டிட்டு போறேன்... ஏன் அவளை இப்படி அழவிடறீங்க... என்றேன்...

அக்கா அழறாளே என்ற பதட்டத்தில் எனக்கும் அழுகை வந்தது......

இருவரும் அழுவதைப் பார்த்தவுடன் அம்மா அக்காவை கல்யாணத்திற்குக் கூட்டிச் செல்ல ஒத்துக் கொண்டார்கள்...

மகிழ்ச்சியுடன் என் கையைப் பிடித்து மெல்ல அழுத்தினாள் அவள்... அந்த மெல்லிய அழுத்தம் தரும் அன்பின் உணர்வை வார்த்தைகளில் எழுத முடியாது.

எனக்கு அக்காதான் எல்லாம்.. அவள் என் தாய் போன்றவள்.. விசயம் சின்னதோ பெருசோ அது மேட்டர் இல்லை... என்னை யார் என்ன சொன்னாலும் தாங்க மாட்டாள்... அம்மாவே என்னை கண்டித்தாலும்... உடனே அவள் கண்ணில் நீர் கோர்த்துவிடும்.... எனக்கும் அப்படியே... அதனாலேயே எங்கள் இருவரில் யாரைத் திட்ட நினைத்தாலும் வீட்டில் இருவரில் ஒருவர் வீட்டில் இல்லாத போதே செய்தனர்....

இதோ அந்த அக்காவுக்குக் கல்யாணமும் முடிந்துவிட்டது... அன்று நான் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை... குதூகலத்துடன் சுற்றித்திரிந்தேன் அன்று மாலை ஒரு வேனில் அவர்கள் மாப்பிள்ளை வீட்டிற்குச் செல்லக் கிளம்பினர்.. அக்காவும் அம்மாவும் ஒருவர் முகம் பார்த்து ஒருவர் அழுதனர்....

என்னடா இது.. நல்ல விசயம்தானே நடந்திருக்கு எதுக்கு இவங்க அழறாங்க... என்று நினைத்தேன். உடனே அவளிடம் சென்று....

"அக்கா அழாதேக்கா... எனக்கு ஒரு மாதிரி இருக்கு...."

அவள் கண்களில் இன்னும் அதிகமாகக் கண்ணீர்... அதைப் பார்த்து என் முகம் வாடுவதைக் கண்டவள்... முகத்தைத் துடைத்துக்கொண்டு....

"நல்லா படிடா... அடிக்கடி வாடா அங்க"

"வராம விடுவனா.. இனிமே என் வீடே அதுதான் நீ இருக்கற வீடு என் வீடுதான்ங்கா"

இந்த வார்த்தையில் என்ன கண்டாளோ மீண்டும் கண்களில் நீர் துளிர்த்தது அவளுக்கு....

எப்போதும் நான் என் அக்காவின் பக்கத்தில்தான் படுத்துக் கொள்வேன்... இன்று எனதருகில் அவளது இடம் வெறுமையாய்... மெல்ல மெல்ல அக்கா நம்முடன் இல்லை என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் வரத் தொடங்கியது.... அந்த வெறுமை என் மனதிற்குள்ளும் படறத் தொடங்கியது... அன்றிலிருந்து அக்காவின் நினைப்பில் எத்தனை நாட்கள் போர்வையைப் போர்த்திக்கொண்டு அழுதிருப்பேன் என்று தெரியவில்லை..

அன்று அக்காவின் பிறந்தநாள் எங்கள் வீட்டிற்கு மாமாவையும் அக்காவையும் அழைத்திருந்தோம்.. வருடா வருடம் எங்கள் வீட்டில் யாருக்காவது பிறந்தநாள் என்றால்.. அம்மாவே எதாவது ஸ்வீட் செய்வார்... அவ்லோதான்..

அந்த வருடம் அக்காவின் திருமணத்திற்குப் பிறகு வந்த பிறந்தநாள் என்பதால் கடையில் கேக் ஆர்டர் கொடுத்திருந்தோம்... அக்கம் பக்கம் வீட்டிலிருந்து எல்லாம்... கூப்பிட்டிருந்தோம்.. கோலாகலமாகக் கேக் வெட்டிக் கொண்டாடினோம்...

அன்று மாலை....

"இனிமே இந்த மாதிரி எனக்குப் பிறந்த நாள் கொண்டாட வேண்டாம்டா"

"ஏன் கா.... என்னாச்சு"

"இல்லடா... என் பொண்டாட்டிக்கு பிறந்த நாள் கொண்டாட இவனுங்க யாருன்னு அவர் கேக்கறார்டா"

எனக்கு சுள்ளென்று கோபம் வந்தது....

"நான் யாரா.. என்னக்கா பேசறார் மாமா.. உடனே நீ..........."

"இல்லடா... நான் எதுவும் பேச முடியாதுடா. ஏற்கனவே நீ அங்க வந்து மூனு நாள் இருந்தப்பவே... அக்காவும் தம்பியும் ரொம்பத்தான் சீன் போடறீங்க... என்ன உன் தம்பிக்கு அறிவே கிடையாதா... காலேஜ் போப்போற பையன் இப்படி இருக்கான்... இன்னொருத்தர் வீட்டுக்கு வந்து 8 மணி வரைக்கும் தூங்கிக்கிட்டு.... அப்படின்னு இன்னும் அவரு உன்னை திட்டினதை எல்லாம் என்னால சொல்ல முடியாதுடா... என்னால அதைத் தாங்க முடியலை.... எதுவும் கேக்கவும் முடியாது... இனிமே நீ அங்க வந்தாலும் என்னால இங்க இருந்த மாதிரியே இருக்க முடியாதுடா"

முதல் முறையாக என் வீடு என்று நான் நினைத்திருந்த என் அக்காவின் வீடு.. என் வீடு கிடையாது என்று தோன்றியது....

அதன் பிறகு இன்றுதான் அக்கா வீட்டிற்கு வந்தேன்... அவளது போக்கில் நிறைய மாற்றம் தெரிந்தது... ஆனால் அவளது கண்களில் எனக்கான அன்பு முழுதாய் தெரிந்தது... அவள் என் மீது கொண்டிருந்த அன்பை கண்களில் மட்டுமே  அவளால் வெளிப்படுத்த முடியும் இனி.. என எனக்குத் தெளிவாகப் புரிந்தது..

பெண்களின் வாழ்க்கை திடீரென எப்படி மாறிவிடுகிறது.... இதுவரை எனக்கு இன்னொரு அம்மா என்று நான் நினைத்திருந்த என் அக்கா இனி என் உறவுக்காரர்களில் ஒருத்தி..... மீண்டும் அழுதேன்..... போர்வை போர்த்தாமலே.....

கண்ணில் அன்பைச் சொல்வாளே
யாரும் இல்லை இவள் போலே
துன்பம் என்னைத் தீண்டாமல்
தாயாய் காப்பாள் மண்மேலே

சில நேரம் புன்னகையாலே பூக்கள் தந்திடுவாள்
பேசாமல் மெளனத்தினாலே மனதைச் சொல்லிடுவாள்

உள்ளங்கையில் பாசம் வைத்து உணவைத் தந்திடுவாள்
உறங்கும் போதும் உறங்காமல் என் அருகில் நின்றிடுவாள்...
மறுஜென்மம் வந்தால் கூட நான் தான் இவளின் பிள்ளை

என்றும் என்றென்றும் இவள் சொந்தம் வேண்டும்....


51 comments:

 1. பெண்களின் வாழ்க்கை திடீரென எப்படி மாறிவிடுகிறது.... இதுவரை எனக்கு இன்னொரு அம்மா என்று நான் நினைத்திருந்த என் அக்கா இனி என் உறவுக்காரர்களில் ஒருத்தி..... மீண்டும் அழுதேன்..... போர்வை போர்த்தாமலே.....  ......எங்கள் கண்களிலும் நீர் பொங்க .... நெகிழ்வுடன்......

  ReplyDelete
 2. சூப்பர் தல...
  செம டச்சிங்.

  ReplyDelete
 3. மிகவும் நெகிழ்வாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. அருமை..

  ReplyDelete
 4. சகோதர பாசத்தை நெகிழ்ச்சியுடன் சொல்லியிருந்த விதம் அருமை.

  ReplyDelete
 5. இந்த மாதிரி மாமா கிடைக்காமல் அக்காவை விட பாசமான மாமா கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றிகள் .....
  வாசிக்கும் போதே லேசான கண்ணீர் துளிகள் என்கண்களில் ....
  அருமையான பதிவு

  ReplyDelete
 6. இது உண்மையா? கதையா? ... நெகிழ்வான பதிவு ...

  ReplyDelete
 7. @சித்ரா

  //
  ......எங்கள் கண்களிலும் நீர் பொங்க .... நெகிழ்வுடன்......//

  நன்றிங்க சித்ரா

  ReplyDelete
 8. @அன்பரசன்

  //சூப்பர் தல...
  செம டச்சிங்.//

  நன்றி நண்பா...

  @வெறும்பய

  //மிகவும் நெகிழ்வாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. அருமை..//

  நன்றி நண்பரே

  @.சி.பி. செந்தில்குமார்

  வாங்க.... வாழ்த்துக்கு நன்றிங்க... :-)

  ReplyDelete
 9. @ரமேஷ்

  //ஈசன் ரீமேக் சூப்பர். ஹிஹி//

  அடப்பாவி இப்படி என்னை அவமானப் படுத்திட்டீங்களே.. அந்தப் பாட்டு வரிகள் மட்டும் தான் அங்க இருந்து எடுத்தது.. மத்தபடி ஒரு சம்பந்தமும் இல்ல.. இல்லயா.. ஒரு நல்ல பாட்டை இப்படி வேஸ்ட் பண்ணிட்டாங்களே.. நாமளாவது நல்லா யூஸ் பண்ணுவோம்னு ஒரு ஐடியா அவ்லோதான்.. ஹி ஹி..

  ReplyDelete
 10. @லக்ஷ்மி

  //சகோதர பாசத்தை நெகிழ்ச்சியுடன் சொல்லியிருந்த விதம் அருமை.//

  நன்றிங்க...

  ReplyDelete
 11. @FARHAN

  //இந்த மாதிரி மாமா கிடைக்காமல் அக்காவை விட பாசமான மாமா கிடைத்ததற்கு இறைவனுக்கு நன்றிகள் .....//

  உண்மையிலேயே மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது நண்பா கேக்கவே... இதுவும் ஒரு கொடுப்பினைதான் இல்லையா...

  //வாசிக்கும் போதே லேசான கண்ணீர் துளிகள் என்கண்களில் ....
  அருமையான பதிவு//

  நன்றி நண்பா...

  ReplyDelete
 12. @கே.ஆர்.பி. செந்தில்

  வாங்க கே.ஆர்.பி

  //இது உண்மையா? கதையா? ... நெகிழ்வான பதிவு ...///

  பெரும்பாலான சிறுகதைகள் உண்மையில் இருந்து பிறப்பதுதான் இல்லீங்களா....

  ReplyDelete
 13. எனக்கு இந்த அனுபவம் இருக்கு பங்கு. எங்க வீட்ல பசங்க மட்டும்தான் பொண்ணுங்க கெடையாது. ஆனா எங்க பெரியம்மா பொண்ணு என் மேல ரொம்ப பாசமா இருப்பாங்க. நானும்தான். அவங்களுக்கு திருமணம் ஆன பிறகு கொஞ்சம் கொஞ்சமா பிரிவு ஏற்படுவதை உணர முடிந்தது. என்ன செய்ய. இப்போது மூன்றாவது மனுசனை போல் பேச வேண்டி உள்ளது. :(

  ReplyDelete
 14. @karthikkumar

  //இப்போது மூன்றாவது மனுசனை போல் பேச வேண்டி உள்ளது. :(//

  ஆமாம் பங்கு இதுதான் உண்மையிலேயே ரொம்ப கொடுமையான அனுபவம்.. என்ன செய்ய.. உண்மைல என்னோட உணர்வுகளை அப்படியே இந்தக் கதைல சொல்ல முடியலை பங்கு.. சொன்னது கம்மிதான்.. :-(

  ReplyDelete
 15. //பெண்களின் வாழ்க்கை திடீரென எப்படி மாறிவிடுகிறது.... // நான் மாறாவிட்டாலும் கூட இருந்த பெண் சொந்தங்கள், தோழிகள் மாறி விட்டனர்..

  ReplyDelete
 16. கதை ரொம்ப அருமையா இருக்கு நண்பரே! கடைசி கவிதை வரிகள் சூப்பர்!

  ReplyDelete
 17. கதை மிகவும் நிகிழ்வு ரமேஷ்.. கடைசி வரிகளும் அருமை...

  ReplyDelete
 18. மிகவும் நெகிழ்வாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. அருமை..

  ReplyDelete
 19. நன்றாக எழுதி இருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துகள் என் கண்களில் கண்ணீரை வர வழைத்து விட்டது. இதையே ஒரு சிறுகதையாக எழுதுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்.

  மலேசியாவில் இருந்து ksmuthukrishnan@gmail.com

  ReplyDelete
 20. @middleclassmadhavi

  ////பெண்களின் வாழ்க்கை திடீரென எப்படி மாறிவிடுகிறது.... // நான் மாறாவிட்டாலும் கூட இருந்த பெண் சொந்தங்கள், தோழிகள் மாறி விட்டனர்..//

  ஆம் அது காலத்தின் கட்டாயமாக இருக்கிறது... அதனால்தான் பெண்கள் மாறிவிடுகிறார்கள் என்று நான் குறிப்பிடவில்லை...

  ReplyDelete
 21. @எஸ்.கே

  //கதை ரொம்ப அருமையா இருக்கு நண்பரே! கடைசி கவிதை வரிகள் சூப்பர்!//

  நன்றி நண்பரே.. அந்தக் கவிதை வரிகள்.. ஈசன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் வரிகள்... ஒரு நல்ல பாடல் அந்தப் படத்தில் வீணடிக்கப்பட்டிருந்தது...

  ReplyDelete
 22. @வினோ

  //கதை மிகவும் நிகிழ்வு ரமேஷ்.. கடைசி வரிகளும் அருமை...//

  வாங்க வினோ.. நன்றிங்க

  ReplyDelete
 23. @சே.குமார்

  //மிகவும் நெகிழ்வாக சொல்லியிருக்கிறீர்கள் நண்பரே.. அருமை..//

  வாங்க குமார்... ரொம்ப நன்றிங்க

  ReplyDelete
 24. @KSMuthukrishnan

  //நன்றாக எழுதி இருக்கிறீர்கள். உங்களுடைய எழுத்துகள் என் கண்களில் கண்ணீரை வர வழைத்து விட்டது.//

  ரொம்ப நன்றிங்க முத்துகிருஷ்ணன்

  //இதையே ஒரு சிறுகதையாக எழுதுங்கள். மிகவும் சிறப்பாக இருக்கும். வாழ்த்துகள்.//

  அப்ப இதை நீங்க சிறுகதைன்னு ஏத்துக்கலையா... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்....

  ReplyDelete
 25. அருமை தல.... கண் முன்னாடி காட்சி ஓடுது

  ReplyDelete
 26. @அருண்பிரசாத்

  //அருமை தல.... கண் முன்னாடி காட்சி ஓடுது//

  வாங்க அருண்.. நன்றி..

  ReplyDelete
 27. கலக்குங்க தல..!

  ReplyDelete
 28. எப்பிடிங்க இப்படி எல்லாம் சான்சே இல்லை சூப்பருங்க

  ReplyDelete
 29. அருமையாக உள்ளது நெருடலும் வருடலும் தடவிப் போகிறது..

  எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...

  அன்புச் சகோதரன்...
  மதி.சுதா.
  எனைக் கவர்ந்த கமல் படம் 10

  ReplyDelete
 30. @பிரவீன்குமார்

  //கலக்குங்க தல..!//

  நன்றிங்க

  ReplyDelete
 31. @இரவு வானம்

  //எப்பிடிங்க இப்படி எல்லாம் சான்சே இல்லை சூப்பருங்க//

  ரொம்ப நன்றிங்க.. ரொம்ப சந்தோசமா இருக்கு..

  ReplyDelete
 32. @ம.தி.சுதா

  //அருமையாக உள்ளது நெருடலும் வருடலும் தடவிப் போகிறது..//

  நன்றிங்க.. ம.தி.சுதா

  ReplyDelete
 33. நல்லா இருக்கு அண்ணா .
  பெண்களின் வாழ்கையை அழகா சொல்லிட்டீங்க ..!!

  ReplyDelete
 34. @கோமாளி செல்வா

  //நல்லா இருக்கு அண்ணா .
  பெண்களின் வாழ்கையை அழகா சொல்லிட்டீங்க ..!!//

  நன்றிங்க.. செல்வா...

  ReplyDelete
 35. உண்மையோ....கற்பனையோ.....ஆனால், கதை மனதை நெகிழ செய்ததென்னவோ நிஜம்.அருமை வாழ்த்துக்கள் ரமேஷ்....

  ReplyDelete
 36. I Know இது உண்மைக்கதைதான்... அன்புக்கு எல்லாருமே அடிமை ரமேஷ் அந்த அன்பு வர்றப்போ எந்த சுவடையுமே அடையாளமா தருவதில்லை ஆனா நம்மளை விட்டுப்போறப்போ அழிக்கவே முடியாத அடையாளத்தை கொடுத்து சென்றுவிடும்

  நல்ல சிறுகதை ஆரம்பத்துல பேச்சுத்தமிழில் இயல்பா ஆரம்பித்தது அடுத்தடுத்த பத்திகளில் எழுத்து தமிழுக்கு சென்றுவிட்டது Y?

  ReplyDelete
 37. @ரஹீம் கஸாலி

  //உண்மையோ....கற்பனையோ.....ஆனால், கதை மனதை நெகிழ செய்ததென்னவோ நிஜம்.அருமை வாழ்த்துக்கள் ரமேஷ்....//

  ரொம்ப நன்றிங்க ரஹீம்..

  ReplyDelete
 38. @ப்ரியமுடன் வசந்த்

  //I Know இது உண்மைக்கதைதான்... அன்புக்கு எல்லாருமே அடிமை ரமேஷ் அந்த அன்பு வர்றப்போ எந்த சுவடையுமே அடையாளமா தருவதில்லை ஆனா நம்மளை விட்டுப்போறப்போ அழிக்கவே முடியாத அடையாளத்தை கொடுத்து சென்றுவிடும்//

  உண்மைதாங்க வசந்த்...

  //நல்ல சிறுகதை ஆரம்பத்துல பேச்சுத்தமிழில் இயல்பா ஆரம்பித்தது அடுத்தடுத்த பத்திகளில் எழுத்து தமிழுக்கு சென்றுவிட்டது Y?//

  ஆமாங்க தப்புதான்.. திருத்திக்கறேன்..

  ReplyDelete
 39. நல்லா உணர்ச்சி பூர்வமா சொல்லி இருக்கீங்க ரமெஷ்.... ஆனா, ஏதோ மிஸ்ஸிங்கோனு ஒரு உணர்வு... என்னனு சொல்ல தெரியல

  ReplyDelete
 40. @அருண் பிரசாத்
  //நல்லா உணர்ச்சி பூர்வமா சொல்லி இருக்கீங்க ரமேஷ்....//

  நன்றிங்க...

  //ஆனா, ஏதோ மிஸ்ஸிங்கோனு ஒரு உணர்வு... என்னனு சொல்ல தெரியல//

  அப்படியா....

  ReplyDelete
 41. //என் அக்கா இனி என் உறவுக்காரர்களில் ஒருத்தி..... மீண்டும் அழுதேன்..... போர்வை போர்த்தாமலே.....//

  நெஞ்ச தொட்டுடிங்க. வாழ்க சகோதர பாசம்.

  ReplyDelete
 42. @டெர்ரர்-பாண்டியன்

  வாங்க நண்பரே...

  //நெஞ்ச தொட்டுடிங்க. வாழ்க சகோதர பாசம்.//

  ரொம்ப நன்றிங்க..

  நீங்க UAE ல இருக்கீங்களா..

  ReplyDelete
 43. அட்டகாசமான பதிவு ....
  அருமையா இருக்குங்க

  ReplyDelete
 44. நல்ல கதை..! கடைசி பத்தியில் நல்ல தாளக்கட்டுடன் கூடிய கவிதையில் முடித்தது மேலும் டச்சிங்..! வாழ்த்துக்கள்

  -
  DREAMER

  ReplyDelete
 45. @அரசன்

  ரொம்ப நன்றிங்க அரசன்

  @DREAMER

  வாங்க ஹரிஷ்.. ரொம்ப நன்றிங்க ஹரீஷ்... அந்தக் கவிதை... ஈசன் திரைப்படத்தில் இடம்பெற்ற பாடலுங்க ஹரீஷ்.. அதுல எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் குறிப்பிட்டேன்...

  ReplyDelete
 46. ஊருக்கு போயிருந்ததால் நீங்கள் லிங்க் தந்தும் உடன் வாசிக்க முடியலை.

  அற்புதமான பதிவு. என் அக்காவை பற்றி என்னை நினைக்க வைத்தது இந்த பதிவின் வெற்றி. ஈசன் பாடல் அக்கா தங்கை பற்றியது என்று நீங்கள் சொன்ன பின் தான் தெரிந்தது

  உறவுக்குள் வரும் தூரத்தை வலியுடன் பதிவு செய்துள்ளீர்கள் நன்று

  ReplyDelete
 47. hey you have very good way of expressing the 'so called' sentiment. it reminds my brother who is in Coimbatore now. keep on writing man.

  ReplyDelete
 48. உங்களின் தளம் இன்று வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

  மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2012/07/blog-post_24.html) சென்று பார்க்கவும். நன்றி !

  ReplyDelete