டைட்டில் முடிஞ்சவுடனே 1985 காரைக்குடி.. அப்படின்னு ஸ்லைடு போட்டுட்டு... அங்க நம்ம ஆர்யா ஒரு டைரிய எழுதறதுல இருந்து படம் ஆரம்பிக்குது... அப்புறம் அடுத்த சீன் 2010 லண்டன் அப்படின்னு இன்னொரு ஸ்லைடு அங்கயும் நம்ம ஆர்யா... இப்படி ஆரம்பம் என்னவோ வித்தியாசமாத்தான் இருந்தது... ஆனா படம் பார்க்க ஆரம்பிச்ச அஞ்சாவது நிமிசமே புரிஞ்சுடுச்சு... கதை என்னன்னு....
லண்டன்ல இருக்கற ஸ்ரேயா மதுரைக்கும், ஆர்யா காரைக்குடிக்கும் போக வேண்டிய வேலை வருது... ரெண்டு பேருக்கும் ஒரே ஃபிளைட்ல வர்ராங்க அப்படிங்கறதைத் தவிர எந்த சம்பந்தமும் கிடையாது.. ரெண்டு பேரும் பெங்களூர் வந்து அங்கருந்து அவங்கங்க ஊருக்கு ஃபிளைட்ல போறதா பிளான்... ஆனா பெங்களூர் வரைக்கும் வந்த அவங்களால... அங்க நடக்கற ஏர்லைன் ஸ்ட்ரைக்னால அவங்கவங்க ஃபிளைட்ல போக முடியாம... ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டியா நடிச்சு டிரெயின்ல போக வேண்டிய நிலை... அவங்க ஊரு போய் சேர்ரதுக்குள்ள அவங்களுக்குள்ள காதல் வந்திடும்னு நமக்குத் தெரியாதா என்ன.... இதுக்கு நடுவுல ஆர்யா கைல அவங்கப்பாவோட டைரி இருக்கு அதுல அவங்கப்பா (அதுவும் ஆர்யாதான்) அவரோட பழைய காதல் நினைவுகளை எழுதி வெச்சிருக்கார்....
அதைப் படிச்சா எல்லாம் கொரிய மொழில இருக்கு....
என்ன புரியலையா.. மேல படிங்க... இங்க ப்ளூ கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம் மொழிபெயர்ப்பு... சிகப்பு கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம்... கொரியா... (ஆனா ஏன் கொரிய மொழில இல்லைன்னு எல்லாம் கேட்கக் கூடாது)..
அப்பா ஆர்யா போலீஸ் தேர்வுல பாஸாயிட்டு டிரெயினிங் போறதுக்கு முன்னாடி அவரோட தாத்தாவ பாக்க காரைக்குடி பக்கம் இருக்கற அவங்க சொந்த கிராமத்துக்கு போறார்... அங்கதான் நம்ம ஹீரோயின பாக்கறார்.. பிரீத்திகான்னு ஒரு புதுமுகம் நடிச்சிருக்காங்க... பார்த்த உடனே அவங்களை ஆர்யாவுக்கு பிடிச்சிடுது... லவ் பண்ண ஆரம்பிச்சிடறார்... அவங்களும் இவரோட குறும்புத்தனத்தை ரசிச்சு லவ் பண்ண ஆரம்பிச்சிடறாங்க. காதல் பரிசா அவங்களோட டாலர் வெச்ச செயினை ஆர்யாவுக்கு பரிசா தர்றாங்க...
Joo-Hee படிச்சுட்டு இருக்கப்ப ஒரு சம்மருக்கு அவங்களோட கிராமத்துக்குப் போறாங்க.. அங்க Joon-Ha அப்படின்னு ஒருத்தர சந்திக்கறாங்க.. கிராமத்துல இருக்கும் போது Joo-Hee அங்க ஏரியைத்தாண்டி இருக்கற ஒரு பழைய வீட்டைப் பார்க்க ஆசைப்படறாங்க.. நம்ம Joon-Ha அவங்களோட ஆசைய நிறைவேத்தரார்.. அப்ப நடக்கற நிகழ்வுகள் அவங்களுக்குள்ள ஒரு நெருக்கத்த உண்டாக்கியிருக்கும்.. காதல் பரிசா அவங்களோட டாலர் வெச்ச செயினை ஆர்யாவுக்கு.. அச்சச்சோ இல்லல்ல Joo-Hee க்கு பரிசா தர்றாங்க...
அப்புறம் அவங்க லவ் வீட்டுக்கு தெரிஞ்சு ஆர்யாவோட தாத்தா அவங்க ஸ்டேட்டஸையும், ஜாதியையும் காரணமா வெச்சு இவங்க காதலை ஏற்க மறுக்கிறார். அதனால அவங்க ரெண்டு பேரும் ஓடிப்போலாம்னு முடிவு பண்ணிடறாங்க.. ஆனா ஆர்யா அவங்களுக்காக வெயிட் பண்ணி பாத்துட்டு அவங்க வராததால அவரோட போலீஸ் டிரெயினிங்குக்குப் போயிடறார். அங்கயும் அவர்கிட்ட போன்ல பேசறதுக்கு பிரீத்திகா முயற்சி பண்ணினாலும் அவங்க வராத கோவத்துல ஆர்யா பேச மறுத்திடறார்...
அந்த டிரெயினிங்ல கண்ணாடி போட்டுக்கிட்டு (ஒரு டவுட்டு.. போலீஸ் வேலைக்கு கண்ணாடி போட்டவங்களை செலக்ட் பண்ணுவாங்களா... சிரிப்பு போலீஸ்தான் கிளியர் பண்ணனும்) இருக்கற ஒருத்தர் ஆர்யாவுக்கு நண்பராயிடறார்.. அவரும் அவங்க அத்தை பொண்ணை லவ் பண்றதா சொல்றார்.. அவங்களுக்கு லவ் லட்டர்லாம் எழுதி போஸ்ட் பன்றதுக்காக ஆர்யாகிட்ட கொடுக்கிறார். அப்புறம் பிரீத்திகா ஆர்யாவைப் பாக்கறதுக்காக அந்த கேம்புக்கே வந்திடறாங்க.. அப்பதான் தெரியுது.. கண்ணாடி நண்பர் பத்து வயசுல இருந்தே லவ் பண்ணிட்டு இருந்த பொண்ணு நம்ம பிரீத்திகாதான்னு. ஆர்யாவும் அவங்களும் லவ் பண்றது தெரிஞ்சு அந்த கண்ணாடி நண்பர் தற்கொலை பண்ணிக்க முயற்சி பண்றார். ஆர்யா அவரைக் காப்பாத்தி தன்னோட காதலிய அந்த நண்பருக்கு விட்டுக்கொடுத்திட்டு போயிடறார்...
Joon-Haக்கு ஒரு குளோஷ் பிரண்ட் இருக்கார்.. ரொம்ப நல்லவர்.. அவருக்குத்தான் முதல்லயே Joo-Heeய நிச்சயம் பண்ணியிருப்பாங்க.. ஆனா தன்னோட பிரண்டுக்கும் Joo-Heeக்கும் ஏற்கனவே காதல் இருக்கறத் தெரிஞ்சுக்கற அவர் பொண்ணோட வீட்ல அவரோட பேர யூஸ் பண்ணி ரெண்டு பேரும் மீட் பண்றதுக்கு ஏற்பாடு செய்வார்.. அப்புறம் நாம இருந்தா அவங்க ரெண்டு பேரும் சேரமுடியாதுன்னு தற்கொலைக்கும் முயற்சி பண்றார்.. ஆனா அவர Joon-Ha காப்பாத்திடறார்.. அப்புறம் Joon-Ha அப்போ நடக்கற வியட்நாம் போருக்குப் போயிடறார்.
அப்புறமென்ன... அப்பா ஆர்யாவோட ஃபிளாஷ்பேக்குக்கும் ஷ்ரேயாவுக்கும் அவங்களுக்கே தெரியாத ஒரு தொடர்பு இருக்கு.. அது என்னங்கறது சஸ்பென்ஸ்..... ஆனா அந்த சஸ்பென்ஸ் படத்துல யார் முகத்துல அதுக்குத் தகுந்த அதிர்ச்சி இல்ல.. அதுக்குத் தகுந்த இசை இல்ல...
2003 ஆம் வருசம் வெளியான கிளாசிக் அப்படிங்கற கொரியப் படத்தை அப்படியே சுட்டிருக்கார் இந்த மணிகண்டன்...
படம் பாக்க ஆரம்பிச்ச கொஞ்ச நேரத்துலயே... ஆஹா அந்தப் படத்தை நம்ம மொழில பாக்கப் போறோம்னு நினைச்சேன்.. ஃபிளாஸ்பேக்ல வர்ர லவ்.. ரியல்ல வர்ர லவ் ரெண்டுமே நல்லா டச்சிங்கா இருக்கும் கொரியன் மூவில...மொழி புரியாமலேயே அந்தப் படம் பார்க்கும் போது ஒரு நல்ல ஃபீல் கொடுத்தது... ஆனா தமிழ்ல.. எரிச்சல்தான் வருது... காபியடிக்கறதுன்னு எல்லா டைரக்டர்ஸும் முடிவு பண்ணிட்டீங்க.. தயவு செஞ்சு அதையாவது ஒழுங்கா பண்ணுங்கப்பா....
சந்தானம் ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஹரிஹரன் சார் பாட்டு பாடறதோட நிறுத்திக்கலாம்... பின்னனி இசை பிரவீன்மணி பண்ணிருக்கார்... முக்கியமான காட்சிகள்ல கூட ரொம்ப மோசமான இசை.. பாடல்களும் ஒன்னும் தேரலை....
மொத்தத்தில் சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்.
எனக்குத் தன் சுடு சோறு சாப்பிட்டுட்டு வரட்டுமா...
ReplyDeleteஅன்புச் சகோதரன்...
மதி.சுதா.
வன்னிப்போர்க் களத்தில் பொருட்களின் விலைப்பட்டியல்
தங்கள் பார்வை மிகவும் வித்தியாசமாகவும் அருமையாகவும் இருக்கிறது வாழ்த்துக்கள் சகோதரம்....
ReplyDeleteசாப்பிடுங்க.. சாப்பிடுங்க..
ReplyDeleteசந்தானம் ஓரிரு காட்சிகளில் சிரிக்க வைக்கிறார். ஹரிஹரன் சார் பாட்டு பாடறதோட நிறுத்திக்கலாம்... முக்கியமான காட்சிகள்ல கூட ரொம்ப மோசமான இசை.. பாடல்களும் ஒன்னும் தேரலை....
ReplyDeleteமொத்தத்தில் சிக்கு புக்கு - சரக்கில்லாத ரயில்.
......இனி யாராவது அந்த படம் போய் பார்ப்பாங்களா?
நல்ல விமர்சனம்!
ReplyDeleteஎன்ன இது இப்பெல்லாம் எங்கும் காபி எதிலும் காபியாவே இருக்கு!
காபி அடிச்சிருக்காங்கறதை வித்தியாசமா சொல்லியிருக்காங்க!
காபி அடிச்சிருக்காங்கறதை வித்தியாசமா சொல்லியிருக்கீங்க!
ReplyDelete@சித்ரா
ReplyDeleteவாங்க சித்ரா.. :-) நீங்க வந்தாலே கை தானா இந்த லட்டரைத் தேடி அடிச்சுடுது...
@ எஸ்.கே
ReplyDeleteஆமாங்க எஸ்.கே.. படத்துலதான் வித்தியாசமா எதுவும் இல்ல.. விமர்சனத்தையாவது அப்படி பண்ணுவோமே...
இப்ப தான் பாபு சாரோட விமர்சனத்த படிச்சிட்டு வர்றேன்..ஸேம் பீலிங்...
ReplyDeleteஅருமையான விமர்சனம் நண்பரே
ReplyDeleteவித்தியாசமாக உள்ளது
தொடருங்கள்........
ஆகா ஆரம்பிச்சுட்டாங்களா? இவங்க வழக்கம் போல ஹாலிவுட், பழைய தமிழ் சினிமாவா மட்டும் copy அடிக்கலாம். உலக சினிமாவ copy அடிக்க ஒரு தனி திறமை வேணும். அதுசரி, அது இருந்தா சொந்தமாவே யோசிக்கலாமே!
ReplyDeleteTemplate நல்லா இருக்கிறது .
ReplyDeleteவிமர்சனமும் நல்லா இருக்கிறது
இதுவும் சுட்ட படமா?
விமர்சனம் எழுதும்போது சும்மா இருந்த என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க. ஓ அப்படியாவது நான் ரோசப்பட்டு உங்க மேல வழக்கு போட்டு உங்கள பிரபல பதிவர் ஆக்கிடுவேன்னு பாக்குறீங்களா. மாட்டேன். மாட்டேன்
ReplyDeleteஉங்க புது டெம்ப்ளேட் அருமை. ஊதா மற்றும்பச்சை கலர் எடுப்பாக உள்ளது. அந்த பறவையும் அழகு.
ReplyDeleteஎன்னங்க டெம்ப்ளேட்டே விமர்சனம் எப்படி?
விமர்சனம் நல்லா இருக்கு பங்கு
ReplyDeleteநல்ல வேலை நான் படம் பாக்கல
ReplyDelete@ஹரிஸ்
ReplyDelete//இப்ப தான் பாபு சாரோட விமர்சனத்த படிச்சிட்டு வர்றேன்..ஸேம் பீலிங்...
@ஹரிஸ்
ReplyDelete//இப்ப தான் பாபு சாரோட விமர்சனத்த படிச்சிட்டு வர்றேன்..ஸேம் பீலிங்...
ஆமாங்க ஹரிஸ் நாங்க ரெண்டு பேரும்தான் போய் பார்த்தோம்...
@மாணவன்
ReplyDeleteநன்றி நண்பரே
@ஜீ
ஆமாங்க... எப்பதான் சொந்தமா யோசிப்பாங்களோ
@NIS
நன்றிங்க NIS
@ரமேஷ்- ரொம்ப நல்லவன்
ReplyDelete//விமர்சனம் எழுதும்போது சும்மா இருந்த என்னை ஏன்யா வம்புக்கு இழுக்குறீங்க. ஓ அப்படியாவது நான் ரோசப்பட்டு உங்க மேல வழக்கு போட்டு உங்கள பிரபல பதிவர் ஆக்கிடுவேன்னு பாக்குறீங்களா. மாட்டேன். மாட்டேன் //
சே.. சே உங்களுக்கு ரோசம் வராதுன்னு எனக்குத் தெரியும்ங்க... அதனால அந்த மாதிரி முயற்சில்லாம் பன்ன மாட்டேன்...
டெம்ப்ளேட்டுக்கே விமர்சனம் சூப்பருங்க.....
@கார்த்திக்குமார்
ReplyDeleteவாங்க பங்காளி... முடிஞ்சா பாருங்க.. கிளாசிக் படத்தை...
அசலும் .. நகலும்...இரண்டு படங்களுக்கு ஒரே நேரத்தில் விமர்சனம்... நல்லாதானிருக்கு.. (உங்க விமர்சனத்தை சொன்னேன்)
ReplyDelete@வெறும்பய
ReplyDeleteவாங்க ஜெயந்த்... அந்த படமும் சமீபத்துலதான் பார்த்தேன்.. அதான்.. டூ இன் ஒன் ஆக்கிட்டேன்...
//சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்//
ReplyDeleteஹா ஹா ஹா:)
@prasanna
ReplyDelete:-) வாங்க பிரசன்னா..
// ரெண்டு பேருக்கும் ஒரே ஃபிளைட்ல வர்ராங்க அப்படிங்கறதைத் தவிர எந்த சம்பந்தமும் கிடையாது..//
ReplyDeleteஅவுங்க தான் ஹீரோ ஹீரோயன் அப்படிங்கிற சம்பந்தம் இருக்குள்ள ..!!
// ரெண்டு பேரும் புருசன் பொண்டாட்டியா நடிச்சு டிரெயின்ல போக வேண்டிய நிலை... அவங்க ஊரு போய் சேர்ரதுக்குள்ள அவங்களுக்குள்ள காதல் வந்திடும்னு நமக்குத் தெரியாதா என்ன..///
ReplyDeleteஅதானே , இதெல்லம் தெரியலைனா தமிப்படம் பார்க்கவே கூடாது ..௧!
இந்த அப்துல் காதரும் நீங்களும் ஒண்ணா அந்த படம் பார்த்தீங்களா..?
ReplyDeleteகிளாசிக் படம் கூட ..?
உங்க கிளாசிக் பட விமர்சனம் அருமை ரமேஷ்.
ReplyDelete@ப.செல்வக்குமார்
ReplyDelete//அவுங்க தான் ஹீரோ ஹீரோயன் அப்படிங்கிற சம்பந்தம் இருக்குள்ள ..!!
ஆமாங்க இந்த வாலிட் பாயிண்ட் ஒன்னு போதுமே அவங்க சேர்றதுக்கு...
//இந்த அப்துல் காதரும் நீங்களும் ஒண்ணா அந்த படம் பார்த்தீங்களா..?
கிளாசிக் படம் கூட ..?
ஆமாம் ஒன்னாதான் பார்த்தோம்.. இரண்டு படத்தையும்.. அதுவும் இந்தப்படம் நல்லாருக்கும்னு நினைக்கிறேன் வாடான்னு நான்தான் அவரையும் கூட்டிட்டுப் போனேன்... இன்டர்வல் வரைக்கும் படம் போனதே தெரியலை.. அதனால வலிக்காத மாதிரியே நடிச்சிக்கிட்டு இருந்தேன்.. அப்புறம் முடியலை...
பெரும்பாலான படங்கள் நாங்க ஒன்னாதான் பார்ப்போம்..
@நாகராஜசோழன்
ReplyDeleteவாங்க சோழரே.. ஆமாங்க கிளாசிக் படம் பாருங்க.. மொழி புரியலைன்னாலும் படம் புரியும்... சிக்கு புக்கு மொழி புரிஞ்சாலும் படம் புரியாது...
//இங்க ப்ளூ கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம் மொழிபெயர்ப்பு... சிகப்பு கலர்ல கொடுத்திருக்கறது எல்லாம்... கொரியா... (ஆனா ஏன் கொரிய மொழில இல்லைன்னு எல்லாம் கேட்கக் கூடாது)..//
ReplyDeleteஇது தனி கச்சேரியாக இருக்குது...
மொத்தத்தில் சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்.
ReplyDeleteசரக்கு???
நல்லா கெளப்புறீங்க பீதிய!
சரி, மணிகண்டன் பாஸா? பெயிலா?
ReplyDelete@பாரத்... பாரதி...
ReplyDelete//மொத்தத்தில் சிக்கு புக்கு - திருட்டுச் சரக்கு ரயில்.
சரக்கு???
நல்லா கெளப்புறீங்க பீதிய! //
இது அந்த சரக்கு இல்லீங்க.. ரயில்ல ஏத்துவாங்களே அந்த சரக்கு (கூட்ஸ்)... அப்புறம் மூளையையும் குறிக்கும்...
மணிகண்டன் ஜஸ்ட் பெயில் ஆயிட்டாருங்க...
நல்ல விமர்சனம்... சிக்கு புக்கு அவ்வளவுதானா
ReplyDelete@ரியாஷ்
ReplyDeleteவாங்க ரியாஷ்... ஆமாங்க..
classic படம் பார்த்து இருக்கிறேன்.மிக அருமையான படம்.நம்ம இயக்குனர்கள் கொரிய காதல் படங்களை காப்பி அடிக்காது இருந்தால் தான் அதிசயம்.
ReplyDeleteநல்ல வேளை.... என்னோட நூறு ரூபா வேஸ்ட் ஆயிடாம காப்பாத்திட்டீங்க..:)
ReplyDelete@முத்துசிவா
ReplyDeleteவாங்க சிவா.. ஆமாங்க..
@ILLUMINATI
ReplyDeleteவாங்க.. ஆமாங்க.. கொரியப் படத்துல வர நிறைய சீன தமிழ்ல அப்படியே சுட்டுடறாங்க...
ரமேஷ்.. இந்த மாதிரி படத்தை எல்லாம் பார்த்து ஏன் உங்க டைமை வேஸ்ட் பண்றீங்க? படம் ரசிக்கும் படி இல்லைன்னாலும், இரண்டு படத்தையும் இணைச்சி நீங்க எழுதின விதம் ரசிக்க வைக்குது. உங்க நட்பு பத்தின கவிதையை படிச்சேன். கலக்கிட்டீங்க ரொம்ப டச்சிங்கா இருந்துச்சி.
ReplyDelete@கவிதை காதலன்
ReplyDeleteஉண்மைதாங்க.. படம் பாக்கறதுக்கு முன்னாடி ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.. அதான் போனேன்..
//இரண்டு படத்தையும் இணைச்சி நீங்க எழுதின விதம் ரசிக்க வைக்குது.
நன்றிங்க..
//உங்க நட்பு பத்தின கவிதையை படிச்சேன். கலக்கிட்டீங்க ரொம்ப டச்சிங்கா இருந்துச்சி.
மறுபடியும் ஒரு நன்றிங்க..
அப்ப சிக்கு புக்கு ரயில் பக்கு பக்குன்னு நின்றும்னு சொல்லுங்க
ReplyDeleteசார் படத்துக்கு போகலாமா நெனச்சேன்... ஆனா... இனி ..
ReplyDeleteநன்றி என்னைய காப்பற்றியதர்க்கு...
உங்க விமர்சன பார்வை கொஞ்சம் வித்தியாசமான பார்வை...
வாழ்த்துக்கள்..
@நா.மணிவண்ணன்
ReplyDeleteஆமாங்க மணிவண்ணன்... பாதியிலேயே நின்னுடுச்சி ரயில்..
@அரசன்
ReplyDeleteமுதல் முறை என்னோட பதிவுக்கு வர்ரீங்கன்னு நினைக்கறேன்.. வாங்க அரசன்...
வாழ்த்துக்கு நன்றிங்க...
விமர்சனம் தெளிவா இருக்கு..நல்ல எழுத்து நடை
ReplyDeleteக்ளாசிக் படத்தை சுட்டுட்டாரா...இனி பதிவரை கண்டாலே டைரக்டர்ஸ் நடுங்குவாங்க்..வேறு எந்த பத்திரிகைகளிலிலும் வராத தகவல்தான்
ReplyDelete@ஆர்.கே.சதீஸ்குமார்
ReplyDeleteரொம்ப நன்றிங்க சதீஸ்.. உண்மைதாங்க அச்சு ஊடகத்துல பெரும்பாலும் இந்த சுட்ட கதைலாம் பப்ளிஸ் பன்றது இல்லை.. பதிவர்கள் விமர்சனம் எழுதறதால இனிமே யோசிச்சு... ஒழுங்கா காபியடிச்சாங்கன்னா சரிதான்...
ஆகா காப்பியா...
ReplyDelete@அமுதா கிருஷ்ணா...
ReplyDeleteஆமாங்க அதுவும் அரைகுறை காப்பி.. அவசரத்துல காபியடிச்ச மாதிரி இருக்கு..
//மணிகண்டன் ஜஸ்ட் பெயில் ஆயிட்டாருங்க... //
ReplyDeleteஅடுத்த வாய்ப்பு கிடைக்குமா?
ஜீவா வின் பெயரை வைத்தாவது..
பார்ப்போம்..
இன்னைக்கு படத்த போய் பாக்கலாம்னு இருந்தான் இதையும் ஆன்லைன்லத்தான் பாக்கணுமா
ReplyDeleteவாவ்.. குட் பாஸ்.. கலக்கிட்டீங்க...
ReplyDeleteஆக மொத்தம் இதுவும் சுட்ட கதை தானா ? பதிவு பிரமாதம்...
ReplyDelete@FARHAN
ReplyDeleteவாங்க FARHAN
@Sukumar Swaminathan
வாங்க சுகுமார்.. நன்றிங்க
@தினேஷ்
ஆமாங்க.. சுட்ட கதைதான்.. ஆனா டேஸ்ட் இல்லை.. அரைவேக்காடு... நன்றிங்க...
இவ்வளவு விபரமாக பார்த்த நீங்கள் படத்தின் கதை யாருடையது என்று பார்த்தீர்களா.. பார்த்தீர்களா
ReplyDeleteநன்றி விமர்சனத்திற்கு..தங்களின் விமர்சனம் சற்று வித்தியாசமாக இருந்தது ..அப்பாவாகா வரும் ஆர்யா ok ..
ReplyDeleteமேலும் உங்களுடைய சினிமா சம்பதமான பதிப்புகள் பிரபலம் அடைய எங்களுடைய Filmics.com
பதிவு செய்க....