Search This Blog

Sunday, July 18, 2010

மதராசபட்டினம் (2010) - திரை விமர்சனம்கமர்சியல் வெற்றிதான் முக்கியம் என பஞ்ச் டயலாக்குகள் குத்துப்பாட்டுகள்....மீதி எல்லாம் மொக்கையான காட்சிகள் என எடுக்காமல் தைரியமாக இடைச்செருகல் இல்லாத திரைக்கதையை இயக்கியதற்காக விஜய்க்கும், தொடர்ந்து வித்தியாசமான படங்களையே தயாரித்துவரும் AGS நிறுவனத்துக்கும் முதலில் ஒரு நன்றி....

ஒரு வெள்ளைக்காரக் கவர்னர் பெண்ணுக்கும் இந்திய சலவைத் தொழிலாளி ஒருவனுக்கும் ஏற்படும் காதல்தான் படம். அதனை நம் மனதிற்கு மிகவும் அருகில் சொல்லி நம்மை ஆச்சரியப்படுத்துகின்றனர் இந்தப் படக்குழுவினர்.

பரிதியிடம் (ஆர்யா) ஒரு பொருளைக் கொடுப்பதற்காக சாவின் விளிம்பில் நிற்கும் அவனது பழைய காதலி எமி வில்கின்சன் (கரோல் ட்ரங்க்மர்) இந்தியா வருவதில் இருந்து துவங்குகிறது படம். அவனைத்தேடுவதற்கு அவரிடம் இருக்கும் ஒரே தடயம், 60 ஆண்டுகளுக்கு முன் அவர் எடுத்த பரிதியின் ஒரு புகைப்படம் மட்டுமே...


தேடுதல் நடந்து வரும் போது எமி அவரது பழைய நிகழ்வுகளை நினைத்துப் பார்ப்பதாகப் படம் நகர்கிறது. இளம் வயது எமியாக எமி ஜேக்சன். இவரது அழகு, நடிப்பு.......இரண்டுமே அசத்தல். முதிர்ந்த எமியாக வரும் கரோல் ட்ரங்க்மரும் சிறப்பாய் நடித்திருக்கிறார்...படத்தில் பெரும்பாலும் இவரது கண்கள் மட்டுமே நடிக்கின்றன....அதிலும் ஒவ்வொரு முறையும் வெள்ளைக்காரிதானே, இவருக்கு எங்கே தெரியப்போகிறது என (அவருக்கு தமிழ் தெரியும் என்பது தெரியாமல்) அவரது பேத்தியிடம் ஏமாற்றிப் பணம் வாங்கும் போதெல்லாம்....அவர் வெளிப்படுத்தும் பார்வை......நமக்கே கூசுதுங்க............


தனக்கு மட்டுமே ஸ்கோப் இருந்தால்தான் நடிப்பேன் என அடம்பிடிக்கும் ஹீரோக்களுக்கு மத்தியில், ஆர்யா வித்தியாசமானவராக இருக்கிறார்..........இதில் அவரது பாத்திரம் உணர்ந்து அழகாய் நடித்திருக்கிறார். இவர் போலவே எல்லா ஹீரோக்களும் மாறினால் தமிழில் நிச்சயம் நிறைய நல்ல படங்களை எதிர்பார்க்கலாம்....

வித்தியாசமான படங்கள் என்றாலே அது என்னவோ G.V பிரகாஷ் குமாருக்கே வாய்ப்பு கிடைக்கிறது. இந்தப் படத்தில் பின்னணி இசையிலும் சரி...பாடல்களிலும் சரி.....படத்துடன் ஒன்ற வைத்திருக்கிறார். அதிலும்...ஆர்யா ஆங்கிலத்தில் கற்றுக்கொண்ட வார்த்தைகளை எமியிடம் கூற முயற்சித்துத் தடுமாற....மறந்திட்டியா...என அவர் திடீரேன தமிழில் கேட்கும்போது ஆர்யா அவரை ஆச்சரியத்துடன் பார்க்க...பின்னணியில் தான தோம்தனன.....என ஆரம்பித்து, பூக்கள் பூக்கும் தருணம்....பாடல் ஆரம்பிக்கிறது....அந்த இடத்தில் நாமும் அவர்களுடன் சேர்ந்து அதே உணர்வுடன் பயணிக்கிறோம்.......அசத்தல்....அதே போன்று காற்றே.... பாடலிலும் அதே உணர்வு........அருமை..............


கிரீடம், பொய் சொல்லப்போறோம் போன்ற அவரது முந்தைய படங்களில் சற்று சருக்கிய இயக்குனர் விஜய்....இதில் மிகவும் கவனமாக, கடினமாக உழைத்திருக்கிறார்....அவரது மற்றும் அவரது குழுவினரின் உழைப்பு ஒவ்வொரு ஃபிரேமிலும் தெரிகிறது.......................கலக்கிட்டீங்க விஜய்.............

படத்தில் நெகிழவைக்கும் காட்சிகள் நிறைய....

பூக்கள் பூக்கும் தருணம் பாடல் ஆரம்பம்..........
400 வருசம் கழிச்சு முதல் முறையா வெள்ளைக்காரனை அடிச்சிருக்கோம் என்று எம்.எஸ் பாஸ்கர் சொல்வது........(உண்மையில் அந்தச் சண்டை முழுவதுமே நெகிழ்ச்சிதான்)...........
நாசரும் பாலாசிங்கும் கட்டித்தழுவும் இடம்......
சுதந்திரம் கிடைத்தவுடன் பெரியவர் ஒருவர் எமியின் ஆடையில் இந்தியக்கொடியைக் குத்திவிட்டு அவர் எனப்பார்த்து அதைத் திரும்ப எடுக்க வரும்போது அவர் அதை மறுப்பது.......
எமி சலவைத்தொழிலாளிகளின் குழந்தைகளிடம்.......அவர் கவர்னராகி....பள்ளிக்கூடம் கட்டுவேன், கல்லூரி கட்டுவேன், மருத்துவமனை கட்டுவேன்....எனச்சொல்லும் போது ஒரு சிறுமி...."எங்க வண்ணாந்தாரையை திருப்பித் தருவீங்களா....." எனக் கேட்குமிடம்...
எமி தன் காதலன் உயிர் பிழைத்தால் போதுமென...ஆர்யாவை படகில் இருந்து தள்ளிவிட.....மயங்கிய நிலையிலும் அவரது கைகள் படகு முனையைப் பிடித்திருக்கும் காட்சி.........
இன்னும்........................

இந்தப் படத்துல குறையே இல்லையா.............நிறைய நல்ல விசயம் இருக்கும்போது குறைகளைப் பெருசா நினைக்க வேனாம் இல்லீங்களா...

போங்க போய் இந்தப்படத்தை தியேட்டர்ல பாருங்க...............

மொத்தத்தில் உணர்வுப்பூர்வமான ஆட்களின் சிறந்த படங்களின் பட்டியலில் இந்தப் படத்திற்கும் நிச்சயம் ஒரு இடம் உண்டு.........................


17 comments:

 1. ரொம்ப நல்லா விமர்சனம் பண்ணியிருக்கிங்க ரமேஷ்.. வாழ்த்துக்கள்..

  ReplyDelete
 2. very gud
  pls remove word verification

  ReplyDelete
 3. @BOSS, நன்றி பாஸ்..........வேர்ட் வெரிஃபிகேசன் ரிமூவ் பண்ணிட்டேன்.....

  ReplyDelete
 4. அருமையான விமர்சனம் நண்பா

  ReplyDelete
 5. @படைப்பாளி..நன்றி நண்பா....

  ReplyDelete
 6. விமர்சனம் நல்லாயிருக்கு

  பதிவுகளில் ஒரே கமெண்டுகளை பயன்படுத்துவதை தவிர்க்கவும்

  :)

  ReplyDelete
 7. உங்கள் கருத்துக்கு நன்றி யோகேஷ்..எல்லா விமர்சனத்தையும் படித்துவிட்டு நன்றாக இருந்ததால் மட்டுமே அவ்வாறு கமெண்ட் போட்டேன்..ஆனாலும் நீங்கள் சொல்வது புரிகிறது எனக்கு, இனி தவிர்த்துவிடுகிறேன்..நன்றி..

  ReplyDelete
 8. ம்ம்ம் நன்றி நண்பா :)
  வாழ்த்துக்கள்
  தொடர்ந்து நிறைய எழுதுங்கள்

  ReplyDelete
 9. நிச்சயமா எழுதறேன்..என்னோட இன்னொரு பதிவையும் முடிஞ்சா படிச்சு..கருத்து சொல்லுங்க..

  ReplyDelete
 10. நல்லாவே எழுதி இருக்கீங்க ரமேஷ். பதிவுக்கு நடுவுல அதிகமா போட்டோ போடாதிங்க. அப்புறம் எமிய பத்தி கவிதை கூட எழுது இருக்கேன். முடிஞ்சா படிச்சு பாருங்க.

  http://thegoodstranger.blogspot.com/2010/07/blog-post_16.html

  ReplyDelete
 11. Nice Movie..Nice post too... :)

  Nalla enjoy panni irukeenga pola ?

  ReplyDelete
 12. வருகைக்கு நன்றி மகேஷ்..ஆமாம் நல்லா எஞ்ஜாய் பண்ணினேன்..படத்தைப் பார்த்து..நல்ல அனுபவம்..உண்மையில நிறைய விசயத்தை நான் இந்தப் பதிவுல சொல்லாமயே விட்டுட்டேன்னுதான் தோனுது..

  ReplyDelete
 13. படத்த ஒரு பொழுது போக்கா பார்க்கமா ரொம்ப ஆழ்ந்து பாத்து இருக்கீங்கன்னு நினைக்கிறேன், நானும் படம் பார்த்தேன், படத்தை பற்றிய உங்கள் விமர்சனம் மிகசரியானதாய் இருக்கிறது.

  வாழ்த்துக்கள் ரமேஷ்...

  ReplyDelete
 14. நமது பொழுதுபோக்கு பொழுதைப் போக்கும் அந்த நேரத்தில் மட்டுமல்லாமல் அதன் பிறகு அதனை நினைத்துப் பார்க்கும் போதும் மகிழ்ச்சி அளிப்பதாய் இருக்க வேண்டும் என நினைப்பேன்..அதனால்தான் இப்படி...

  வாழ்த்துக்கு நன்றி விஜய்...

  ReplyDelete
 15. தெளிவா நிறைவா விமரிசிச்சிருக்கீங்க ரமேஷ். நன்றி!

  ReplyDelete
 16. வருகைக்கு நன்றி கிரி

  ReplyDelete
 17. Naan intha film last week than pathan, athum Kalaingar T.V.la than pathan. Bore adikkuthunu time pass.ku pakkalanu patha,..!!! enakkulla oru kelvi vanthathu? ada ithana varusama ivlo nalla film.a paakama irunthuttamae,... Chence.a illanga super film VIJAY sir,. T.v.la paakarathukkey padam pattaya kalapputhu. Theater.la pathrukkalam. naan miss pannita. I Love & like very much in this film,. Ovvoru Seen.num Super. (INDEPENDENCE & LOVE 2.um Screen.la konduvanthu ivlo Alaga Eduthurukkanga, & super.a Nadichurukkanga.) Actor Aarya, Yemi, and etc,.. Kandippa naan marupadiyum paapan,.. paakathavenga kandippa parunga....... JAI HIND.

  ReplyDelete