Search This Blog

Thursday, July 29, 2010

ஐடென்டிட்டி..திக் திக் அனுபவம் (Identity (2003))


ஒரு அபார்ட்மெண்டில் ஆறு நபர்களை கொடூரமான முறையில் கொலை செய்த குற்றத்திற்காக மால்கம் ரிவர் என்பவனுக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.

மால்கமின் தாயார் ஒரு விலைமாது. மால்கமுக்கு சிறுவயதாக இருக்கும் போது அவர் தொழிலுக்காக மோட்டல் செல்லும்போது மால்கமை காரில் வெளியே காத்திருக்கச் சொல்லுவார். அப்படி காத்திருந்து காத்திருந்து மால்கம்மிற்கு மனநலம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை அவனது டைரியைப் படித்துப் பார்க்கும் அவனது மனநல மருத்துவர் கண்டறிந்து அவன் தண்டனை அனுபவிப்பதற்கு முந்தைய நாள் இரவு நீதிபதியை மறுவிசாரணைக்கு அழைக்கிறார்.

அடுத்து சம்பந்தமே இல்லாமல் காட்சிகள் மாறுகின்றன. ஒரு மோட்டலுக்குள் சம்பந்தமே இல்லாத 10 நபர்கள் காட்டாற்று வெள்ளத்தின் காரணமாகவும், மழையின் காரணமாகவும், இன்ன பிற காரணங்களுக்காகவும் வந்து தங்குகின்றனர்.

அவர்கள் ஒவ்வொருவராக அங்கு வந்து சேருவதைக் காண்பிக்கப்பட்டிருக்கும் விதம்! விவரிக்க முடியாத விருவிருப்பு. படம் துவக்கத்தில் ஆரம்பிக்கும் விருவிருப்பு படம் முடியும் வரை இருக்கிறது. படத்தில் கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளும் மழையிலயே வருது. இவ்வளவு விருவிருப்பான ஒரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு...

அதற்குப்பின்தான் ஆரம்பிக்கிறது திக் திக்....மோட்டலுக்கு வந்து சேர்ந்த பத்து நபர்கள் + அங்கேயே இருந்த மேலாளருடன் சேர்த்து மொத்தம் 11 பேர். அவர்களின் விவரங்கள் மிகவும் முக்கியம் அதனால் அதையும் பாருங்கள்..

ஒரு தாய் (1. Alice), தந்தை (2. George), அவர்களது பையன் (3. Timmy),
ஒரு விலை மாது (4. Paris), ஒரு நடிகை (5. Caroline), அவளது டிரைவர் (6. Edward), ஒரு கணவன் (7. Lou), அவனது மனைவி (8. Ginny), ஒரு போலீஸ் (9. Rhodes), அவர் அழைத்துச் செல்லும் ஒரு குற்றவாளி (10. Robert), மோட்டல் மேனேஜர் (11. Larry).

அப்புறம் இவர்கள் அனைவரின் பிறந்த தேதியும் மே 10. எப்படி அப்படி அமைந்தது?

இவர்களில் ஒவ்வொருவராகக் கொலை செய்யப்படுகின்றனர். ஏன்? யார் இந்தக் கொலைகளைச் செய்தது? என்பது இறுதி வரை சஸ்பென்ஸாக நகர்கிறது. இடையிடையே மால்கமின் விசாரணையும் காண்பிக்கப்படுகிறது. முதலில் கரோலின் (i) என்ற நடிகை கொலை செய்யப்படுகிறார். அவரது உடலின் அருகே அறை எண் 10 இன் சாவி இருக்கிறது. ரோட்ஸுக்கு (போலீஸ்) அவர் அழைத்து வந்த குற்றவாளிதான் (ராபர்ட்) அவளைக் கொலை செய்திருப்பார் என்று சந்தேகம். உடனே ராபர்ட்டை அடைத்து வைத்திருந்த கழிவறைக்கு சென்று பார்க்கிறான். அங்கு அவன் இல்லை. அடுத்ததாக லூவும் (ii) மர்மமான முறையில் கொல்லப்படுகிறான். அவனுக்கு அருகில் அறை எண் 9 இன் சாவி இருக்கிறது.  அதற்கு அடுத்த காட்சியில் தப்பியோடும் ராபர்ட் தொலைதூரத்தில் வெளிச்சம் கண்ணுக்குத் தெரிய வேகமாக அங்கு போய் பார்க்கிறான்...அது அவன் தப்பி வந்த மோட்டல். மோட்டலில் இருந்து தப்பி நீண்ட தூரம் ஓடி வந்த ராபர்ட் மீண்டும் எப்படி மோட்டலுக்கே வந்தான்!!!!!!!!! எதிர்பார்ப்பு எகிறுகிறதா..மேல படிங்க பாஸ்.....

சிறிது நேரத்தில் திரும்ப மோட்டலுக்கே வந்த ராபர்ட்டும் (iii) கொல்லப்படுகிறான். அவனருகில் அறை எண் 8 இன் சாவி இருக்கிறது. அப்படியானால் இதுவரை செய்த கொலைகளைச் செய்தது யார்?

சந்தேகம் மோட்டல் மேனேஜர் லேரி மீது திரும்புகிறது. அவன் தான் கொலைகாரன் என்று ரோட்ஸ் வாதாடுகிறான். இதனால் லேரி காரில் தப்ப முயற்சிக்கிறான். அப்போது எதிர்பாராத விதமாக ஜியார்ஜ் (iv) கார் ஏற்றிக் கொல்லப்படுகிறான். இன்னும் லேரி மீது சந்தேகம் வலுக்கிறது..ஆனால் அவன் அது எதிர்பாராதவிதமாக நடந்த விபத்து..மற்ற கொலைகளுக்கும் எனக்கும் துளியும் சம்பந்தமில்லை என்று வாதாடுகிறான். அதை ரோட்ஸ் (போலீஸ்) நம்ப மறுக்கிறான். சிறிது நேரத்தில் அலிசும் (v) படுக்கையில் இறந்து கிடக்கிறார். அவரது அருகே அறை எண் 6 இன் சாவி இருக்கிறது. அப்படியானால் 7 ஆம் எண்ணுள்ள சாவி எங்கே என்று தேடுகின்றனர். அது எதிர்பாராதவிதமாக கார் ஏற்றிக் கொல்லப்பட்ட ஜியார்ஜின் அருகே இருக்கிறது. அனைவருக்கும் பதட்டம் அதிகமாகிறது. அவங்களுக்கு மட்டுமா...நமக்கும்தான்.....

இதற்கிடையே ஜின்னி ராபர்ட்ஸின் காரில் ஏறுகிறாள் அதில் ரோட்ஸ் (போலீஸ்), ராபர்ட்ஸ் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் இருப்பதைப் பார்க்கிறாள். உண்மையில் ரோட்ஸ், ராபர்ட்ஸ் இருவருமே குற்றவாளிகள்தான்...அவர்களைக் கூட்டி வந்த போலீஸை ரோட்ஸ் கொன்றுவிட்டு....அவரது உடைகளை எடுத்துப் போட்டுக்கொண்டு போலீஸ் போல வேடமிட்டு...ராபர்ட்டை அழைத்துச் செல்கிறான் என்பதைக் கண்டுபிடித்துவிடுகிறாள். அப்படியானால் இதுவரை நடந்த கொலைகளைச் செய்தது போலீஸ் வேடத்தில் இருந்த ரோட்ஸா? ஏன் அவன் இந்தக் கொலைகளைச் செய்தான்?

இதெல்லாம் நாம யோசிச்சிட்டு இருக்கும் போதே....ஜின்னி (vi), டிம்மியக் (vii) கூட்டிக்கிட்டு காருகிட்ட போறா....அது வெடிச்சுச் சிதறுது..அவங்களும் அவுட். மீதி உயிரோட இருக்கறது பாரிஸ், எட்வர்ட், ரோட்ஸ், லேரி ஆகிய நால்வர் மட்டுமே. இவங்கள்ளாம் அதிர்ச்சியோட போய் எரிஞ்ச காருக்கிட்ட பாத்தா..அங்க ஜின்னியோட உடம்போ, டிம்மியோட உடம்போ காணோம்...அதிர்ச்சியாகி..ஏற்கனவே செத்துக் கிடக்கறவங்களையும் போய் பாக்கறாங்க...அங்கல்லாம்..எந்த உடம்பும் இல்லை.

இதற்கிடையே நாம ஆரம்பத்துல சொன்ன மால்கம மறந்திட்டமே... மால்கமுக்கு Dissociative Identity Disorder அப்படிங்கற மனநோய் இருக்கு அதனாலதான் அவன் அவனையே அறியாம ஆறு பேத்தக் கொன்னுட்டான். அதனால அவனுக்கு மரண தண்டனை தரக்கூடாதுன்னு மனநல மருத்துவர் வாதாடுறார்.

இப்படி அவனுக்காக வாதாடும் மனநல மருத்துவர் கடைசில என்ன ஆகிறார்?
செத்துப் போனவங்க எல்லாம் எப்படி மாயமா மறைஞ்சாங்க?
மோட்டலில் இருந்து வெகுதூரம் தப்பியோடிய ராபர்ட் மறுபடியும் மோட்டலுக்கே வந்தது எப்படி?
மால்கமுக்கும் அந்த 11 பேருக்கும் என்ன சம்பந்தம்?
மீதி இருக்கற நாலு பேத்துல யார் யாரெல்லாம் சாகப்போறாங்க?

இதுக்கெல்லாம் விடை வேணும்னா இந்தப் படத்தைப் பாருங்க. அடுத்தடுத்து திருப்பங்களா வரும் கிளைமேக்ஸ் சூப்பர். ஆரம்பத்துல இருந்து கடைசி வரைக்கும் கண்கொட்டாம பாக்கனும்னுவாங்களே அப்படி பாக்க வேண்டிய படம்..தண்ணிக் குடிக்கலாம்னு தலையைத் தூக்கினம்னா..எதாவது முக்கியமான சீன மிஸ் பண்ணிடுவோம்...வாய்ப்பு கிடைச்சா இல்லை...வாய்ப்பு ஏற்படுத்திக்கிட்டு பாருங்க பாஸ்...செம விருவிருப்பான படம்........11 comments:

 1. படம் செம திரில்லிங் போல,பார்த்துட வேண்டியதுதான்.

  ReplyDelete
 2. வருகைக்கு நன்றி சி.பி.செந்தில்குமார். ஆமாம்..செம திரில்லிங்தான்..கடைசி வரைக்கும்...

  ReplyDelete
 3. எங்கே விறு விறுப்பாக கதை சொல்லும் நேர்த்தியில், கிளைமாக்ஸ் suspense யும் போட்டு உடைத்து விடுவீர்களோ என்று நினைத்தேன்... நல்ல வேளை! பாராட்டுக்கள்!

  ReplyDelete
 4. வருகைக்கு நன்றி சித்ரா..

  ஆம்..இது சற்று சிக்கலான திரைக்கதையாக இருந்ததால்...எதை எதை சொன்னால் சஸ்பென்ஸ் உடைந்துவிடாமல் இருக்கும் என்பதில் சற்று கவனமாகவே இருந்தேன்...

  ReplyDelete
 5. கிளைமாக்ஸ் சொல்லததற்கு பாராட்டுக்கள்.நான் சப்-டைட்டிலுடன் பார்த்தேன் அதான் புரிந்தது..

  ReplyDelete
 6. வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா

  ReplyDelete
 7. நிஜமா இந்த படத்தோட கதை கடைசி வரைக்கும் புரியலங்க ...உங்களுக்கு புரிஞ்சா சொல்லுங்க ரமேஷ்

  ReplyDelete
 8. கண்டிப்பா சொல்றேன்..விஜய்.இன்னிக்கே கால் பண்றேன் உங்களுக்கு....

  ReplyDelete
 9. கதையை படிக்கும் போதே செம இண்ட்ரஸ்டிங்கா இருக்கும் போலே இருக்கே.

  ReplyDelete
 10. @கவிதை காதலன்

  வாங்க மணிகண்டவேல்..ஆமாங்க செம இண்ட்ரஸ்டிங்கான படங்க இது...
  கட்டாயம் சான்ஸ் கிடைச்சா பாருங்க...

  ReplyDelete
 11. //எங்கே விறு விறுப்பாக கதை சொல்லும் நேர்த்தியில், கிளைமாக்ஸ் suspense யும் போட்டு உடைத்து விடுவீர்களோ என்று நினைத்தேன்... //
  அதே...

  நல்லா கொண்டு போயிருக்கீங்க. வாழ்த்துகள்

  ReplyDelete