Search This Blog

Friday, October 15, 2010

உண்மை சொன்னாள் (சவால் சிறுகதை)


அந்தப் புல்வெளியில் நான் என்னுடைய அக்கா என் அம்மா மாமா நால்வரும் அமர்ந்திருந்தோம்..இதுவரை காரசாரமாக நாங்கள் மாறி மாறி சண்டையிட்டுக்கொண்டதால் தொண்டை வரண்டு இனி பேச முடியாது சிறிது ஓய்வு தேவை என்று உடல் சோர்வாய் சொல்லியது.

ஒருவருக்கொருவர் அவரவர் கருத்துக்களில் பிடிவாதமாகவே இன்னும் இருந்ததால் பேச்சும் ஒரு முடிவுக்கு வருவதாய் தெரியவில்லை. எங்களுக்கும் யாருக்கும் விட்டுக்கொடுக்க எங்களது ஈகோ தடுத்தது. ஒருவரை ஒருவர் சில நேரம் சற்று கோபமாகவும், சில நேரம் பாசமாகவும் பார்த்துக்கொண்டு ஒருவித குழப்பத்துடனேயே அமர்ந்திருந்தோம்.

திடீரென உள்ளுக்குள் அரவம் கேட்டது..

* * *
காமினி ஜன்னலின் அருகே படுத்திருந்தாள். அவளது முகத்தில் மாஸ்க் போன்று எதோ ஒப்புக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் இணைத்து சில ஒயர்கள் அவளது கையில் ஒட்டப்பட்டிருந்தன.
ஸ்டெதஸ்கோப்பை மாட்டிக்கொண்டு அந்த டாக்டர் வெளியே வந்தாள்.

டாக்டர் அகன்றதும் காமினி எழுந்து தன் முகத்தில் இருந்த மாஸ்கை அகற்றிவிட்டு, வயர்களையெல்லாம் பிடுங்கி விட்டு அருகிலிருந்த கண்ணாடி ஜன்னலைத் திறந்து வெளியே குதித்தாள்.

அவளது கையில் சிறிய பொட்டலம் இருந்தது. அதை கையில் பிடிக்க முடியாமல் சிரமத்துடன் பிடித்திருந்தாள்.

திடீரென ஹேண்ட்ஸ் அப் என்றான் சிவா. அவனுக்கு பயப்படுவதைப் போல நடித்த காமினி சிறிது சிறிதாக வாசற்பக்கத்துக்கு நகர்ந்தாள். எப்படியாவது இந்த பொட்டலத்தை பரந்தாமனிடம் சேர்த்துவிட வேண்டும். அப்படி சேர்த்து விட்டால் அவளுக்கு கிடைக்கப்போகும் பரிசை நினைத்து அவள் மனம் பரபரத்தது.

"ஏய் எங்க நகர்ர நில்லு..நில்லு.. ஏய் சொல்றேன் இல்லை நில்லு"

அவள் அவனை அசட்டை செய்து நடந்து கொண்டே இருந்தாள். ஓட எத்தனித்தாள்.

“ஸாரி.. எனக்கு வேற வழி தெரியலை” என்று காமினியின் நெற்றிப் பொட்டில் துப்பாக்கியை வைத்தான் சிவா.

"ஏண்டா என்னை சுடனும்னு முடிவு பன்னிட்டே இல்லை..நீயே இப்படி பன்னுவேன்னு நான் நினைக்கலைடா. நீ பேருக்குதான் போலிஸு உண்மைலயே போலீஸுன்னு நினைப்பா உனக்கு. எப்பவும் எனக்கு சப்போர்ட் பன்னுவ இப்ப இப்படி காலை வாரிவிடரியே...சுடுடா சுடு" என்றாள்.

அவன் சிரித்துக் கொண்டே துப்பாக்கியை கீழே நழுவவிட்டு என்ன சொல்வது என்றே தெரியாமல் முழித்தான்.

அவள் வேகமாக பரந்தாமனிடம் ஓடினாள்..

“காமினி... வெல்டன்.. எப்படியோ போலீஸ் கண்ல மண்ணைத் தூவிட்டு இந்த டைமண்டைக் கொண்டு வந்துட்டியே” என்று பாராட்டினார் பரந்தாமன்.

சரி இதைக் கொண்டு வந்து கொடுத்தா எனக்கு பிரைஸ் தர்ரேன்னு சொன்னீங்களே கொடுங்க என்றாள்.

அவரும் சிரித்துக் கொண்டே அவளுக்கான பரிசைக் கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட காமினி. வேகமாக சிவாவிடம் ஓடினாள்.

"ஏய் வர்ஷினி இங்க வாவேன்" என்று வர்ஷினியையும் அழைத்தாள்.

அவளுக்கு பரந்தாமனிடம் இருந்து கிடைத்த பரிசை மூவரும் சமமாக பங்கிட்டு எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்துச் சிரித்தனர்.

* * *
உண்மையில் அதுதான் சரியோ..அவர்களது செய்கையில் லாஜிக் இல்லாவிட்டாலும். பாசம் இருக்கிறது, பிரியம் இருக்கிறது, விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இருக்கிறது. கெட்டதை உடனேயே மறந்துவிடும் நல்ல குணம் இருக்கிறது. இவர்களிடம் இருந்து கற்றுக்கொள்வதற்கு நிறைய விசயம் இருக்கிறது. இவர்களிடம் நாம் எதையும் கற்றுக்கொள்ளாமல் இவர்களுக்கு வாழக்கற்றுக் கொடுக்கும் பொறுப்பு நம்மிடம் இருப்பதாக நினைக்கிறோமோ!

என் மனம் எதை எதையோ நினைத்துக் குழம்பியது. மனம் குழம்புகிறதா இல்லை தெளிவடைகிறதா என்பதைக் கூட சரியாக கணிக்க இயலாத மனநிலையில் நான் இருக்கிறேன். உண்மையில் இது தெளிவல்லவா!

"என்னப்பா ரொம்ப கஸ்டமா இருக்காப்பா"

திடீரென அம்மா மவுனம் கலைத்து என்னிடம் பேசி என் நினைவுகளையும் கலைத்தார்.

"இல்லம்மா இப்ப நான் நாம சண்டை போட்டுக்கிட்டத பத்தி யோசிக்கவே இல்லைம்மா. காலைல இருந்து அதுங்க சண்டை போட்டதை விளையாண்டதை எல்லாம் பார்த்துட்டே இருக்கேம்மா. மனசு கொஞ்சம் நார்மலான மாதிரி இருக்கும்மா. இப்ப கூட அதுங்க மூனும் (வர்ஷினி, சிவா-என் அக்கா குழந்தைகள்)  தீபாவளி துப்பாக்கிய வெச்சி அப்பா கூட சேர்ந்து எதோ விளையாண்டுகிட்டு இருந்தாங்க"

"என்னப்பா சொல்ற நீ அதுங்க எதோ வெட்டியா விளையாண்டு பொழுத போக்கிட்டு இருக்குங்க. என்ன பன்றதுன்னே தெரியாம?"

"அப்படி இல்லம்மா உண்மைல அவங்க பன்றது வெட்டி வேலை இல்லம்மா. அவங்க செயல் உணர்த்தற விசயம் நிறைய இருக்கும்மா. நாமதான் அதை எதுவுமே புரிஞ்சுக்காம. சண்டை போட்டு வெட்டியா பொழுதை போக்கிட்டு இருக்கோம் இப்ப"

அங்கு சிறிது நேரம் மவுனம் நிலவியது.

"சரிப்பா இப்ப என்ன பண்ணலாம்ங்கிற"

"இனியும் இவங்ககிட்ட நியாயம் இதுதான்னு பேசி நேரத்தை ஓட்ட வேணாம்மா. நியாயமோ அநியாயமோ..சரி சரின்னு விட்டுக்கொடுத்து பேசுவோம். ஒரு வயித்துல பொறந்துட்டு இப்படி நாங்க ரெண்டு பேரும் சண்டை போட்டுக்கறது எனக்கு பிடிக்கலைம்மா. அவளும் அதே உணர்வுலதான் இருக்கா. ஆனா பேசும் போது ஈகோ பாத்துக்கிட்டு. கொதிச்சு கோவமா பேசி சண்டை முத்திடுது. வேணாம்மா இதெல்லாம்" என்றேன்.

அம்மாவும் நான் பேசிய பேச்சுக்கு ஆமோதிப்பது போல பார்த்தார்.

"அப்பா அப்பா இன்னிக்கு விளையாட்டுல தாத்தா ஒரு போட்டி வெச்சாரு அதுல நான் ஜெயிச்சுட்டேன்பா. தாத்தா எனக்கு டைரி மில்க் பிரைஸா கொடுத்தாருப்பா. அதை மூனா பிரிச்சு மூனு பேரும் எடுத்துக்கிட்டொம்பா."

என்றாள் ஓடிவந்து என் மடியில் அமர்ந்த என் மகள் காமினி.

39 comments:

  1. நன்றிங்க ரமேஷ் படிச்சீங்களா கதையை..எப்படி இருக்கு..

    ReplyDelete
  2. வித்தியாசமா இருக்கு! குழந்தைகளை மையமா வைத்து கதை! அருமை! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  3. நன்றிங்க எஸ்.கே

    ReplyDelete
  4. இப்படி கூட எழுதலாமா ..?
    ஆனா வாழ்த்து சொல்ல மாட்டேன் ..
    ஹி ஹி . நானும் கலந்துகரதால ..!!
    அப்புறம் சண்டை தீர்ந்துடுட்சுங்களா ..?

    ReplyDelete
  5. கதை பத்தி சொல்லனும்னா இன்னும் கொஞ்சம் குழப்புற மாதிரி இருந்துச்சு ..
    ஆனா மேட்டர் ஓகே ..!! இரண்டு தடவை படிச்சேன்..!! குழந்தைகள் வெளயாட்டா சண்டை போடுறாங்க ., அதுலயே அவரு கேட்ட விசயங்கள சொல்லி முடிச்சிட்டீங்க ..!!

    ReplyDelete
  6. மூனு பேருக்கு பரிசு உண்டு செல்வா..இந்தக் கதைல வர மாதிரியே மூனு பேரும் பகிர்ந்துக்கலாம்..குழந்தைங்ககிட்ட இருந்து நல்ல பழக்கத்தை கத்துக்கோங்க செல்வா..

    ReplyDelete
  7. வாழ்த்துக்கள் ரமெஷ். நல்ல கதை

    ReplyDelete
  8. அவளுக்கு பரந்தாமனிடம் இருந்து கிடைத்த பரிசை மூவரும் சமமாக பங்கிட்டு எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் பார்த்துச் சிரித்தனர்.

    Touching... from childhood itself, we have been cultivated to share whatever one brings home.. particularly eatables. nice message

    என்னோட கதையை படிச்சிட்டு கமெண்டு போடுங்க.. இன்ட்லில ஒட்டு போடுங்க..
    நன்றி

    ReplyDelete
  9. குழந்தையாய் காமினி கதாபாத்திரம் - அருமை. வெற்றி பெற வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
  10. Kandippa padichu votu podarenga madhavan.

    Ungal valthukku nanringa chitra.

    ReplyDelete
  11. Kandippa padichu votu podarenga madhavan.

    Ungal valthukku nanringa chitra.

    ReplyDelete
  12. ரசிக்க முடியுது.. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  13. @appavi thangamani
    romba nanringa.
    Ana unga 'ennaipol oruvan' sirugadhaiya vidava. Nan romba rasichu padicha kadhai adhu.

    ReplyDelete
  14. ஒரு க்ரைம் சப்ஜெக்ட் கதையை, குழந்தைகளை வைத்து நகர்த்திய விதம் அருமை..! போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள்!

    -
    DREAMER

    ReplyDelete
  15. @dreamer
    Pottiyil vetri perano illiyo. Neenga paratnadhe andha sandhosatha kuduthiduchinga harish.

    ReplyDelete
  16. நல்லா இருக்கு ரமேஷ்.

    இப்ப அடுத்த வேலை என்னன்னா யாரு நடுவர்கள் அப்படின்னு கண்டுபிடிச்சு டீ, காபி, டிபன் வாங்கிக் கொடுத்துப் பரிசு நமக்கு வர மாதிரி ஏற்பாடு செய்ய வேண்டியதுதான். எனக்கு ஓரளவு ஐடியா இருக்கு யார் நடுவர்கள்னு:))

    ReplyDelete
  17. வெகு இயல்பான கதை ஓட்டம் வாழ்த்துகள்

    ReplyDelete
  18. @gopi ramamoorthy
    @arusuvai raj
    @muthu siva

    romba nanringa ..muthal muraiyai yenakku comment potrukkinga adhukku oru special thanks..

    ReplyDelete
  19. ரொம்ப நன்றிங்க அபி...இப்பவே படிக்கறேன் உங்க கதையை..

    ReplyDelete
  20. வாழ்த்துக்கள் ரமேஷ். நன்றாக இருந்தது

    ReplyDelete
  21. மிக மிக வித்தியாசமான சிந்தனை... தெளிவான நடை..

    போட்டிக்கான வரிகள் எது என்று தெரியாத அளவுக்கு இயல்பாக பொருந்தி இருந்தன,,,

    பரிசு பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  22. @கதிர்கா

    நன்றிங்க கதிர்கா.. தாமதத்திற்கு மன்னியுங்கள் கதிர்கா.. இவ்வளவு நாள் உங்கள் வாழ்த்தை கவனிக்காமல் விட்டுவிட்டேன்..

    ReplyDelete
  23. @பார்வையாளன்

    ரொம்ப நன்றிங்க.. வெற்றி பெறுவது கடினம் என்று எனக்கு புரிந்துவிட்டது.. பார்க்கலாம்.. அந்த 15 கதைல ஒன்னாவாவது வருதான்னு...

    ReplyDelete
  24. After a long time, I am reading tamil words. Really I am very much happy by reading this blog. You have described very well. Thanks for sharing.
    Buy domain India

    ReplyDelete
  25. It was just nice information sharing and its helpful for everyone.
    - water treatment company

    ReplyDelete
  26. I recently came across your article and have been reading along. I want to express my admiration of your writing skill and ability to make readers read from the beginning to the end.
    ecommerce lawyer

    ReplyDelete
  27. Pretty good post. I just stumbled upon your blog and wanted to say that I have really enjoyed reading your blog posts. Any way I'll be subscribing to your feed and I hope you post again soon. diamond for sale | internet marketing agency

    ReplyDelete
  28. This valuable editorial was very useful to read, I savored it completely. I'm about now to email it to my colleagues to permit them examine this too. cheap wedding dresses

    ReplyDelete
  29. This is a great inspiring article. I am pretty much pleased with your good work. You put really very helpful information. Keep it up. Keep blogging. Looking to reading your next post. maqui berry supplements | maqui berry antioxidants

    ReplyDelete
  30. I truly liked your incredible content. Please keep up the good work. Thank you very much !!!!
    internet defamation lawyer
    internet copyright lawyers

    Excellent post. I want to thank you for this informative read, I really appreciate sharing this great post. Keep up your work.

    ReplyDelete
  31. I must show my thanks to the writer just for rescuing me from such a crisis. As a result of looking throughout the world-wide-web and seeing thoughts which were not productive, I assumed my entire life was well over. Being alive devoid of the solutions to the difficulties you’ve resolved as a result of your entire site is a serious case, as well as the kind which could have in a negative way affected my entire career if I had not discovered the website. Your personal natural talent and kindness in dealing with almost everything was helpful. I’m not sure what I would have done if I hadn’t come upon such a point like this. I am able to at this point relish my future. Thanks so much for your high quality and effective help. I will not hesitate to propose your web site to any individual who needs to have counseling on this problem.sms marketing

    ReplyDelete
  32. I am speechless. This is a fantastic site and very engaging too. Excellent work! That’s not really much coming from an amateur publisher like me, but it’s all I could think after enjoying your posts. Not like other site. You really know what you’re talking about too. So much that you made me want to explore more joomla 1.6 themes
    vitamin d deficiency treatment

    ReplyDelete
  33. Took me time to read all the comments, but I really enjoyed the article. It proved to be Very helpful to me and I am sure to all the commenters here! It’s always nice when you can not only be informed, but also entertained!
    Copyright Infringement Lawyers

    ReplyDelete