குழந்தை வளர்ப்புங்கறது சாதாரன விசயம் இல்ல. அவங்களுக்கு என்ன தெரியும் என்ன சிந்திக்கறாங்கன்னு நமக்குப் புரியாததாலயே அது குழந்தை அதுக்கென்ன தெரியும்னு நம்மலா நினைச்சுக்கறோம். அப்புறம் குழந்தை நம்ம மூலமா இந்த உலகத்துக்கு வருதுங்கறதாலயே அதுக்கு உரிமையாளர் நாமதான்னு நினைச்சு அந்தக் குழந்தை மேல தேவையில்லாத அடக்குமுறை செய்யறதும்... நம்ம நிறைவேறாத ஆசைகளை நிறைவேத்திக்க கிடைச்ச ஆயுதமா பயன்படுத்திக்கறதுமா இருக்கோம். இதெல்லாம் நாம குழந்தையா இருந்தப்ப அதிகமாவே இருந்தது. இப்ப நம்ம தலைமுறை நிறையவே மாறிருக்குனு நினைக்கறேன். நம்ம குழந்தைகளை உணர்வுகள் உள்ள ஒரு தனி உயிரா மதிக்க ஆரம்பிச்சிட்டோம்னுதான் நினைக்கிறேன். அதைப்பத்திதான் சொல்லுது இந்த விஸ்வாசம்.
வாழ்க்கைய தன் போக்குல வாழ்ந்துட்ருக்க ஒரு முரட்டு கிராமத்து நபர, காதலிச்சு கல்யாணம் செஞ்சுக்கிட்ட ஒரு பொண்ணு. ஒரு பெண் குழந்தை பிறந்தப்புறம்... தன் கணவனோட முரட்டுத்தனத்தால அந்தக் குழந்தைக்கு ஏற்பட்ட ஒரு பாதிப்பக் கண்டு வெறுத்து போய் அவனைவிட்டு தன் குழந்தையோட பிரிஞ்சிடறா. திரும்ப அவன் தன் குடும்பத்தோட சேரனும்னு நினைக்கற போது.. தன் குழந்தைக்கு இன்னொரு ஆபத்து வருது. அது என்ன ஆபத்து? அதுல இருந்து தன் குழந்தையை எப்படி காப்பாத்தி ஒன்னு சேர்றாங்கன்றதுதான் இந்தப்படம்.
அஜித், நயன்தாரா அவங்க பொண்ணா அனிகான்னு மூனு பேரும் போட்டி போட்டு நடிச்சிருக்காங்க. வாலி, வில்லன், வரலாறு, மங்காத்தாக்கு அப்புறம் அஜித் இந்தப் படத்துல செமயா ஸ்கோர் பன்றார் தூக்கு துரையா... கிராமத்துல அலப்பறைய கொடுக்கும்போது, தன் பொண்ணு கிட்ட உண்மை சொல்ல முடியாம அவளோட அன்புக்காக ஏங்கும்போது, அவளோட சேர்ந்து வீட்டுக்கு தெரியாம குறும்புத்தனம் செய்யும்போது, அவளைப் பாதுகாக்க தவிக்கும்போது, கடைசியா அவ அப்பான்னு கூப்பிடறப்ப "இன்னொருக்கா" சொல்லும்மா என்சாமின்னு உருகும்போதுன்னு அசத்தலா இருக்கு அவரோட நடிப்பும் ஸ்க்ரீன் பிரசன்சும். அஜித் இந்தப்படத்துல "இஞ்ஜார்ரா" னு அடிக்கடி சொல்றார். அவ்லோ இயல்பா அழகா இருக்கு அது.
இமான் இசைல பாட்டெல்லாம் நல்லாருக்கு. குறிப்பா கண்ணான கண்ணே... சித் ஸ்ரீராம் உருக வைக்கிறார். அப்புறம் வானே வானே....
முதல் பாதில இலக்கில்லாம காட்சிகள் போகுது. இரண்டாம் பாதில விவேக் வர்ற சீன்லாம் யோசிக்காம வெட்டி வீசிடலாம். இப்படி சில குறைகள் இருந்தாலும். அதை எல்லாம் மறக்கடிச்சிடுது. பிள்ளை பாசம்.

Thank you for post and your blog. My friend showed me your blog and I have been reading it ever since.
ReplyDeleteTamil News | Tamil Newspaper | Latest Tamil News | Kollywood News
Thx dude
Delete