Search This Blog

Friday, August 06, 2010

கண்களின் மொழி






இன்று, முதன் முதலாய்
வார்த்தையில்லா
கவிதை படித்தேன்...
என்னவளின் சினுங்கல்கள்!

அவளைப் பார்க்கும் முன்வரை
என் இதயத்துடிப்பை
நான் உணர்ந்ததில்லை...

இப்போது என் நெஞ்சில்
கை வைத்தால்
உணர்கிறேன்..
அவளது இதயத்துடிப்பை!

படபடக்கும் அவள் கண்கள்
பேசும் மொழி புரிந்தால்
எழுதிவிடுவேன்..
அவளுக்கான கவிதையை
அந்த மொழியிலேயே!

18 comments:

  1. முதல் முயற்சியே அருமை தோழா,

    கவிதையை ரசிக்க தெரிஞ்சவனுக்கு , நிச்சயம் எழுதும் திறமையும் இருக்கும் என நிரூபித்துக்காட்டி இருக்குறீர் தோழரே...

    வாழ்த்துக்கள், இன்னும் நிறையா எழுதுங்கள்

    ..உற்சாகம் கொடுக்க காத்து இருக்கிறோம்...

    ReplyDelete
  2. நன்றி விஜய்..நீங்கள் (மைண்ட் வாய்ஸ்: இதைப் படித்த பிறகும் :D) உற்சாகம் கொடுக்க காத்திருக்கும் போது எனக்கு என்ன கவலை (மைண்ட் வாய்ஸ்: அதான நான் ஏன் கவலைப்படனும்..அதப்படிக்கிற...உங்க ஏரியாவாச்சே அது!) நான் நிச்சயம்....நிறைய எழுதுகிறேன்...

    ReplyDelete
  3. ரொம்ப நன்றி ரமேஷ்..உண்மையிலியே..நீங்களும் என்னை மாதிரியே நல்லவரு..

    ReplyDelete
  4. கவிதை நல்லா இருக்குங்க..
    தொடர்ந்து எழுதுங்க.. வாழ்த்துக்கள் :-))

    ReplyDelete
  5. நிச்சயம் எழுதுகிறேன்...வாழ்த்துக்கு நன்றி ஆனந்தி..

    ReplyDelete
  6. அன்பிற்கினிய ரமேஷ்..,

    கவித.. கவித..கவித.....

    நன்றாக உள்ளது.

    நன்றி..,

    பிரியமுடன் ரமேஷ்(நம்ம பேர்ல நிறைய பேர் இருக்காங்க ..சந்தோசம்)


    மரங்களோடு மனிதம் வளர்ப்போம்..

    S.ரமேஷ்.

    ReplyDelete
  7. அருமை அருமை அருமையிலும் அருமை அதனால் எனக்கு பெருமை சுப்பரா எழுதுங்க நண்பா

    ReplyDelete
  8. வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி இவன் சிவன்.

    ReplyDelete
  9. ரொம்ப நல்லா இருக்கு ரமேஷ்!!!

    ReplyDelete
  10. நன்றிங்க ஆவி...

    ReplyDelete
  11. ரெம்ப நல்லா வந்திருக்கு...

    //முதன் முதலாய்
    வார்த்தையில்லா
    கவிதை படித்தேன்...
    என்னவளின் சினுங்கல்கள்!//

    //படபடக்கும் அவள் கண்கள்
    பேசும் மொழி புரிந்தால்
    எழுதிவிடுவேன்.. //

    மிகவும் ரசித்தேன்.

    ReplyDelete
  12. மிகவும் நன்றி முனியாண்டி

    ReplyDelete
  13. நீங்க இருப்பது பெங்களூரா?பெண்களூரா?
    கலக்கறீங்களே?
    வார்த்தையில்லா
    கவிதை படித்தேன்...
    என்னவளின் சினுங்கல்கள்!
    அப்படி போடு(ங்க)

    ReplyDelete
  14. ஹஹ்ஹா...உண்மைதான்...செந்தில்..பெண்களூருதான்...

    வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி செந்தில்....

    ReplyDelete
  15. நீங்கள் எழுதிய கவிதை சூப்பர். முதல் கவிதை மாதிரி தெரியவில்லை .. இதயத்தில் இருந்து இடுகையில் வந்ததோ ????/

    ReplyDelete
  16. ஹஹ்ஹா பாராட்டுக்கு நன்றி ஸ்ரீ...

    ReplyDelete