Search This Blog
Tuesday, August 10, 2010
பேனிக் ரூம் - திரை விமர்சனம்
அமெரிக்க திரில்லர் பட இயக்குனர் டேவிட் ஃபிஞ்சரின் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான ஆங்கிலத்திரைப்படம் Panic Room. நேற்று எதேச்சையாக இந்தப்படத்தைப் பார்த்தேன். ரொம்ப நார்மலான மூவியாதான் ஆரம்பிக்கும்..அப்புறம் போகப் போக..............பயங்கர விறுவிறுப்பு...
சமீபத்தில் விவாகரத்தான மெக் ஆல்ட்மேன் (ஜூடி ஃபோஸ்ட்டர்) என்ற பெண்மணியும் அவரது 11 வயது மகள் சாராவும் புதிதாக ஒரு பெரிய வீட்டை வாங்குவதற்காக வந்து பார்ப்பதில் இருந்து ஆரம்பிக்கிறது படம். அந்தப் பெரிய வீட்டில் அவசர காலத்தில் பாதுகாப்பாக இருப்பதற்காக ஒரு இரகசிய அறை இருக்கும். அந்த அறைக்குள் யாரும் உள் நுழைய முடியாதபடி அமைப்புகள் இருக்கின்றன. மேலும் வீட்டில் உள்ள அனைத்து பகுதிகளையும் அங்கிருந்தே கண்காணிக்கும் வகையில் வீடியோ சர்வைலன்ஸ் வசதியும் அதில் இணைக்கப்பட்டுள்ளது. அந்த அறைக்குள் உள்ளே யாராவது நுழைந்துவிட்டால் உள்ளே இருப்பவர்கள் நினைத்தால் மட்டுமே அதனைத் திறந்து வெளியே வர முடியும்..வெளியே இருந்து யாரும் உள்ளே நுழைவதற்கு எந்த வழியும் இல்லை.
அந்த இரகசிய அறைக்காகவே அவர்களுக்கு அந்தப் பெரிய வீடு பிடித்து விடுகிறது.. உடனே அதனை வாங்கி குடியேறி விடுகின்றனர். அவர்களுக்கான பிரச்சினை அடுத்த நாள் தூங்கி எழுவதற்கு முன்னரே காத்திருக்கிறது. அதிகாலையில் மூன்று கொள்ளையர்கள் அந்தப் பெரிய வீட்டில் இருக்கும் விலை மதிக்க முடியாத சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதற்காக வீட்டுக்குள் நுழைந்துவிடுகின்றனர். அந்த மூவரில் ஒருவன் அந்த வீட்டை வடிவமைத்தவன். அவனுக்கு அந்த இரகசிய அறை உட்பட அனைத்து பகுதிகளும் நன்கு தெரியும். அவர்கள் தேடி வந்த விலை மதிக்க முடியாத சொத்து இருப்பதும் அந்த இரகசிய அறைக்குள்தான்.
கொள்ளையர்கள் வீட்டுக்குள் புகுந்து விட்டார்கள் என்பதை அறிந்த மெக் ஆல்ட்மேன் சமயோகிதமாக செயல்பட்டு தன் மகளுடன் அந்த அறைக்குள் நுழைந்து விடுகிறார். கொள்ளையர்கள் அந்த அறையை எப்படி திறக்க வைக்கின்றனர். அவர்களிடம் இருந்து அம்மாவும் மகளும் தப்பினார்களா என்பதை மிகவும் விருவிருப்பாகச் சொல்லி இருக்கின்றனர்.
அதுவும் மெக் ஆல்ட்மேன் போலீசுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக தனது செல்போனைத் தேடுவார்...அப்போதுதான் அது அந்த அறைக்கு வெளியே விட்டு வந்ததை உணர்வார்....உடனே வீடியோ சர்வைலன்ஸைப் பார்த்து கொள்ளையர்கள் எங்கிருக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொண்டு....செல் போனை வெளியே சென்று எடுத்துக்கொண்டு மீண்டும் அந்த அறைக்குத் திரும்புவார் பாருங்கள்......விருவிருப்பின் உச்சகட்டம் அந்தக் காட்சி.. நான் மிகவும் இரசித்துப் பார்த்த காட்சி அது. அவ்வளவு கஸ்டப்பட்டு செல்போனை எடுத்து வந்த பிறகு பார்த்தால்..அந்த அறைக்குள் சிக்னல் கிடைக்காது. வேறு என்ன செய்யலாம் என தாயும் மகளும் குழம்பிக்கொண்டிருப்பர். என்ன செய்யப் போகிறார்கள் என்று நாமும் அவர்களோடே சேர்ந்து யோசித்துக் கொண்டிருப்போம்...
இதற்கிடையே அந்த 11 வயது சிறுமிக்கு கடுமையான நீரிழிவு நோய் இருக்கும்.....சில மணி நேரங்களுக்கு ஒரு முறை போட வேண்டிய ஊசி மருந்தைப் போடவில்லை என்றால்..அவர் கோமா நிலைக்கு சென்று இறந்துவிடவும் வாய்ப்புண்டு...நேரம் அதிகமானதால் அந்தச் சிறுமி சிறிது சிறிதாக அபாயகட்டத்தை அடைந்துவிடுவார்....அவர் பிழைத்தாரா?....அந்தக் கொள்ளையர்கள் தேடி வந்த பொருள் என்ன? அதனை அவர்கள் அடைந்தார்களா? என்பதை அறிய வாய்ப்பு கிடைத்தால் இந்தப் படத்தைப் பாருங்கள்....
ஒரே வீட்டுக்குள் ஒரே இரவில் நடக்கும் கதை என்றாலும் விறுவிறுப்புக்கு சிறிதும் பஞ்சமில்லை. விறுவிறுப்பான படம் பார்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இந்தப் படத்தை நிச்சயம் பார்க்கலாம்.....
Subscribe to:
Post Comments (Atom)
Downloading it! :)
ReplyDeleteவருகைக்கு நன்றி மகேஷ்....
ReplyDeleteவிமர்சனம் நன்றாக உள்ளது! நன்றிகளும் வாழ்த்துக்களும்!
ReplyDeleteகதையை மட்டும் சொல்றீங்க,உங்க பார்வை,விமர்சன்ம் வேணும்.அதே போல் விறுவிறுப்புக்கு சின்ன ர போட்டிருக்கீங்க.பிளாக் லே அவுட் நல்லாருக்கு
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி எஸ்.கே
ReplyDeleteஉங்கள் கருத்துக்கு நன்றி செந்தில்...நான் இதுக்கெல்லாம்..புதுசு..இனிமே பழகிக்கறேன்..சின்ன ர கவனக்குறைவா போட்டுட்டேன்..திருத்திட்டேன்...
நல்லா விருவிருப்பா நீங்க சொல்லி இருக்கீங்க இந்த பதிவுல அந்த படத்த பற்றி, நானும் பார்த்து இருக்கிறேன் அந்த படத்தை ...உண்மையாகவே நல்ல திரில்ளீர் படம் தான் ரமேஷ்
ReplyDelete