அன்புடன் ஆனந்தி அவர்கள் எழுதிய ஒரு தொடர்பதிவின் பின்னூட்டத்தில் என்னை ஏன் இந்த தொடர்பதிவு ஆட்டத்துல எல்லாம் சேத்துக்க மாட்டேங்கறீங்கன்னு விளையாட்டா கேட்டிருந்தேன்..அதனை அவர் நியாபகம் வெச்சிக்கிட்டு மறக்காம என்னை இந்த தொடர்பதிவுக்கு அழைச்சிருக்காங்க...அவர்களுக்கு எனது உளம் கனிந்த நன்றிகள்........
1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
பிரியமுடன் ரமேஷ்
2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?
நான் பள்ளியில் பயின்ற காலத்தில் இருந்து என்னுடன் எப்போதும் எனது பெயரிலேயே இரண்டு மூன்று மாணவர்கள் படிப்பார்கள்...எனது பெயர் எனக்கு மிகவும் பிடிக்கும்...ஆனால் இப்படி தனித்த அடையாளம் ஏதுமின்றி இருப்பதை நான் விரும்பாமல் இருந்தேன்...பின்னர் கல்லூரி வந்து சேர்ந்த பிறகும் இதே பிரச்சினை இருந்தது...நண்பர்களுக்கு மின்னஞ்சல் செய்தால், குறுஞ்செய்தி அனுப்பினால் அது எந்த ரமேஷிடம் இருந்து வந்தது என்று நண்பர்கள் குழம்பினர் (பெரும்பாலும் மொபைல் நம்பரையோ, மின்னஞ்சல் முகவரியையோ பார்க்காமலே அவர்களாக ஒரு ரமேஷை முடிவு செய்து கொண்டு....நீ அனுப்புன மெயில் சூப்பர்டா மச்சி..என்று இன்னொரு ரமேஷைப் பாராட்டிக்கொண்டு இருந்தனர்!!!!!! பாராட்டு கசக்கவா செய்யும்..அவர்களும் கமுக்கமாக இருந்து விடுவார்கள்...எனக்கு கடுப்பா இருக்கும்) அதனால் மின்னஞ்சல், குறுஞ்செய்தி அனுப்பும் போது என்னை தனித்து காட்ட..என் பெயருக்கு முன்னால் பிரியமுடனை சேர்த்து அனுப்பினேன்...அது நல்லாவே ஒர்க் அவுட் ஆச்சு...மற்ற ரமேஷ்களிடம் இருந்து தனித்து தெரிய ஆரம்பித்தேன்...அதனால்தான்..அந்தப் பெயரை எனது பதிவிற்கு அப்படியே பயன்படுத்திவிட்டேன்....
அச்சச்சோ கொஞ்சம் பெருசா வந்திடுச்சே பதில்..இது எத்தனை மார்க் கேள்வின்னு வேற தெரியலையே.....!!
3 )நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி?
அதற்கு மதராசபட்டினம் திரைப்படமே காரணம்...ஆமாம்...அந்தப் படத்தைப் பார்த்துவிட்டு அதன் பாதிப்பில் அன்று இரவே, இரவோடு இரவாக எனது வலைப்பதிவைத் துவக்கி...அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதி வெளியிட்டேன்...
4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
பதிவை வெளியிட்டவுடனேயே திரட்டிகளில் அதனை வெளியிடுவேன்...நேரம் கிடைக்கும் போதெல்லாம்..பதிவுலக நண்பர்களின் படைப்புகளைப் படித்து அவர்களுக்கு பின்னூட்டம் இடுவேன் (இதனை நான் பிரபலமடையனும்ங்கற காரணத்துக்காக செய்யலை...ஆனா..இதனால என் வலைப்பதிவு பிரபலம் அடையுதுங்கறது...உண்மை).
5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்?அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?
சொந்த விஷயங்கள் சிலது பகிர்ந்துக்கனும்னு எண்ணம் இருக்கு...இப்பதான வந்திருக்கேன்...கொஞ்சம் என்னைப்பற்றிய இயல்பான விசயங்கள் நண்பர்களுக்குப் புரிந்த பிறகு எழுதினால் அது சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்...
6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
நண்பர்களைச் சம்பாதிப்பதற்காகவும்.....எனது எழுத்துக்கான அங்கீகாரத்திற்காகவும்.....
நமது எழுத்துக்களை...உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் வந்து படிக்கிறார்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம் இல்லையா......
7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
பல வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் என் சொந்தக்காரர்களாக இப்போது ஆகிவிட்டார்கள்..அதனால் அவர்களின் பதிவுகள் எல்லாம் என் சொந்தம்தான்......ஆனால் எனக்கு ஒரே ஒரு வலைப்பதிவுதான்...
8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?
இந்த கேள்வி எனக்குப் புரியவே இல்லைங்களே....என்ன கேக்கறீங்க நீங்க...(!!!!!!!)
(பத்துக்கு ஒன்பது கேள்விக்கு சரியான வடை சாரி விடை கொடுத்தாலே ஜாக்பாட் கிடைச்சுடுமான்னு வேற தெரியலையே....)
9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்பு கொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி..
படைப்பாளி என்ற பதிவர்தான் என் முதல் பதிவான மதராசபட்டினம் விமர்சனத்தைப் பாராட்டினார்...அவர் Wordpress இல் வலைப்பதிவு வைத்திருக்கிறார்... "அருமையான விமர்சனம் நண்பா..." என ரத்தினச் சுருக்கமாகப் பாராட்டி இருந்தார்...எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது...அப்புறம் நிறைய பேர் என் பதிவுக்கு வந்து என்னைப் பாராட்டுகிறார்கள்..திட்டுகிறார்கள்....ஹே நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்னு கத்திக்கிட்டே..பதிவுலக ஜீப்ல தொத்திக்கிட்டேன்...
10. கடைசியாக----விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...
என்னைப்பற்றி நானே சொன்னால் நல்லா இருக்காதுங்க...ஆனா...நான் பதிவரா இருந்தா..என் மரணத்துக்குப் பிறகும் உலகுக்கு என்னைப்பற்றி யாருக்கேனும் தெரியும்....என் எழுத்துக்களை எனக்குப் பிறகும் யாரேனும் படிப்பார்கள்..குறைந்த பட்சம் என் சந்ததியினராவது......என் வலைப்பதிவைப் படித்து என்னைப்பற்றி புரிந்து கொள்வார்கள், மகிழ்வார்கள்....என்ற நினைப்பிலேயே நான் பதிவை எழுதுகிறேன்....
இந்தப் பதிவைத் தொடர்வதற்கு நண்பர் பதிவுலகில் பாபுவை பிரியமுடன் அழைக்கிறேன்...
வாய்ப்பளித்த நல் உள்ளத்துக்கு மீண்டும் நன்றி கூறி வடை சாரி விடைபெறுகிறேன்..நன்றி வணக்கம்.....
இப்படிக்கு
பிரியமுடன்
ரமேஷ்
:))
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி. பெயர் காரணம் நல்லா இருந்துச்சு.
என்ன ஒரே வடையா இருக்கு.....
ReplyDeleteவருகைக்கு நன்றி பாலபாரதி...
ReplyDeleteநல்லா பாருங்க ஜெட்லி...ரெண்டு வடை இருக்கும்...
பிரியமுடன் ரமேஷ்,
ReplyDeleteபெயர்க்காரணமும், பதில்களும் யதார்த்தம். தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.
ஸ்ரீ....
வருகைக்கு நன்றி...கண்டிப்பாக எழுதுகிறேன்....ஸ்ரீ
ReplyDeleteநான் பள்ளியில் பயின்ற காலத்தில் இருந்து என்னுடன் எப்போதும் எனது பெயரிலேயே இரண்டு மூன்று மாணவர்கள் படிப்பார்கள்..
ReplyDelete//
பள்ளிக்கெல்லாம் போயிருக்கீங்களா வாத்தியாரே.. நமக்கு தான் அந்த குடுப்பினை இல்லாம போச்சு..
நல்ல பதில்கள் ரமெஷ்.
ReplyDeleteநான் உங்கள் பெயரால் சில சமயம் குழம்புகிறேன். இப்பொழுதும்.
பிரியமுடன் வஸந்த், சிரிப்பு போலீஸ் ரமெஷ் - காம்பினேஷனா இருக்கற்து காரணமாக இருக்கலாம்.
பிறகு, பின்னூட்டம் போடும் போதும் “பிரியமுடன் வஸந்த்” என்று போடுங்கள், அங்கும் குழம்பிவிடுகிறேன்
அச்சச்சோ கொஞ்சம் பெருசா வந்திடுச்சே பதில்..இது எத்தனை மார்க் கேள்வின்னு வேற தெரியலையே.....!!
ReplyDelete//
இந்த பதிலுக்கே பாஸ் மார்க் தான்..
//பின்னூட்டம் போடும் போதும் “பிரியமுடன் வஸந்த்” என்று போடுங்கள், அங்கும் குழம்பிவிடுகிறேன்
ReplyDeleteஎன்னங்க அருன் இப்பயும் குழம்பிட்டிங்க போல...நான் பிரியமுடன் ரமேஷ்னு போடறேங்க சரியா...இப்பவே என் பிளாக்கர் பெயரையும் பிரியமுடன் ரமேஷ்னே மாத்திடறேன்...
இரவே, இரவோடு இரவாக எனது வலைப்பதிவைத் துவக்கி...அந்தப் படத்திற்கு விமர்சனம் எழுதி வெளியிட்டேன்...
ReplyDelete//
ராவோடு ராவா தான் சுதந்திரமும் வந்திச்சாம்... உங்களுக்கும் அப்படிதான் ஞானம் வந்திச்சுன்னு சொலுங்க..
//என்னங்க அருன் இப்பயும் குழம்பிட்டிங்க போல...நான் பிரியமுடன் ரமேஷ்னு போடறேங்க சரியா...இப்பவே என் பிளாக்கர் பெயரையும் பிரியமுடன் ரமேஷ்னே மாத்திடறேன்...//
ReplyDeleteஆகா, மறுபடியும் குழம்பிட்டேனா. தயவு செய்து மாத்திடுங்க பாஸ் :)
மாத்திட்டேங்க அருண்...இந்த பதில்லயே...பாருங்க..மாறி இருக்கும்..பேரு..
ReplyDeleteஅச்சச்சோ கொஞ்சம் பெருசா வந்திடுச்சே பதில்..இது எத்தனை மார்க் கேள்வின்னு வேற தெரியலையே.....!///
ReplyDeleteஅது ஒரு மார்க் கேள்வி அதுக்கு போய் 5 மார்க் தேவையான பதில் எழுதி வைத்து இருக்கீங்க
அப்படியா...செளந்தர்...எதோ...இவ்வளவு கஷ்டப்பட்டு எழுதிருக்கானேன்னு ஒரு மார்க் (ஓட்டு) குடுத்திடுங்களேன்...
ReplyDeleteஎனக்கு பாஸ் மார்க் கொடுத்து..பாஸாக்கிவிட்ட..ஜெயந்துக்கு (வெறும்பய) நன்றி....
ReplyDelete:-))))
ReplyDelete:-))
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள் என் பெயர் தோழா
ReplyDelete//என் எழுத்துக்களை எனக்குப் பிறகும் யாரேனும் படிப்பார்கள்..குறைந்த பட்சம் என் சந்ததியினராவது......என் வலைப்பதிவைப் படித்து என்னைப்பற்றி புரிந்து கொள்வார்கள், மகிழ்வார்கள்....//
ReplyDeleteஇது ரொம்ப சரி ரமேஷ், அதான்..நான் பெரும்பாலும் என் அனுபவங்களையே எழுதுறேன். நம்ம பசங்க வந்து படிக்கட்டும்...:)
///அச்சச்சோ கொஞ்சம் பெருசா வந்திடுச்சே பதில்..இது எத்தனை மார்க் கேள்வின்னு வேற தெரியலையே.....!!///
ReplyDeleteஇதெக்கெல்லாம் கவலைப் படாதீங்க..., என் பதிவுகள பாருங்க ரொம்ப நீளமாருக்கும்..., என்ன கொஞ்ச திட்டுவாங்க..அதுக்கெல்லாம் கவலைப் படக்கூடாது...
பதில்கள் அருமை.
ReplyDeleteஹே நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்னு கத்திக்கிட்டே..பதிவுலக ஜீப்ல தொத்திக்கிட்டேன்...
ReplyDelete.... very nice answers! :-)
நல்ல பதில்கள்
ReplyDeleteஜெய்லானி, ஜெய், ரமேஷ் (நாம நல்லவங்கன்னு பேர பாத்தே தெரிஞ்சுக்குவாங்க இல்லையா..நீங்க தனியா வேற சொல்லி இருக்கீங்களே :)), ஸ்டார்ஜன், மகேஷ்
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க
வருகைக்கு நன்றிங்க சித்ரா...
ReplyDeleteநாந்தான் உங்கள பாராட்டின முதல் நபரா...?கேக்கவே மன்னிக்க பாக்கவே...இல்ல படிக்கவே....(இப்படித்தான் நம்மள புகழ்ந்தீங்கனா ஓவர் எமோசனல் ஆகிடுவேன்..ஹீ..ஹீ..)ரொம்ப சந்தோசமா இருக்கு தோழா..இப்போதான் பார்த்தேன் சேலமா நீங்க...?நம்ம ஊரு பார்ட்டி வேற..ஹ்ம்ம் கலக்கு..
ReplyDeleteஎழுத்துக்கள் இனிமை..மேலும் மேலும் கலக்கு,கலக்குன்னு கலக்க வாழ்த்துக்கள்..
நல்ல கேள்விகள் நல்ல பதில்கள்... இந்த தொடர் பதிவு ஒரு மார்கமாத்தான் போயிட்டு இருக்கு...
ReplyDeleteரொம்ப ரொம்ப நன்றிங்க ரமேஷ்.. இவ்ளோ சீக்கிரம் போட்டுட்டீங்க..
ReplyDeleteவாழ்த்துக்கள்.. இருங்க படிச்சிட்டு வரேன்..
(லேட்டா வந்ததுக்கு சாரி )
வருகைக்கு நன்றிங்க ஆனந்தி...உங்களதான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்...
ReplyDeleteஅடடா.. பெயர் காரணம் சூப்பர்...
ReplyDelete//அச்சச்சோ கொஞ்சம் பெருசா வந்திடுச்சே பதில்..இது எத்தனை மார்க் கேள்வின்னு வேற தெரியலையே.....!!//
ஒன்னும் பிரச்சினை இல்ல.. அட்ஜஸ்ட் பண்ணிக்கறோம்.. சும்மா கிண்டல் பண்றேங்க..
மதராசப்பட்டினம் வாழ்க.... (இல்லன்னா ரமேஷ் வந்திருக்க மாட்டிங்களே... அதான்)
//கொஞ்சம் என்னைப்பற்றிய இயல்பான விசயங்கள் நண்பர்களுக்குப் புரிந்த பிறகு எழுதினால் அது சரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என நினைக்கிறேன்...//
ReplyDeleteதாக்கமா....?? ஆஹா... எதா இருந்தாலும் சொல்லிப்புட்டு செய்யுங்கோ... :-))
//நமது எழுத்துக்களை...உலகெங்கிலும் இருக்கும் தமிழர்கள் வந்து படிக்கிறார்கள் அவர்களது கருத்துக்களை தெரிவிக்கிறார்கள் என்பது மிகவும் மகிழ்ச்சியான விசயம் இல்லையா.....//
கண்டிப்பா.. ரொம்பவும் மகிழ்ச்சியான விஷயம் தான்.. :-)
//பல வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்கள் என் சொந்தக்காரர்களாக இப்போது ஆகிவிட்டார்கள்//
ReplyDeleteஅருமையான பதில்..!!
//இந்த கேள்வி எனக்குப் புரியவே இல்லைங்களே....என்ன கேக்கறீங்க நீங்க...(!!!!!!!)///
அய்யய்யோ... உங்களுக்கு கொஸ்டின் பேப்பர் வரும் போது.. கோனார் உரை வரலியா??
அதான் பாவம் உங்களுக்கு தெரியல.. :-)
//(பத்துக்கு ஒன்பது கேள்விக்கு சரியான வடை சாரி விடை கொடுத்தாலே ஜாக்பாட் கிடைச்சுடுமான்னு வேற தெரியலையே....)//
ReplyDelete...குடுப்பாங்க.. குடுப்பாங்க... ஒன்னும் கவலை வேண்டாம்..
//ஹே நானும் பதிவர்தான்...நானும் பதிவர்தான்னு கத்திக்கிட்டே..பதிவுலக ஜீப்ல தொத்திக்கிட்டேன்..//
ஹா ஹா ஹா.. சிரிப்பா வருதுங்க..
//வாய்ப்பளித்த நல் உள்ளத்துக்கு மீண்டும் நன்றி கூறி வடை சாரி விடைபெறுகிறேன்..நன்றி வணக்கம்.....//
ReplyDeleteஅருமையா அருமை... என்னமா பேசிட்டு போயிருக்கார்...
அச்சச்சோ.. சொன்னா கேட்டீங்களா... பட்டி மன்றம் மாதிரி பேசாதீங்கன்னு..
இப்போ பாருங்க.. நா சாலமன் பாப்பையா மாதிரி பேசிட்டேன்.. :D :D
என் அழைப்பை ஏற்று, இவ்ளோ அருமையா தொடர் பதிவு எழுதினதுக்கு நன்றி.. :-)
ReplyDeleteஉங்க சேவை தொடரட்டும்.. வாழ்த்துக்கள்..
//வருகைக்கு நன்றிங்க ஆனந்தி...உங்களதான் எதிர்பார்த்துட்டு இருந்தேன்...//
ReplyDeleteஅதான் வந்து படிச்சு, கமெண்ட் போட்டுட்டேன்.. :-)))
என் பதில்களையும் பொறுமையா படிச்சு....தொடர்பதிவுக்கு தொடர்(ந்து) பின்னூட்டங்களை எழுதிய ஆனந்தி அவர்களுக்கு என் நன்றிகள்.....
ReplyDeleteவடிவேலு வசனம் டைட்டில்ல இருந்தாலும்... நல்ல அசத்தலான நடை.. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஅன்புடன் ஆர்.வி.எஸ்.
உங்க வருகைக்கும் வாழ்த்துக்கும் ரொம்ப நன்றிங்க ஆர்.வி.எஸ்
ReplyDeleteநல்ல பதில்கள்..
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க அன்பரசன்
ReplyDeleteநண்பா, கலக்குற போ ..... நீ பாஸ் ...இவ்வளவு எழுதியும் பாஸ் பண்ணிவிடுலனா எப்படி ?..
ReplyDelete